"போடா வெண்ணெ"
சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும்ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது கேட்கக்கூடிய தொடர் "போடா வெண்ணெ"!
சில திரைப்படக் காட்சிகளிலும்நகைப்பூட்டிகள் ஒருவரை ஒருவர் "போடாவெண்ணெ..." என்று திட்டிப் பேசிக்கொள்வதைக்கேட்டிருக்கிறோம்.
இந்த "வெண்ணெயின்" பொருள் என்ன?
எப்படி வந்தது இந்தச் சொல் வழக்கு?
"வெண்ணெய்" என்பது ஓர் ஊரின் பெயர்.
"திருவெண்ணெய் நல்லூர்" என்பது
இதன்முழுப்பெயர். இங்கு வாழ்ந்த பெருங்குண வள்ளல் சடையப்பர். தஞ்சம் என்று வந்தோரைத் தாங்கி ஆதரிப்பதில் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. ஈகைகுணத்தில் மூவேந்தரும் அவருக்கு நிகராக மாட்டார்கள். அவரது உதவியிலே பரிவும், கனிவும் கலந்திருக்கும்.
தமிழகமே அவர் புகழை அறிந்திருந்தது. சடையப்ப வள்ளலால் பெருமை பெற்றது வெண்ணெய்நல்லூர்.
கம்பன் என்கிற மகா கவிஞனை வாழ்வித்தவர் சடையப்ப வள்ளல். சடையப்பருக்குச் சாகா வரமளித்தவர் கம்பர்.
"சடையன் வெண்ணெயில் தஞ்சம்
என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்...'' என்பது கம்பர் கூறும் உவமை.
அக்காலத்தில் உதவி வேண்டி எவர்
வந்தாலும் மக்கள், "போம் ஐயா வெண்ணெய்'' என்பார்களாம்.
அதாவது, "உதவி வேண்டுமா? வெண்ணெய்நல்லூர் போங்கள்! அங்கே சடையப்பர் உள்ளார்"
என்பது பொருள்.
"போம் ஐயா வெண்ணெய்'' என்பதன் மெய்ப்பொருள் மறந்து போய்விட்டது.
பொருள் புலப்படாமலேயே அந்தச் சொல்லாட்சி மட்டும் மக்கள் நாவில் சிதைந்த பொருளில்,திரிந்த பொருளில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது!
வெண்ணெய்நல்லூரைக் குறித்த "வெண்ணெய்" என்னும் பெருமிதம் மிக்கசொல், பொருள்தெரியாததால், இழிந்த சொல் போல் "போடாவெண்ணெ"
என்று வழக்காறு பெற்றுள்ளது.

No comments:
Post a Comment