Thursday 21 June 2018

பங்கு - சாத்தானும் கடவுளும்

இரண்டு சின்ன பையங்க,
ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
ஒரு அமைதியான இடத்துக்கு போய் ரெண்டு பேரும் அத பங்கு போட்டுக்க நினைச்சாங்க.
பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன் சொன்னான். சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி. கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும் போது இரண்டு ஆரஞ்சுப் பழம் கீழ விழுந்துடுது.
கூடைல நிறைய பழம் இருந்ததனால, அத அவுங்க கண்டுக்கல. கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.
அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.
'''"உனக்கொன்னு, ''''''எனக்கொன்னு, '''''''உனக்கொன்னு, ''''''எனக்கொன்னு,
இத கேட்ட அவனுக்கு குடி போதை இறங்கிடுச்சு. அடிச்சிப் புரண்டு பக்கத்துல உள்ள ஆலயத்துக்குப் போயி அங்க இருந்த "பாஸ்டர்"கிட்ட சொன்னான். பாஸ்டர் தயவு செய்து என் கூட வாங்க. கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்.
பாஸ்டர்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்டதுனால அவன் கூட போனாரு.
சுடுகாட்டுல இருந்து சத்தம் வந்துச்சி.
"'''உனக்கொன்னு, '''''எனக்கொன்னு, '''''உனக்கொன்னு, '''''எனக்கொன்னு",
திடீர்ன்னு சத்தம் நின்னுச்சி.
ஒரு சத்தம் தெளிவா கேட்டுச்சி.
"ஆமா.... கேட்ல இருக்குற *இரண்டு யாருக்கு?...
"நாங்க இன்னும் சாகல, நாங்க இன்னும் சாகல"ன்னு சொல்லிக்கிட்டே, பாஸ்டரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடுனாங்க

No comments:

Post a Comment