Tuesday 17 July 2018

பணமா ? உடல் நலமா ?

வளைகுடா நாடுகளில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்து கொண்டிருக்கின்ற சகோதரர்கள் குறைந்த வயதில் நோயினால் மரணம் அடைவது தொடர்கதையாக உள்ளது
ஒவ்வொரு முறையும் ஒரு சகோதரனின் மரணச் செய்தி கேள்விபடும் பொழு மணம் வலிக்கின்றது,
பணத்துடன் சேர்த்து பல நோய்களையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர் நம் வளைகுடா வாழ் சகோதரர்கள்
வளைகுடா நாடுகளில் இருக்கின்ற பெரும்பாலான சகோதரர்களுக்கு முடி உதிர்தல் முதல் இதய நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிட்னி அல்லது பித்தபை கல் போன்ற பல நோய்கள் சர்வ சாதாரணமாக ஏற்பட்டுவிடுகின்றது
இந்த நோய்கள் முற்றி மரணத்தில் முடிகின்றது
வீட்டில் சமைத்து தர பெண்கள் இல்லாததால் நம் சகோதரர்கள பெரும்பாலும் ஹோட்டல் அல்லது மெஸ்களில் தான் உணவு உண்கின்றனர்
வேலைக்கு சேரும் பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளத்தால் யாராலும் குடும்பத்தை அங்கு எடுக்க முடியாது,
ஆகவே சம்பள உயர்வு பெற சில பல வருடங்கள் காத்திருக்கின்றனர்
நல்ல சம்பளமும், குடும்ப விசாவும் கிடைத்த உடன் தங்கள் குடும்பத்தை அங்கு அழைத்து வைத்துக் கொள்கின்றனர்
ஆனால் தனியாக இருந்த அந்த சில வருடங்களில் அவர்களுக்கு எல்லா நோய்களும் வந்துவிடுகின்றது,
பின்னர் குடும்பத்தை எடுத்து நோய் முற்றாமல் பார்த்துக்கொள்கின்றனர் அவ்வளவு தான்
வந்த நோய் வந்தது தான்
இதில் பெரும்பாலான சகோதரர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்காததால் கடைசிவரை தனியாகவே இருந்துவிடுகின்றனர்
தொடர் வேலை, கடும் வெப்பம், கடும் குளிர், தனிமை, மன உளைச்சல், ஹோட்டல் உணவு, சில கெட்ட பழக்கம் என்று இவர்களின் மனதையும் உடலையும் சக்கையாக பிழிந்து கந்தையாக ஊருக்கு அனுப்புகின்றது இந்த வளைகுடா
இப்படி தப்பி பிழைத்து வரும் இந்த பாவப்பட்ட சகோதரகளின் இறுதி வாழ்க்கை பெரும்பாலும் மருத்துவமனையிலேயே கழிந்து விடுகின்றது
அடுத்ததாக நோயை உண்டாக்கும் மிகப்பெரிய காரணமாக இருப்பது அங்கு கிடைக்கக் கூடிய கடல் நீரை சுத்திகரிப்பு செய்து கிடைக்கும் "குடிநீர்"
இந்த பாட்டில் குடிநீர் நம் உடலுக்கு மிகவும் கேடு தரக்கூடியது,
ஆனால் இதை அந்த பாலைவனத்தில் யாராலும் தவிர்த்து வாழவே முடியாது
கிடைப்பதை உண்டும், குடித்தும் வாழ்கின்றனர் அவ்வளவு தான்
கச்சா எண்ணையும், பேரீத்தம் பழத்தையும், மூட்டை பூச்சியையும் தவிர எதுவுமே இல்லாத இந்த பாலைவன நாட்டில் கிடைக்கும் எல்லா உணவு வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டவைகள்
வளைகுடா பிரவேசத்தால் நமது ஊரில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை தான்
ஆனால் அதன் பின் விளைவு மிக கோரமானதாக உள்ளது
நம் முன்னோர்கள் பொருள் ஈட்டச்சென்ற பர்மாவும், இலங்கையும், சிங்கப்பூரும், மலேசியாவும், ஹாங்காங்கும் இது போன்று மரணத்தையும், நோய்களையும் பரிசளிக்கவில்லை
இந்த நாடுகளுக்குச் சென்ற பலர் அங்கேயே குடியுரிமை பெற்று சொந்த வீட்டில் நல்ல ஆரோக்கியத்துடன் நிரந்தரமாக வாழ்கின்றனர்
வாழ்க்கை முழுக்க அரபிக்கு உழைத்தாலும் பணத்தை தவிர அவன் நாட்டில் ஒரு அடி இடத்தையும் நம் பெயருக்கு எழுதி தரமாட்டான்
எவ்வளவு பெரிய கம்பெனிக்கு நீங்கள் முதலாளியானாலும் உங்களுக்கு அரபி பெண் தரமாட்டான்
குடியுரிமையோ, இலவச மருத்துவமோ, இலவச கல்வியோ, அரசியல் பிரதிநிதித்துவமோ உங்களுக்கு ஒரு போதும் துபாயில் கிடைக்காது
இனி வரும் நம் சந்ததிகளை எதிர்காலமில்லா, நிரந்தரமில்லா, ஆரோக்கியமில்லா துபாய்க்கு தயார் படுத்துவதை நிறுத்திட வேண்டும்
நம் பிள்ளைகளுக்கு வேண்டாம் இந்த நரக வாழ்க்கை
பணம் மட்டும் வாழ்க்கை அல்ல

No comments:

Post a Comment