பாவத்தின் அளவு
ஞானி ஒருவரிடம் வந்த பக்தர்கள் இருவரில் முதலாமவன் ” சுவாமி நான்
கடந்த காலத்தில் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டேன். அந்தச் சுமை என்
மனதைப் பெரிதும் வருத்துகிறது.” எனக் கவலையோடு சொன்னான். இரண்டாம் பக்தனோ ”
நான் சின்னச் சின்னதாய் நிறைய பாவங்கள் செய்திருக்கிறேன். இன்றாலும் அவர்
சிறியவை என்பதால் அவற்றின் சுமை பெரிதாக இருக்காது . அவற்றைப் பற்றி நான்
வருத்தப்பட வேண்டாம் என நினைக்கிறேன்” என்றான்.
ஞானி எதுவும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் ஆற்றங்கரைக்கு அழைத்துச்
சென்றார். முதல் பக்தனிடம் ஒரு பெருங் கல்லைக் காட்டி அதைத் தூக்கிக்
கொண்டு வருமாறு கூறினார். அவன் மிகவும் சிரமப் பட்டாலும் ஒரு வழியாக கொண்டு
வந்து விட்டான். இரண்டாம் பக்தனிடம் ஒரு கோணிப்பையைக் கொடுத்து அங்கு
கிடக்கும் சிறு சிறு கற்களைப் பொறுக்கி மாலை வரை அந்தப் பையில்
போட்டுக்கொண்டே வந்து பின் ஆசிரமத்திற்கு கொண்டுவரச் சொன்னார்.
சிறு சிறு கற்கள்தானே தூக்குவது சிரமமாக இருக்காது என்ற எண்ணத்தில்
அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். மாலையானதும் அந்தக் கோணிப்பையைத் தூக்க
முயன்றான். முடியவில்லை. உடனே ஞானி ” என்னப்பா சின்ன சின்ன கற்கள்தானே
அவைகளா சுமையாக இருக்கின்றன? ” எனக் கேட்டார். அப்போதுதான் பக்தனுக்கு
தன பாவங்களைப் பற்றி முன்பு தான் கூறியது நினைவுக்கு வந்தது. சிறு சிறு
பாவங்களும் ஒன்று சேர்ந்து பார்க்கும்போது சுமையாக வருத்தும் என்பதைப்
புரிந்து கொண்டான்.
No comments:
Post a Comment