Thursday, 21 June 2018

நோயற்ற வாழ்வு

குளிர்ந்த காற்று படும்போது உடலுக்கு குளுகுளுப்பு ஏற்படும்.குளிர்ந்த காற்று காது வழியாக செல்லும் போதே குளிர்ச்சி சளி பிடிக்க வைத்து விடுகிறது.சளி பிடித்தால் கபம் வந்துவிடும்.
உழவுத் தொழில் செய்பவர்கள் அதிகாலையில் வயலுக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அவர்களுக்கு சளி பிடிப்பது இல்லையே எப்படி? என்ற கேள்வி நமக்கு வரும்.
ஒன்றை கவனித்தால் இதற்கு விடை கிடைத்து விடும்.உழவர்கள் காதைச் சேர்த்து தலையில் தலைப்பாகைகட்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.
காதின் வழியாக குளிர்காற்று செல்வதை தடுக்கும் வகையில் தலைப்பாகை கட்டுவதன் பலன், பயன் அறிந்து நமது மூதாதையர்கள் செய்த ஏற்பாட்டை வியக்காமல் இருக்க முடியாது.
வாதம் 
உடலின் ஒரு பகுதி இயங்காமல் செயலற்றுப் போவது வாதம் ஆகும். மூளையின் ஒரு பகுதி செயலற்றுப் போவதால்; இரத்த ஓட்டம் குறைந்து நோய் தாக்குகிறது.
நரம்பு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது.வாத நோய் பரம்பரை நோயாக வருவதும் உண்டு. தனி நபருக்கு வருவதும் உண்டு.
ஒருவருடவாதம்,ஐந்து வருட வாதம் என பல வகைகளிலும் நோய் தாக்கி தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பப்பட வைத்து விடுகிறது.வரும் முன் காப்பதே சாலச் சிறந்தது.
பித்தம்
பித்தம் உடலில் அதிகமானால் தலை சுற்றல் .தலை வலி,வாந்தி,வயிறு புரட்டி வலித்தல் போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
உணவு பழக்கமே பித்தம் வருவதற்கு காரணம். அதிகமாக ‘டீ’ குடிப்பது,சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது போன்ற செயல்களால் பித்தம் வருகிறது.
பித்தத்தைப் போக்க இஞ்சி சாறு எடுத்து வடிகட்டி சிறிது நேரம் சென்றவுடன் தெளிந்த சாருடன் அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்..
மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ தொடர்ந்து குடித்தால் பித்தம் பக்கத்தில் கூட வராது.
நமது உடலில்உள்ள நோய்களுக்கு முக்கிய காரணம் வாதம், பித்தம், கபம், .தமிழ் மருத்துவத்தில் முக்குணமாக கூறப்பட்டுள்ளது.
வாதம்-துவர்ப்பு, புளிப்பு
பித்தம் -உப்பு ,கசப்பு
கபம்- இனிப்பு, கார்ப்பு
ஆறுவகைகளின் சுவையால் உணவின் அளவு கூடினாலும்,குறைந்தாலும் நோய் உண்டாகிறது.
நமது உடல் அமைப்பில் ஆறு நிலைகள் உள்ளன.அவை மந்திர நிலை,மூலாதாரம்,சுவாதிட்டானம் ,மணி பூரகம் ,அனாதகம்,விசுத்தி,ஆக்ஞை என்பன ஆகும்.
மந்திரநிலை -மாயமொழி, தன்னைக் கட்டுப்படுத்துவது
மூலாதாரம் – ஆதி அறிதல்,பிரணவம் அறிதல்
சுவாதிட்டானம் – அக்னிமுன்உறுதி எடுத்தல்
மணிபூரகம் -ஆன்மா வாழ சுவாசித்தல் (மூச்சு உள் இழுத்து விடுவது)
அனாதகம் – உடலில் உள்ள வெப்ப ஓட்டம்
விசுத்தி – அடிநாவில் உச்சரிப்பது
ஆக்ஞை – உடலைக் கட்டுப்படுத்துதல்
தன் மனதை கட்டுப்படுத்தி, ஆதி பிரணவம் அறிந்து அக்னி முன் உறுதி எடுத்து,சுவாசப் பயிற்சி எடுத்து,உடலில் உள்ள வெப்ப ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள ‘’ஓம் ‘’ என்ற மந்திரத்தை உச்சரித்து உடல் கட்டுப்பாட்டுடன் வாழ்வது வாழும் முறை என்று சித்த மருத்துவத்தில் வகுத்து வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஒருவர் வாழக்கற்றுக் கொண்டால் நோய் பிணி நெருங்கவே நெருங்காது.
ஊன்றுகோல்
ஆன்மா இளமையாக இருந்தாலும் உடல் முதுமை அடைந்து விடுகிறது.முதுமையின் காரணமாக உடல் நடுங்கும்போது ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. கைத் தடியாகவும் இருக்கலாம். நம்பிக்கை என்ற ஊன்று கோலாகவும் இருக்கலாம்.
வயதான போது அவர்கள் குழந்தை நிலை அடைந்து விடுவார்கள்.அந்த சமயத்தில் அவர்களை யாரும் கவனிக்காதது போன்ற மனப்பான்மை ஏற்படும்.வயோதிகம் காரணமாக நோய் தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கும்.அந்த சமயத்தில் தங்களை உற்சாகப்படுத்தி பொது நல சேவை ஏதாவது ஒன்று செய்தால் உற்சாகமாக இருக்கலாம்.
சீரண சக்தி வேறு ஏற்படாது.எதுவும் சாப்பிட முடியாத சூழ்நிலையில் ஒரு ஏக்கம் இருக்கும்.மிகவும் வயதானவர்கள் மசித்த உணவு,கரைத்த உணவுகளை சாப்பிட்டால் சீரணமும் ஆகும். வேறு நோய் தொல்லை கொடுக்காமல் இருக்கும்.
ஊறுகாய் 

இந்திய உணவுகளில் ஒன்று ஊறுகாய், எலுமிச்சம் பழம், மாங்காய், நார்த்தங்காய் ,நெல்லிக்காய்,மிளகாய்,இஞ்சி, பூண்டு, பலாக்காய் இப்படி தனித்தனியாக ஊறவைத்து ,காரம் சேர்த்து பல மாதங்கள்,வருடங்கள் கெடாமல் போட்டு வைத்துக் கொள்வார்கள்.
ஊறுகாய் தயாரிக்கும் காய்கள் எல்லாம் மருத்துவ குணம் உடையவை.இரத்தக் கொதிப்பு,இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ஊறுகாய் ஊற வைப்பதால் உப்பு அதிகம் சேர்க்க வேண்டி உள்ளது. கெடாமல் இருக்கவும் உப்பு பயன்படுகிறது. எனவே, ஊறுகாயில் உப்பு அதிகமாக இருக்கும். அதை நோய் உள்ளவர்கள் சாபிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment