Tuesday 17 July 2018

இசையும் நடனமும்

நல்ல நடனத்தின் எளிய இலக்கணம் அதைக் கண்கள் காணும்போதே காதில் இசையும் தேனாகப் பாய்ந்து கால்கள் தாளம் இட்டு மனம் துள்ளவேண்டும் ...மற்றதெல்லாம் உடான்ஸ் தானுங்க .....
--------------------------------------------------------------------------------
நடனத்திற்கு இசை - தாள லய சுருதி கட்டாயம் தேவை . நடனக் கலைக்கு இசை உயிர் போன்றது. ‘mute’ செய்து பார்த்தால் நடனம் ‘சவம்’ போல ஆகிவிடும். மனம் பரவசம் அடையாது.ரசனை வெகுவாகக் குறையும். அல்லது இல்லாமலே போகும் ...இது என் நீண்ட கால அனுபவம் கொண்ட கருத்து. யாரும் ஏற்றுக்கொள்ள நான் வலியுறுத்தவில்லை.
கோவில் விழாக்களில் இசையின் முக்கியத்துவம் மகத்துவம் நன்கு புரிந்துகொள்ளலாமே.
நல்ல நடனம் என்பது நம்மோட மனசுக்கே தெரியும்...யாருமே சொல்லிப் புரிய வேண்டாம் ...அதுக்கு பெயர் வேறே - 'திணிப்பு ' ..
ஒருவரது ரசனை எனக்கு / மற்றொருவருக்கு பிடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை ...பொதுஜன ரசனை வேறு ...தனி நபர் ரசனை வேறு ...
எனக்கு விஜய்யின் நடனங்கள் காக்கா வலிப்பு போல தோணலாம் ...''ஓ செம்மாங்கனி'' (மனசுக்குள் மத்தாப்பு) பிரபு பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு நடப்பதே ஒரு ' கிரேஸ்புல் 'லாய் தெரியலாம்
இன்னொருவர் விஜய்யின் நடனத்தை சொர்க்க சுந்தர அனுபவம் ஆக உணர்ந்து சிலாகிக்கலாம். தவறில்லை. அது அவரது உள்ளம் அவரது ரசனை அவரது கருத்து....
தமிழ் திரைப்படங்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் மேலேயே பார்த்து ரசித்த ரசிகன் எனும் முறையில் சொல்வேன்.
சில நடிகர் நடிகைகள் கழுத்துக்கு மேலேயே முகபாவம் காட்டியே கண்ணையும் கருத்தையும் கவரும் மகா திறமைசாலிகள்.
எனக்கு நினைவில் இருக்கும் அஞ்சலி தேவி, பத்மினி, வைஜெயந்திமாலா போன்றோரின் முகபாவங்கள் அழகு ...முறையாக பயின்று தேர்ந்த சில நடிகைகள் நளினமாய் ஆடுவார்கள்.
கதாபாத்திரங்களாகவே மாறி மிதமிஞ்சிப் போகாமல் அளவோடு பாவனைகள் காட்டும் அற்புத தோரணைகளும் உண்டு ...
60கள் 70களிலேயே மசாலாத்தனம் கலந்து ஒருவகை திரைப்பட நடன வகையே உருவாகிப்போனது நாம் அறிந்த வெள்ளிடைமலை உண்மையே.
ஆண்களில் சந்திரபாபுவின் நளினம் நாகேஷின் அங்க சேஷ்டைகள் பிரமாதம் வகைகள் .
சிவாஜி சில நடனங்களில் மிக அருமை . ரசிக்கத் தெரிந்த ரசிகர்கள் எம்ஜியார் நடனத்தையும் பாராட்டுவார்கள். ஒரு எ.கா : ‘’ஆடலுடன் பாடலைக் கேட்டு’’ .....
இளையதலைமுறை நடிகர்கள் வெரைட்டி கொடுக்க நடன மாஸ்டர்கள் படும்பாடுகள் ‘’மானாட மயிலாட’’ மூலம் பாமரர்களும் தெரிந்து கொண்டிருப்பார்கள் ...
எழுதினால் ஒரு நூல் அளவு எழுத முடியும். ஆனால் இங்கு அளவு உண்டு ...
முடிவாக நடனமும் இசையும் ஒவ்வொருவருமே ரசிப்பவையே . இதில் கருத்து மோதல்கள் தேவையற்றவை. அவரவருக்கு பிடித்ததை ரசிப்போம்.பிறரையும் மதிப்போம். பண்புடன் சகிப்புடன் எல்லோரையுமே ரசிப்பதும் நாகரீகமே.
-------------------------------------------------------------------------------
ஆடல்வல்லான் சிவபெருமான் , மோகினி ஆட்டம் ஆடிய மகா விஷ்ணு , பரத முனிவர் , தேவலோக ரம்பை ஊர்வசி மேனகா திலோத்தமா இவர்களின் நடனம் நாம் பார்த்ததில்லை. பார்த்தோமானால் ?!!!!!!

No comments:

Post a Comment