Thursday, 5 July 2018

எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுதல்

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது இயல்பான விடயமாக இருக்கலாம்.
ஆனால் அதற்கான காரணம் என்ன? எந்த நாளில் விளக்கேற்றினால் அதற்கான பலனை பெறலாம் என்பது தெரியுமா?
எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது எப்படி?
தோல் மெல்லியதாக உள்ள எலுமிச்சை பழத்தினை எடுத்து கொண்டு அதன் தோலை நெகிழ்வாக உருட்டி செங்குத்தாக சரிபாதியாக வெட்டி, சாற்றினைப் பிழிந்து கொள்ள வேண்டும்.
பின் பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.
எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்?
மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும் என்பதற்காக கடவுளை வழிபடும் போது எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள்.
விளக்குத்திரி குறிப்பதன் அர்த்தம் என்ன?
பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும் திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை உண்டாக்கும்.
வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி, அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் அதிகரிக்க செய்யும்.
புதிய மஞ்சள் பருத்தி துணி திரியானது, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களில் இருந்து விடுபட செய்யும்.
எலுமிச்சை விளக்கேற்ற சிறந்த நாள் எது?
நோய்கள் மூலம் அதிகம் பாதிக்கப்படவர்கள், ஞாயிற்று கிழமைகளின் மாலை மற்றும் ராகு காலத்தில் வழிபட்டால், நோய் விரைவில் குணமாகும்.
குடும்பத்தில் அதிக பிரச்சனை உள்ளவர்கள், செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தனிப்பட்ட வேறு சில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் 2 எலுமிச்சை விளக்கேற்றி வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment