”ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி
குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள்
நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த
திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில்
அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான்.
–
ஒரு பெரிய வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது
எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை
அள்ளிப் போட்டுக் கொண்டான்.
–
புறப்படுகிற சமயத்தில் ‘கப்’ என்று ஒரு கை வந்து விழுந்தது.
ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று
நிறுத்தி நடந்ததை கூறினர்.
–
அரசனும் “என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா?” என்று கேட்டார்.
“ஆமாம்” என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனைப் பார்த்து
–
“நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக 100 ரூபாய் நீ அபராதம்
செலுத்த வேண்டும். அல்லது 100 கசையடி வாங்க வேண்டும். அல்லது திருடிய
வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த
தண்டனை உனக்கு வேண்டும்?” என்று கேட்டார்.
–
சற்று சிந்தித்த திருடன், “வெங்காயத்தை சாப்பிடுகிறேன்” என்றான்.
வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர்
வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரே எரிச்சல். தாக்கு பிடிக்க முடியவில்லை.
இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணிவிட்டான்.
–
அரசரைப் பார்த்து ”என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது.
பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள்” என்றான். அரசரும் “சரி” என்றார்.
–
சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான்.
அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. ”இதுவும் எனக்கு சரிபட்டு வராது.
100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்” என்று கூறினான்.

No comments:
Post a Comment