ஒரு நம்ம பாட்டன் பூட்டன் காலத்துக்கதை :-
கொத்தனார் ஒருவர் சித்தாள் ஒருத்தியிடம் புலம்பினாராம்....
" நாம மாங்கு மாங்குன்னு கல்லையும் செங்கலையும் சாந்து சுண்ணாம்பையும் ...இதெல்லாம் கட்டி மாரடித்து ...நாளெல்லாம் கஷ்டப்பட்டு என்னகூலி கிடைக்குது..ம்ஹூம்!!!
இஞ்சினீயர் அப்பிடி சொல்லிக்கிட்டு ஒரு பய வரான் ...அவனுக்கு நம்மள மாதிரி இல்ல புள்ள......நெறைய சம்பளம் ...தெரியுமா?"
.....அப்போ இஞ்சினீயர் எப்படியோ ஏதோ வேலையா அந்தபக்கம்வந்தவர் ........கொத்தனார் கிட்ட போனார். "கொத்தனாரே இன்னிக்கு ஒமக்கு லீவு .....
ஆனா .... சம்பளம் உண்டு!!! நாஞ்சொல்லுற வேலையைமட்டும் செய்யும் நான் ஒமக்கு இன்னிக்கு கூலிய என்கையிலேருந்து கொடுத்துர்றேன்"ன்னாரு ........
கொத்தனார் மிரண்டுபோனாலும் மீசையில மண் படல்லங்கிற மாதிரி கெத்தா "என்னவேலை சொல்லுங்க''.... உடன செய்யறேன்னாரு.....
சித்தாளை ஒரு மொழு மொழு மண் பானையும் கோழி முட்டையும் கொண்டாரச்சொன்ன இஞ்சினீயர் "
.....இந்தமுட்டையை மண்பானை உச்சியில நிப்பாட்டிட்டு கூலிய வாங்கிட்டு போயிட்டே இரும்ன்னாறு.............
நம்ம கொத்தனார் வேலையில புலிதான் ஆனாக்கா இந்த "இங்க்லீஷ்" மொழியில சொல்வாங்களே "அனலைடிகல் திங்கிங் " அப்படீன்னு அது கைவராத சுத்தமான கிராமத்து "அக்மார்க்" ....மொட்ட பானைக்கு மேல வெச்சு வெச்சு பல மாதிரி .......முயற்சி செஞ்சி பாத்தாரு...
கோழி முட்டை சொம்மா "சொய்ங்" ன்னு கீழ .....கீழ விழுந்ததே தவுர மொட்டைப் பானைக்கு உச்சில கும்முன்னு நிக்கல...
....முட்டைய கீழ விழாம பிடிச்சு பிடிச்சி அவார்ட் வாங்கின கொத்தனாரு தவிச்சுத் தண்ணி தண்ணியா குடிச்சது தான் மிச்சம்....
மத்தியானம் சாப்பாட்டு வேளை சவால் விட்ட இன்ஜீனியரு நமட்டுச்சிரிப்புடன் வந்தாரு...... ..."என்ன கொத்தனார ......வேலை முடிச்சிட்டீரான்னாரு ?''
அலங்க மலங்க முழிச்ச நம்ம ஹீரோ ....(ஆமாங்க என் கதைல நான் சொல்ற ஆளு தான ஹீரோ ...இஞ்சினீயர் ....அவரு தான் வில்லன் ) கொத்தனார் ...
''ஒம்ம எழவெடுத்த கோழிமுட்டைய என்னமோ மந்திரம் போட்டு தந்துறிக்கிரீர்'' ...."அது எங்கையா மொட்டப்பான மேல நிக்கும்" ன்னாரு ...
இஞ்சினீயர் ..." இப்படித்தான் வே "ன்னு சொல்லி ஒரு கைப்பிடி ஈர மண்ணை மொட்டப்பான மேல வைச்சு கோழிமுட்டைய வெச்சாரு .......அது பாட்டுக்கு தேமேன்னு இருந்துச்சு .....
இப்ப பஞ்ச் டயலாக்-" இதான் வே எனக்கு சம்பளம் நூறு ஒமக்கு சம்பளம் வெறும் ஆறு " ன்னு முடிச்சாரு நம்ம வில்லன் இஞ்சினீயர். - நீதி :- அறிவே ஆற்றல் ....
ஏனுங்க கத எப்படி?!!!! ...

No comments:
Post a Comment