வாழ்வின் சித்திரங்களாக வரைந்து
காட்டியது
என் வீட்டு கண்ணாடி
வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில்
எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன.
என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல்
என் பிம்பங்களின் பிரதிபலிப்பில்
இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும்
என்னுள் பனி படலமாய்
கண்ணாடி விளிம்புகளில் புகையாய்
நானே இயற்கையுமாய்….
என் வீட்டு கண்ணாடியில் தெரிகிறேன்
எந்த அரிதாரமுமில்லாமல்
எதையுமே மறைக்காமல்
எனது உண்மை பிம்பம் உணரத்துகிறது
என் வீட்டு கண்ணாடி…..
நானே…..
சிறுவயதில்
ஊசித்தட்டானை ராசா தட்டானுக்கு
ஊணவளித்து மகிழ்ந்ததிலுள்ள
குரூரம் விளங்கியது ....
அறுபது வயதில்
இப்போது தேன் மிட்டாய் தின்னக்கேட்கிறேன்
ஓணானுக்கு புகையிலை கொடுத்து
அதன் போதையைக் கண்டு மகிழ்ந்தது
உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன
இரவு வரும் வருத்தத்தில்
மரங்கள் கனத்த இதயங்களுடன்
அசைவின்றி அரவமின்றி
ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள்
மாடுகள் வீடு திரும்புவது
மறந்து புல் மேய்கின்றன.
அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில்
குதித்தோடிய போது
மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது.
அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள்
அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில்
கூடு திரும்புகின்றன.
தூதுவளை குத்தின் அடியில்
துணையைக் காணாது
கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன.
‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;.
வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய்
சுடுகாட்டு விளம்பர பலகை போல்
ஒரு விபரீதப் பலகையில்
உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன
அதன் விளிம்பில்
தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது
‘பிளாஸ்டிக் ரோசா’……
புதுத்துணி
எப்போதும் சூட்டில பிளக்கும்;
எண்ணெய் குமிழியாய்
கும்பல் கும்பலாய்
தடுமாறித் தவிக்கும்
தீபாவளி சவுளிக்கடையில் நானும் நண்பனும்
ஏங்கித் தவிக்கிறது எழுபது ரூபாய் சட்டை
பேத்திக்கு
ஆடையெடுக்க அறுபது ரூபாயுடன்
அலைபாயும் கிழவன்
எதை எடுத்தாலும் ஒரே விலை எழுபது
என்னையும் மனைவியையும் தவிர
கூவியழைக்கும்
தன் நெஞ்சம் பாராத வியாபாரி.
அழுக்குச் சட்டை
கறை படிந்த சட்டைகளால்
நிரம்பி வழிகிறது என் வீட்டு அறை
துவைத்துப் பார்க்கிறேன்
அலசி கழுவி கசக்கி பிழிகிறேன்
நனைத்துத் திரும்பவும் ஊற வைக்கிறேன்
நையப்புடைக்கிறேன்.
சட்டையின் கறை போகவில்லை
மனைவியிடம் கொடுத்துப்பார்த்தேன்
குழந்தையும் பழகிப் பார்த்தாள்
சட்டையின் கறையைப்போக்க
அம்மாவையும் அழைத்தேன்
ஆடையின் கறை வெழுக்க முடியாதென்றதோடு
தந்தையின் கறைப் பற்றியும் நொந்து கொண்டாள்
உலகமய விளம்பரம் சொல்கின்றன கறை நல்லதாம்
கை மடிப்பு கறை
காக்கையின் எச்சம்
இரத்தக் கறை மற்றும் தீக்கறை
காலங்களின்;; எதிரெதிர் நிலையால்
வாழ்வின் தத்துவங்கள் கறை படிந்த சட்டையில்
பிரிந்த நூலாய் தொங்குகின்றன.
கறையை மட்டுமே சுட்டிக்காண்பிக்கின்றது உலகம்
கறை படிந்த உள்ளத்தை அணிந்து கொண்டு
விரிகிறது என் வானம்
சுருங்கிய சட்டையுடன்.
எந்த அவதார வண்ணானும் வராததால்
வர்ண சட்டையின் கறையை போக்க முடியா
கையாலாகத்தனத்துடன்
நிர்வாணமாய்
உலகத்தை பிரதிபலிக்கும் நான்.
புதிய ஏற்பாடு
ஊடலியக்கத்தில் ஒரு மாறுதல்
பிரபஞ்ச பேராற்றல்
என்னுள் பாய்கின்றன
இதயத்தில் இரத்த சுழற்சி நின்று
பேரியக்;கத்தின் சுழல்
சூன்யமாய் பேரறிவுடன் சுற்;றுகின்றன
புதிய அவதாரம் ஏற்கிறேன்
கிருத யுகம் போய்
விவேக யுகம் பிறக்கிறது
என் இனமழித்தவர்கள் கண் குருடாகி
அறமழித்தவர்களைப் பிய்த்துப் போடுகிறேன்
பூமியின் இயக்கத்தை சிறிது நிறுத்தி
ஒரே உலுக்கிலலில் அனைவரையும்
எரி கற்களாய் கரைந்து போகச்செய்தேன்
என் இனத்தின் நோயை வேரறுக்கிறேன்
எழு கடலையும் ஒரே மூச்சில் குடித்ததும்
பிரளயத்தை தொடங்கினேன்
எல்லோரும் அழிகிறார்கள்
எல்லாமும் அழிகின்றன
திரும்பவும் படைக்கிறேன் புதிய மண் மரம்
ஆணையிடுகிறேன் அவைகளுக்கு
வுpசம் எங்கே யாரிடம் பரவினாலும்
தூக்கிலிடும் அவர்களை மரத்தின் வேர்
விஞ்ஞானக் கருவிகள் செயலிழக்கப்பட்டதும்
எல்லோரும் இப்போது மனிதர்களுடன்
பேசுகிறார்கள்
உலகின் அனைத்து அணுவுலைகளிலும்
மரத்தின் வேர்களை உட்செலுத்தி
உறைந்த போகச் செய்தேன்
எல்லைகள் இல்லா உலகில் என்ன வேலை இரானுவத்திற்கு
சிலரை மட்டும் உயிர்த்தெழச் செய்தேன் மதமில்லாமல்
அன்பே அனைவரின் தத்துவமானது
இனத்துரோகிகள் கல்லானார்கள் சாட்சிக்கு
புதிய உலகை படைத்த உவகையில்
கரைந்து மண் துகள்களானேன்…
பெயரில் என்னயிருக்கிறது
பிறக்காத என் குழந்தையின் பெயர் ‘கயா’
பிறக்கப்போகும் எனது ஆண் குழந்தையின் பெயர் ‘துருவன்’
பிறந்த என் குழந்தையின் பெயர் ‘ துவாரகா’
பெயரில் என்னயிருக்கிறது
எளிமைதான் சொல்;ல
இனத்தைக் குறிக்கின்றன பெயர்கள்
பண்பாடு குறிப்பது பெயர்
பெயர் தெரியாத குப்பைத் தொட்டி குழந்தைக்கு
பின்னுள்ள வாழ்க்கை என்ன சொல்லும்
மீனவக் குழந்தையின் பெயர் ‘அருளப்ப சாமி’
எதையோ சொல்ல நினைக்கிறது
பார்த்துதான் வைக்க வேண்டியிருக்கிறது
சாதியம் சொல்லாப் பெயரை.
No comments:
Post a Comment