அழுக்குப் பிளாட்பாரத்தில் காய்க்காரக் கிழவி ஒரு கூடையில் துணி போர்த்து மூடித் தனியாக எடுத்து வைத்திருந்தாள்.
சாக்குப் பையில் கூறு கட்டி வைத்திருந்த காய்களை வாங்க மனமில்லாமல் அவள் தன் அருகே மறைத்து வைத்திருந்த கூடையைக் காட்டி "அதிலிருந்து ஒரு கிலோ எடுத்துக் கொடு" என்றேன்.
அவள் தலை ஆட்டினாள். "அது தர்ரதுக்கு இல்லை ஸார்."
எனக்கு ரொம்ப ரோஷமாகிவிட்டது. அவளிடம் வழக்கமாக காய் வாங்குகிற எனக்கு முகத்தடித்தாற் போல் என்ன ஒரு கறாராகப் பதில் சொல்லுகிறாள் இந்தக் கிழவி.
கோபத்துடன் சொன்னேன். "கொடுக்கறதாயிருந்தா அந்தக் கூடையிலிருந்து எடுத்துக் கொடு. துட்டு கொஞ்சம் கூடவாயிருந்தாலும் பரவாயில்லை" என்றேன்.
அவள் அசரவில்லை. என்ன பிடிவாதம்! அதை எந்த சீமான் வீட்டுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறாளோ அல்லது சாயந்தரத்துக்கு மேல்தான் அதை ரிலீஸ் செய்வாளோ?
எதுவாயிருந்தாலும் நாம் பழைய ஆள். எனக்கு அவள் பெப்பே சொன்னது என் கோபத்தை அதிகமாக்கியது.
"இனிமேல் உங்கிட்ட காய் வாங்கவே மாட்டேன்" என்று புறப்படத் தயாரானேன்.
"இருங்க ஸாரு. கோவிச்சுக்காதீங்க நீங்களே காயைப் பார்த்துடுங்க" என்று தனிக் கூடையிலிருந்த துணியை அப்புறப்படுத்திக் காட்டினாள்.
உள்ளே காய்களில்லை. நாய்க் குட்டிகள்! இன்னும் கண் விழிக்காத நாய்க் குட்டிகள். வண்ண வண்ண நிறங்களில், கருப்புல ஒண்ணு. சிவப்புல ஒண்ணு. இரண்டும் கலந்தாப்புல ஒண்ணு.
கண் திறக்காத அந்த நாய்க் குட்டிகள். ஒன்றையொன்று கட்டிக் கொண்டும், எழுந்திருக்க முயன்றுகொண்டும் இருந்தன.
என் அதிர்ச்சியைப் புரிந்துகொண்ட காய்க்காரக் கிழவி சொன்னாள் "இதுங்களோட தாயை ரெண்டு நாளைக்கு முன்னால எவனோ பஸ்காரன் அடிச்சிப் போட்டுட்டுப் போயிட்டான். நான்தான் ரெண்டு நாளும் டீ வாங்கித் துணியிலே தோய்ச்சித் தோய்ச்சி இதுங்களுக்குக் கொடுத்துட்டிருக்கேன். மூடி வைக்காட்டி காக்கா கீக்கா வந்து கொத்திடும்" என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த டீயை ஆற்றத் தொடங்கினாள்.
என் கோபம் எப்போதோ ஆறிவிட்டது. என் பதட்டம் ஒரு வெட்கத்தையும் கொடுத்தது. "இந்தா, அதுங்களுக்கு டீ வாங்கிக்கொடு" என்று பத்து ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

No comments:
Post a Comment