Saturday, 23 June 2018

'ஷோக் ' கான நாளு

'ஷோக் ' கான நாளு
“ வெளிச்ச சிரிப்புக் காரி
வெளக்கேத்தும் வீட்டுக்காரி
அலுத்து களைச்சு வரேன்
அம்மாடி நீ வெந்நீர் போடு... ! ”

“ சந்தவயல் மாடு வரும்;
தவிட்டுக் கோழி வீடு வரும்
இந்த நேரம் நீயா மச்சான்
கண்ணை நம்ப முடியலியே? ”
“ புள்ளைங்கள குளிக்கச் சொல்லு;
பூவும் பொட்டும் தரிக்கச் சொல்லு..
வெல்லப் பொங்கல் பண்ணி வச்சு
வேண்டு மட்டும் தின்னச் சொல்லு”
“ குல்லு கடை வாசலிலே
கூட்டத்தோட கூடி நின்னு
வெல்லத்துண்டு சோப்பு சீப்பு
வாங்கினது பார்த்துப் புட்டேன்.. ”
“ அணைச்சா நொறுங்கும் சத்தம்
அடியெடுத்தா சதங்கை சத்தம்
சிரிச்சா பைப்புத் தண்ணி
சிலு சிலுன்னு கொட்டும் சத்தம்... ”
“ புதுசா பிளாஸ்டிக் குடம்
வாங்கி யாந்த ஆசை மச்சான்....
இத இன்னும் எத்தினி தரம்
இலைமறைவா சொல்லுவ மச்சான்?
“ வாசப் பாக்கு இல்லாம
வாய் மணக்கும் கட்டழகே!
ரோசாப் பூவு சேலையில
ஜெகஜெகன்னு ஜொலிக்கிறியே? ”
“ டாஸ் மாக்கு போகாம
டப்பு முழுசும் கொடுத்த மச்சான் !
ஷோக் கான இந்த நாளு
நித்தம் நித்தம் வரணும் மச்சான் !”

No comments:

Post a Comment