Wednesday, 11 July 2018

படித்துப்பாருங்கள்


‘எண்’ என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
-திருக்குறள் – பொருட்பால் – அரசு இயல் – கல்வி
நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருசிறிய Fabrication Industry இல் Quality Control பிரிவில் ஒரு சிறிய உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தேன். Metals, Materials, Fabrication, Welding, Casting, Defects என பணி இருந்தது .
ஒரு நாள் ஒரு வார்ப்பினை (Casting) Inspection செய்ய வந்த Inspector (Authorized Inspector- Lloyds Register) சொன்னார்:
“ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் ! நாம் இந்தக் காலகட்டத்தில் உலோகவியலில் (Metallurgy ) மகத்தான உயர் ஆய்வுகள் மூலம் வியத்தகு முன்னேன்றங்களை கண்டுள்ளோம் , இருந்தும்கூட Defect free Castings உற்பத்தி பண்ணுவது என்பது பல சமயங்களில் கடினமாக உள்ளது . 12௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது . அதன் மீது ஆயிரம் ஆண்டுகளாக மலர்கள் , அபிஷேகத் திரவியங்களை ( பால் , தயிர் , பஞ்சாமிர்தம் தேன் , பலவகையான பழச்சாறுகள் , இளநீர் , நெய் , திருமஞ்சனப் பொடி, திருநீறு , வில்வப்பொடி ) என மேலே கொட்டுகிறோம் .இந்தத் திரவியங்களில் பலவிதமன Acids & Alkalies உள்ளன , ஆனால் ஏதோ ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion , cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன ! நமது முன்னோர்கள் அறிந்து வைத்த மகத்தான இந்த உலோகவியல் அறிவியலை ( Metallurgy ) என்னவென்று சொல்லுவது ?”
உண்மைதான் !
பாரதத்தின் குறிப்பாக தமிழகப் பண்பாட்டைப் பற்றிய சிறிய அளவில் அறிமுகம் உள்ள ஒரு வெளிநாட்டினர் உடன் நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தால் , உடனடியாக அவர் நினவு கூறுவது நமது கோவில் கட்டிடகலை , கற்சிற்பங்கள் மற்றும் ஐம்பொன் உலோக சிலைகளின் பற்றிதான் . Structural Engineering , Architecture , Geology , Carpentry , Stone- Masonry, Metallurgy போன்ற அறிவியல் துறைகளில் நமது முன்னோர்கள் ஆழ்ந்த படிப்பும் செய்முறைத் திறனும் இல்லை என்றால் , இந்த மகத்தான படைப்புகளை உருவாக்கி இருக்க முடியாது அல்லவா ?
‘ திருமகள் போல ‘என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜராஜ சோழனை ( Raja Raja I ) ‘ பார்ப்பன அடிமை ‘ என்று வந்தேறிய சமயத்தை தழுவிய ஒரு பிரமுகர் அறிக்கை வெளி இட்டார் . அப்பட்டமான ஓர் இந்து விரோத அறிக்கை அது .
பார்ப்பன அடிமை ‘ என்று இகழப்பட்ட மனனர் தம் காலத்திய அனைத்து சமயங்களையும் ஒன்றாகவே பாவித்து நிவந்தங்கள் கொடுத்தவர் , அது மட்டுமல்ல அந்த பிற்கால சோழ அரசர்கள்தான் இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் . இன்றும் கூட அவை வேளாண்மைக்கு உயிர் நாடியாக உள்ளன . ( ஓர் உதாரணம் : தக்கோலப் போரில் ‘ யானை மேல் துஞ்சியத் தேவர் ‘ என பெயர் பெற்ற இளவரசர் ராஜாதித்தர் தம் தந்தை பராந்தகர் – அவருக்கு வீர நாராயணர் என்ற பெயர் உண்டு – அவர் பெயரில் கடல் போன்ற வீர நாரயண ஏரியை – தற்போது – வீராணம் ஏரியை உருவாக்கினார் ) . அதில் இன்று விளைவித்த நெல் – அரசியை கூட மேலே சொன்ன நபர் இன்றும் கூட தின்று கொண்டு இருக்கலாம் . மேலும் , இந்த நீர் ஆதாரங்களை உருவாக்கிட  Gelogy, Earth Sciences, Water Management போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் ஏதேனும் ஆதாரக் கல்வி பெற்று இராமல், இந்த மகத்தான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி இருக்க முடியுமா?
‘திருமன்னி வளர‘ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜேந்திர சோழரின் (Rajendra I) திருவாலங்காட்டு செப்பேடு, அவரது கடல் கடந்து சென்ற படையெடுப்பபு பற்றிக் கூறுகிறது. மேலும் இத்தகு படையெடுப்புகளுக்கு நிலையான ஒரு சோழ ராணுவம் யானைப் படை, குதிரைப்படை இருந்துள்ளது . இதற்கு தேவையான Naval Architecture , Ocean Engineering, Veterinary Sciences போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் சிறந்த அறிவு பெற்று இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை
