Tuesday, 3 July 2018

நான் - பிராமின்

அடியேன் நான்-பிராமின் ...
ஆனா வெஜ் மெனு ரொம்பவே பிடிக்கும்...
நானே நளபாகத்தில் நிபுணன் (40ஆண்டுகள் நீண்ட கால சமையல் கலை அனுபவம்)...
என்னோட கல்லூரி கால & 16ஆண்டு குவைத் வாழ்க்கையில் பிராமின் நண்பர்கள் இல்லத்தில் அடிக்கடி அதிதி போஜனம் ...
என்னோட ஹிந்து மத சாஸ்திர நூல் அறிவு ரொம்ப உபயோகம் ....நண்பர்கள் என்னோட மேதா விலாசம் அடக்க என்னோட வாய்க்கு வேலை கொடுப்பாங்க ...
இல்லேன்னா உதங்கர் யாரு ? ( இந்திரன் சண்டாளன் வேடத்தில் போய் அமிர்தம் கொடுத்து உதங்கர் அதை அருவெறுத்து அமிர்த பாக்கியம் இழந்த கதை ).....
ததிசி முனிவரோட முதுகெலும்பு இப்போ யாரு கிட்டே இருக்கு?....இந்திரனோட வஜ்ராயுதம்
நஹுஷன் கத ( இந்திரன் பொண்டாட்டி சசிதேவியை அபேஸ் பண்ணப் பார்த்த பலே ஆசாமி) ...தெரியுமா ன்னு பஞ்சர் பண்ணிடுவேன் ....
மாமிகள் என் நண்பர்களை பட்சணம் பண்ணிடுவாங்கோ ...ஒரு நான் பிராமின் அதிலேயும் கிறிஸ்தியன் என்னா போடு போடுறன்......நீயும் இருக்கியே ....
காயத்ரி வேறு ஸ்பஷ்டமாய் சொல்லி கடுப்பேத்துவேன்.....ஹி ஹி ஹி ஹி
கல்யாணராமன் கைலாசம்ன்னு நண்பர் ஒருத்தர் கடுப்பாகி சபிச்சாரு...ஒண்ணுமே பலிக்கலே ....அவருதான் பஸ்பம் ஆயிட்டாரு ....
இன்னும் நிறைய சங்கதிகள் ....அப்பப்ப சொல்றேன் ...

No comments:

Post a Comment