Sunday, 17 June 2018

முயற்சி

பூஜ்யம் என்பது வெறுமையல்ல
அதுதான் முயற்சியின் முதல் படி!. - வெறும்
புள்ளிகள் என்பது முடிவும் அல்ல
அதுதான் தொடக்கத்தின் வாசல் படி!!
முதலடி வைக்கப் பயந்துவிட்டால்
இமயம் ஏறுவது எப்படி? - ஒரு
புள்ளியில் தொடங்காவிடில்
கோலங்கள் போடுவது எப்படி??
முதலடி வைத்து எழுந்திடு மகனே!
உலகமே உந்தன் காலடியில்! - அந்த
அகரம் எழுதிப் பழகிடு மகனே!
உலக மொழிகள் உந்தன் விரலிடையில்!!
தொடக்கம் இன்றி வெற்றிகள் உண்டோ?
துணிவுடன் எதையும் தொடங்கிவிடு! - மனத்
திடத்துடன் உளியைக் கையில் எடு
பாறைகளைச் சிலையாக்கி விடு!!
வாழ்க்கையைக் கண்டு அஞ்சிடாதே
ஒவ்வொரு படியாய் ஏறிவிடு! - அந்த
உயரம் கண்டு உற்சாகம் கொள்
உன் முயற்சியில் பறந்து வெற்றி கொள் !!

No comments:

Post a Comment