Saturday 14 July 2018

ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்

ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்
================================
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்தை சென்றடைய பல்வேறு வழிகள் / வாய்ப்புக்கள் இருக்கும் .
எ.கா: மிதி வண்டி / துவிச்சக்கர வாகனம் (பை சைக்கிள்) , இருசக்கர எந்திர வாகனம் (பைக் /ஸ்கூட்டர் ) , நான்கு சக்கர எந்திர வாகனங்கள் - சிற்றுந்து / பேருந்து / … நீர் வழி போக்குவரத்து பரிசல் /தோணி / மிதவை / படகு / கப்பல், வான் வழி வானூர்தி (விமானம்)...மற்றும் பல .......
ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மா அதைப்படைத்த பரம்பொருளை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.
அந்த ஆன்மிக ஈடேற்ற வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும், தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது.
ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டனர்.
நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும் தத்தம் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக பொருளற்ற வெற்று அடையாளங்களாய் இன்று மாறிவிட்டது.செய்ய வேண்டும் என ஏனோதானோவென்று லயிக்காது செய்வது இன்று வெகு இயல்பாகிப்போனது.
இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
தனி மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு. நன்மை தீமை பற்றிய மதி நுட்பம் / தேர்ச்சி உண்டு. ஆனால் கடைபிடிப்பதே கடினம்.
தன்னலம் சார்ந்த மனித ஆசைகள் பூர்த்தி செய்வது எனும் அச்சிலேயே சராசரி வாழ்க்கை சுழல்வதால் விளைவுகள் குறித்து மனசாட்சி சுட்டினாலும் அதை புறக்கணித்து தான்தோன்றித்தனமாக செயல் படுதலே இயற்கை. அதை இன்று ஒரு குற்றமாக யாருமே கருதுவதில்லை.
இது மாபெரும் பிழை. இதை நாம் பெரு முயற்சி செய்து திருத்தி நன்மையில் பற்று கொள்தல் காலத்தின் கட்டாயம்.
சிந்திப்போம் ....உணர்வோம்...வாழ்வோம் !!!!

No comments:

Post a Comment