Friday, 6 July 2018

முத்தம்

மொட்டவிழும்       மொட்டவிழும்
சின்ன மணி கண்கள் - அவை
வட்டமிட்டு வட்டமிட்டு
சுற்றும்    குள  மீன்கள்

கட்டவிழ்ந்து     கட்டவிழ்ந்து
கலையுதொரு மேகம் - தோள்
தொட்டு தொட்டு துவலுகிற
கூந்தல்  ஒரு நாகம்

பட்டு பட்டு கன்னம்தான்
மெல்ல தொட்டு பாரு
கட்டு கலையாத உடல்
தேக்கு மர தேரு

கிட்ட கிட்ட வந்து நீ
எட்டி போகும் போது
தட்டு தடுமாறி மனம்
கெட்டு போகும் பாரு

நிலவு முகம் கனவில் வந்து
நித்திரையை கெடுக்கும்
களவு போகும் இதயத்தையே
காவல் எங்கே தடுக்கும்

அழகு சிலை அருகில் வர
வீசுதொரு வாசம்
விலகிவிடு இல்லையெனில்
கலையும் எனது வேஷம்

அத்தை மகள் ரெத்தினத்தை
பார்த்து நாளாச்சு 
நேத்து உன்னை பார்த்த போது
நின்னு போச்சு மூச்சு

தத்தி தத்தி தாவும் கிளி
முத்து  மணி பேச்சு- உன்னை
சுத்தி சுத்தி வந்ததாலே
புத்தி மாறி போச்சு

தேவி உந்தன் அழகு என்னை
வதைக்குதடி நித்தம் - என்
ஆவி போகும் முன்னே வந்து
தந்துவிடு முத்தம்

No comments:

Post a Comment