Sunday, 8 July 2018

மூன்று கேள்விகள்

இளைஞர் :
  மூன்று கேள்விகள்
இருகின்றன. விடை  வேண்டும்
1. இறைவன் இருக்கிறானா?
அப்படி இருந்தால் அவனின்
உருவத்தை காட்டுங்கள்..
2. தக்தீர் (விதி) என்றால் என்ன??
3. ஷைத்தான் தீயால் படைக்க பட்டவன்
என்றால், இறுதியில் அவனை ஏன்
தீயாலான நரகத்தில் அல்லாஹ்
போடுகிறான்.
அது அவனுக்கு வலிக்க
போவது இல்லை, ஏனென்றல் நரகமும்,
ஷைத்தானும் தீயால்
படைக்கப்பட்டவைகள் .. அல்லாஹ்
இதை கூட யோசிக்கவில்லையா??
உடனே மார்க்க அறிஞர் அந்த
இளைஞனை அறைந்தார்..
இளைஞர் : (வலியோடு) ஏன் என்மேல்
கோபம் கொள்கிறீர்கள்?
மார்க்க அறிஞர் : நான் கோபம்
கொள்ளவில்லை. உங்கள்
கேள்விகளுக்கு பதில் கூறினேன்..
இளைஞர் : (வியப்போடு) என்ன
சொல்கிறீர்கள்?
மார்க்க அறிஞர் : நான்
உங்களை அடித்த
பிறகு எவ்வாறு உணருகிறீர்கள்?
இளைஞர் : எனக்கு வலிக்கிறது..
மார்க்க அறிஞர் : நீங்கள்
வலியை நம்புகிறீர்கள??
இளைஞர் : ஆமாம்.
மார்க்க அறிஞர் : அப்படி என்றால், அதன்
வடிவத்தை காட்டுங்கள்..
இளைஞர் : என்னால் முடியாது.
மார்க்க அறிஞர் : அது தான் முதல்
கேள்விக்கான பதில்.. இறைவனின்
உருவத்தை பார்க்காமலே அவனை உணர
முடியும்.. (மேலும் தொடர்ந்தார்)
நேற்று இரவு நான்்
உங்களை அடிப்பேன்
என்று கனவு கண்டீர்களா?
இளைஞர் : இல்லை
மார்க்க அறிஞர் : இன்று என்னிடம்
அடி வாங்குவேன்
என்று நினைத்தீர்களா??
இளைஞர் : இல்லை..
மார்க்க அறிஞர் : இது தான் தக்தீர்
(விதி). (மேலும் தொடர்ந்தார்) என்
கை எதனால் செய்யப்பட்டது??
இளைஞர் : சதையால் செய்யப்பட்டது..
மார்க்க அறிஞர் : உங்கள் முகம்??
இளைஞர் : சதையால் தான்.
மார்க்க அறிஞர் : நான்
அறைந்தது வலித்ததா??
இளைஞர் : ஆமாம்.
மார்க்க அறிஞர் : இது தான் உங்கள்
மூன்றாவது கேள்விக்கு பதில்..
ஷைத்தானும், நரகமும் தீயால்
படைக்கபட்டவையாக இருந்தாலும்,
இறைவன் நாடினால்
அது ஷைத்தானுக்கு கடும்
வேதனையை தர கூடியாதாக
அமையும்..

No comments:

Post a Comment