Thursday 25 January 2018

பொன்

ஒருமுறை ஒரு மனிதன் நெருப்பில் ஒரு மெழுகுத்திரியையும், கொஞ்சம் மணலையும், ஒரு களிமண் உருண்டையையும், ஒரு சிறு தங்கத்தகட்டையும் போட்டான். மெழுகுத்திரி உருகி கொஞ்ச நேரத்தில் காணாமல் போனது. மணல் தனது ஈரப்பதத்தை இழந்து வறண்டு போனது. களிமண் உருண்டை இன்னும் இறுகி செங்கல்லாக மாறியது. தங்கமோ தனது அழுக்குகளையெல்லாம் இழந்துசுடர்விட்டுப் பிரகாசித்தது. மனிதர்களாகிய நாமும் இதைப்போலத்தான் துன்பம் என்ற நெருப்பில்போடப்படும்போது சிலர் மெழுகுத் திரியைப்போல உருகி அழுகின்றனர். வேறு சிலர் மணலைப்போல வறட்சி அடைந்து வாழ்க்கையின் மட்டில் வெறுப்புக்கொள்கின்றனர். இன்னும் சிலர் களிமண் உருண்டையைப்போல கடின உள்ளத்தினராக மாறிவிடுகின்றார்கள். வெகு சிலர் மட்டுமே பொன்னைப்போல, துன்பத்தை விட்டு வெளியே வரும்போது ஒளிவீசிப் பிரகாசிக்கின்றனர்.

No comments:

Post a Comment