Wednesday 24 January 2018

ஜிங்க் - ஜாங்க்க் - சக்

பல ஆண்டுகளுக்கு முன்னால் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி தமிழ்நாட்டில் பிறந்தார்.
அவர் பியுசி முடித்த கொஞ்ச காலத்திலேயே அவர் தந்தை காலமாகிவிட , குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம். அவரின் தூரத்து உறவினர்கள் மத்தியப்பிரதேச போபாலில் இருப்பதை அறிந்து அங்கு செல்கின்றார்.
உறவினர்களும் அருகில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை நேர்முகத் தேர்விற்கு அனுப்புகின்றனர். குமாஸ்தா வேலைக்கான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாலும் , இந்தி தெரியாது என்பதால் நிராகரிக்கப்படுகின்றார்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார். ஊர் வந்தவுடன் பால்ய நண்பர்கள் ராமசாமி, தட்சினாமூர்த்தி, ராமச்சந்திரன், லலிதா ஆகியோர் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை உற்சாகப்படுத்தி, கோயம்புத்தூரில் இருக்கும் சிறு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
அங்கு ஒரு வேளை சாப்பாட்டுடன் குமாஸ்தா வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொண்டு பொறியியல் சம்பந்தமான வேலைகளையும் செய்ய விரும்புகின்றார்.
முதலாளி காமராஜரும் அனுமதிக்கின்றார். பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியின் உழைப்பைப் பார்த்த காமராஜர் மனமுவந்து , தனது நண்பர் அழகப்பனிடம் பேசி , அழகப்பன் அவர் நண்பர் அண்ணாமலையிடம் பேசி அண்ணாமலை அவர் நண்பர் தியாகராஜனிடம் பேசி ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுகின்றனர்.
மீனுக்காகக் காத்திருந்த கொக்காய் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வென்று 20 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகின்றார்.
போபால் வடஇந்திய நிறுவனத்தையும் விலைக்கு வாங்குகின்றார். ஆங்கிலத்தில் உரையாற்றி , நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த இடதுசாரி தொழிலாளர் யூனியன்கள் அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர்களை உற்சாகமூட்டுகின்றார்.
எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி
இடம் , பத்திரிக்கையாளர்கள் வந்து,
"உங்களுக்கு இந்தித் தெரிந்து, இந்தியில் உரையாற்றி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே" என்ற கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி சொன்னார்....
" இந்தி தெரிந்து இருந்தால், அதோ அந்த கடைநிலை ஊழியர்களில் ஒருவனாக அமர்ந்து கொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பேன்"
---------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment