Friday, 6 July 2018

மொழிகள் ஐம்பது

  1. சிங்கம் இல்லாத காட்டுல நரி சிம்மாசனம் ஏறுமாம்.
  2. கல்யாண விட்டிலேயே கட்டி கிட்டு அழுரவ,  எழவு வீட்டில் என்ன செய்ய மாட்டா.
  3. கோழி கண்ணுக்கு பூனை கூட பூதம் மாதிரிதான் தெரியும்.
  4. பணம் பேச ஆரம்பித்தால் உண்மை ஊமை ஆயிடும். 
  5. என் அகமுடையான் அடிச்சதற்காக  அழலை.  என் சக்காளத்தி சிரிப்பாலேன்னு  அழுறேன்.
  6. புவழகியாம், பொர்கொடியாம், போகிற இடமெல்லாம் செருப்படியாம்.
  7. பறக்கிற குருவிக்கு கொம்பிருகிற இடம் தெரியாது.  பரதேசிக்கு தங்கும் இடம் தெரியாது.
  8. தேரோட போச்சு திருவிழா.  தாயோட போச்சு பிறந்தகம்.
  9. வித்தார கள்ளி விறகொடிக்க போனாளாம்.  கற்றாழை முள்ளு கொத்தோட  குத்துச்சாம். 
  10. சீலை இல்லைன்னு சின்னம்மா வீட்டுக்கு போனாளாம். ஈச்சம் பாயை கட்டிக்கிட்டு எதிரே வந்து  நின்னாளாம். 
  11. கணக்கபிள்ளை பொண்டாட்டி கடுக்கன் போட்டானு,  காரியக்காரன் பொண்டாட்டி காதை அறுத்து கொண்டாளாம்.
  12. பொண்ணின் குணமறியேன்.  சம்மந்தி வாயயரியேன்.
  13. பாம்பு பசியை நினைக்கும்.  தேரை விதியை நினைக்கும்.
  14. செத்த பிணத்திற்கு கண் எதற்கு.  சிவா சிவா என்பவனுக்கு பெண் ஏத்தற்கு.
  15. அகப்பை பிடித்தவன் நம்மாளா இருந்தா, முதல் பந்தி என்ன, கடைசி பந்தி என்ன.
  16. அக்கா இருக்கிறவரைதான் மச்சான் உறவு.
  17. அன்காடிகாரியை சங்கீதம் பாட சொன்னால், வெங்காயம் கரிவேப்பிலைன்னு தான் பாடுவா.
  18. அஞ்சும் நாளும் சரியாய் இருந்தா, அறியாத பொண்ணும் கறி சமைப்பாளாம்.
  19. அது அதுக்கு ஒரு கவலை.  ஐயாவிற்கு பல கவலை.
  20. அமாவாசை கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
  21. ஐயாதுரைக்கு கல்யாணம். அவரவர் வீட்டிலே சாப்பாடு. 
  22. அம்மா பாக்கியம் சம்பா விளைச்சது. பாவி பாக்கியம் பதரா விளைச்சாது.
  23. அரிசி கொடுத்து அக்கா வீட்டிலே என்ன சாப்பாடு.
  24. அருமை தெரியாதவனிடம் போனால் பெருமை எல்லாம் குறைச்சு போய்டும். 
  25. அன்பில்லா மாமிக்கு கும்பிடுறது கூட குற்றம்தான்.
  26. அன்ன நடை நடக்க போய்,  காகம் தன் நடையை மறந்துச்சாம்.
  27. ஆல் பழுத்தால் அங்கே கிளி.  அரசு பழுத்தால் இங்கே கிளி.
  28. ஆத்தோட போனாலும் போவேன்.  தெப்ப காரனுக்கு ஒரு காசு கொடுக்க மாட்டேன்.
  29. இடைச்சன் பிள்ளைகாரிக்கு, சளைச்சன் பிள்ளைக்காரி பிரசவம் பார்த்தாளாம். 
  30. உயிரோடு ஒரு முத்தம் தராதவ, செத்த பிறகா உடன் கட்டை எறபோரா.
  31. எறியுறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  32. எறும்புக்கு கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்தான்.
  33. என்னை கெடுத்தது நரை.   என் மகளை கெடுத்து அழகு.
  34. என்னைக்கும் போடாத மகாராசி இன்னிக்கும் போடலை.  தினம் போடுற சண்டாளிக்கு என்ன வந்துச்சு. 
  35. ஏற முடியாத மரத்துல எண்ணாயிரம் மாங்கா. 
  36. ஐயனார் கோவில்லே செங்கல் கூட தெய்வம்தான்.
  37. கருப்பட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துகிட்டு போச்சு.
  38. கள்ளன் செய்த சகாயம் காதருக்காம கடுக்கனை கழ்டியதுதான்.
  39. கறக்கிறது ஆழாக்கு,  உதைக்கிறது பல்லு போக.
  40. கன்று குட்டி கிட்டவும்,  கடன் காரன் கிட்டவும் இருக்க முடியாது. 
  41. காய்ந்து கெடுத்தது வெயில்.  பெய்து கெடுத்தது மழை.
  42. கிள்ளியெடுக்க சதை இல்லைனாலும், பேரு என்னவோ தொந்தியாபிள்ளையாம்.
  43. கிள்ளை பழுக்குமாம்.  கிளி வந்து கொஞ்சுமாம். 
  44. குட்டி குலைத்து நாய் தலையில் வைத்தது போல்.
  45. குருடனும் செவிடனும் கூத்து  பார்க்க போய்,  குருடன் கூத்தை பழிச்சானாம், செவிடன் பாட்டை பழிச்சானாம். 
  46. கூத்தாடிக்கு கிழே கண்ணு.  கூலிக்காரனுக்கு மேலே கண்ணு.
  47. தனக்குன்னு ஒருத்தி இருந்தால் தலை மாட்டில் இருந்து அழுவா.
  48. பிள்ளை பெத்தவளுக்கு தாலாட்டும், புருஷன் செத்தவளுக்கு அழுகையும் தான் வரும்.
  49. பசிக்காம இருக்க மருந்து தாரேன்.  பழைய சோறு இருந்தா போடு என்றானாம். 
  50. பாம்பை முட்டையல கொல்லனும்.  புலியை குட்டில கொல்லனும்.

No comments:

Post a Comment