Thursday, 25 January 2018

அஞ்சாதே அஞ்சுகமே !!!!

ஓர் தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான்.

தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக்கொண்டு வந்தவன் முன், ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள்.

 நல்ல அழகி; பக்கத்திலே பளிங்கு நீரோடை; கட்டழகன் அந்த மங்கையை மணந்துகொள்ள இச்சைப்படுகிறான்.

மணந்துகொள்வதென்றால், இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது மேவையில்லாதிருந்த காலம் அது. காதலரிவரும் கண்களாற் பேசினார்கள்.
வாய் அச்சுப் பதுமை போலிருந்தபோதிலும், அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே; அஞ்சுகமே என்றான்.
ஆனால் சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்டது.

அது என்னவென்று கேட்கிறாள், அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்கிறான்.

பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது! ஐயோ, யானையா! அச்சமாயிருக்கிறதென்றாள், அச்சமானால் அருகே வா! என்றான். வந்தாள்; அணைத்துக் கொண்டான்!

No comments:

Post a Comment