மகாத்மா காந்தி 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு சென்றார் . அந்த ஆண்டு அக்டோபர் 2௦ ஆம் தேதி லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ (Saatham House) உள்ள இன்ஸ்டிட்டுஉட் ஆப் இன்டர்நேஷனல் இல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) ஓர் ஆவேசமிக்க உரை நிகழ்த்தினார் . அதில் பிரிட்டிஷாரின் இந்தியக் காலனிய ஏகாதிபத்திய அணுகுமுறை இந்தியவை பல விஷயங்களில் சீரழிய செய்து விட்டது என்றார். குறிப்பாக பாரதத்தின் பண்டையக் கல்வி முறை பிரிட்டிஷாரின் போக்கால் மாபெரும் பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார் .
காந்திஜி கூறினார் :
“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.
டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச்செயலாளரும் ,ஆக்ஸிலரி கமிட்டி அப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷன் சேர்மனாகவும் (Auxiliary Committee of Indian Statuary Commission Chairman) பதவிகள் வகித்த சர் பிலிப் ஹெர்டாக் , காந்திஜியின் கூற்றை மறுத்து அவருக்கு கடிதம் எழுதினர் . ‘’ பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போக்கால் , பாரதத்தில் நிலவிய பண்டைய கல்வி முறை சீரழிந்தது ‘’ என்ற காந்திஜியின் குற்றசாட்டுக்கு ஆதாரங்கள் கேட்டார் . 1931 ஆம் தொடங்கி 1938 ஆம் ஆண்டுவரை சர் பிலிப் ஹெர்டாக் தொடர்ந்து காந்திஜிக்கு கடிதங்களை எழுதி வந்தார் . காந்திஜியினால் ஆதாரங்களை கொடுக்க இயலவில்லை . தான் சொன்னது சரி என்று தனது மனது நம்புவதாகவும் , ஆனால் ஆதாரங்கள் ஏதும் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்து விட்டார் .
இந்த இடத்தில நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் . மகாத்மா காந்தி அவருக்கே உரித்தான , இயல்பான நமது நாட்டைப் பற்றிய புரிந்துணர்வினாலும் , அவரது உள்ளார்ந்த ஆன்மீகவயமான ஞானத்தாலும் நமது கல்விமுறை பற்றிக் கூறினாலும் , அந்த சமயத்தில் அவரால் ஆதாரங்களை தர இயலவில்லை . ஆனாலும் அவர் சொன்னது சரியே எனப் பின்னர் நடந்த நிகழ்சிகள் தெரிவிகின்றன . ( இந்தப் புரிதல் காந்திஜிக்கும் , மகான் அரவிந்தருக்கும் இருந்தது , ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்).
ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் . அப்பொழுது சர் பிலிப் ஹெர்டாக் காந்திஜியிடம் பாரத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்த ஆதாரங்களை கேட்டு அது காந்திஜினால் தர இயலவில்லையோ , அந்த ஆவணங்கள் பிரிட்டிஷ் நூல் நிலையத்தில் இருப்பதைக் கண்ணுற்றார். மிகுந்த சிரமத்தின் பேரில் , அந்த ஆதாரங்களை ஸ்ரீ சீதாராம் கோயலின் உதவியுடன் 1983 ஆம் ஆண்டு ‘ அழகிய மரம் ‘ ( The Beautiful Tree – Indigenous Indian Education in the Eighteenth Century ) என்ற ஒரு நூலாக வெளியிட்டார் .
அந்த நூலின் கருத்துக்கள் என்ன ?
1822 ஆம் ஆண்டு மதராஸ் ப்ர்சடேன்சி (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !
ஏனென்றால் , 1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தன் ஆன்மீகவயமான உள்ளுணர்வினால் பாரதத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்தவிதமான தரவுகள் இன்றி , லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) பேசியதை நிருபிக்கும் வகையில் அந்த ஆய்வு அறிக்கை இருந்தது .
மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :
– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன
– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன
– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்
– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .
– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .
– இந்தக் கல்வி முறை பற்றி ‘ தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ ‘ மகாமஹோஉபாதியாய ‘ ‘ தமிழ்த் தாத்தா’  உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘ என் சரித்திரம் ‘ என்ற நூலில் விவரித்துள்ள ‘ இளமைக் கல்வி ‘ என்ற அத்தியாத்தில் காணப்படுவது போல உள்ளது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). நான் இந்த மிக நீண்ட பதிவு போடுவதற்கே இந்தத் தகவல் மட்டுமே காரணம் .
ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.
எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ – இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும் ?
‘மனு ஸ்ம்ருதி‘ – இங்கே வேலை செய்யவில்லை போலும் ?
இறுதியாக ,
ஏராளமான தகவல்கள் இந்த ‘ அழகிய மரம் ‘ என்ற நூலில் உள்ளது என்றாலும் , விரிவாக வேறு ஒரு சமயத்தில் விவாதிப்போம் எனக் கூறி – மகாத்மா காந்திக்கும், ஸ்ரீ தரம்பாலுக்கும் நமது நன்றி கலந்த வணக்கத்தை செலுத்துவோம்.

No comments:

Post a Comment