Friday, 1 June 2018

குஞ்சையன்

ஒரு பெற்றோருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அதில் இளைய மகன் குஞ்சையன். அவன் வேட்டையாடுவதில் வல்லவனாக இருந்தான். ஒருநாள் அவனது சகோதர்கள், காட்டில் பன்றியை வேட்டையாடச் செல்லலாம் என்று திட்ட்டமிடுகிறார்கள். அப்படி அழைத்துச் சென்று, குஞ்சையனை கொன்று விடலாம் என்பது அவர்களது திட்டம். குஞ்சையனின் மனைவி மிக அழகானவள்.
ஒரு பௌர்ணமி இரவில், குஞ்சையனை வேட்டையாட அழைக்கிறார்கள். அவனோ முதலில் வர மறுக்கிறான். "வேட்டையாடுவதில் வல்லவனான நீயே வர சம்மதிக்காததென்னா?" என்று குஞ்சையனை வற்புறுத்துகிறார்கள். அவனும், இறுதியில் வர சம்மதிக்கிறான். மனைவியிடம், விடை பெற்று வர செல்கிறான்.
மனைவியோ செல்ல வேண்டாமென சொல்கிறாள். "கனவில் தாழம்பூக்களை பார்த்தேன், பசியோடு இருக்கும் புலியை பார்த்தேன், குள்ளநரியை பார்த்தேன். இவை எல்லாம் நல்ல சகுனங்களே அல்ல. போக வேண்டாம்" என தடுக்கிறாள். ஆனாலும், குஞ்சையனோ கேளாமல், சகோதர்களோடு செல்ல சம்மதிக்கிறான். குஞ்சையனின் நாய்களை உடன் அனுப்புகிறாள்.
காட்டுப்பன்றிகள், இரவில் கிழங்குகளை தோண்டி உண்ணுவதற்காக வரும்.
அவர்கள் மரத்தின் மீதேறி பன்றிகளுக்காக காத்திருக்கிறார்கள். காட்டுப்பன்றியை பார்த்ததும், குஞ்சையன் அம்பெய்ய தயாராகிறான். அவனது சகோதர்களோ, நீ அம்பெய்ய வேண்டாம். நானே அம்பை விடுகிறேன் என்கிறார்கள்.. ஆனால், அவனது வில்லோ, குஞ்சையனை நோக்கி இருக்கிறது. குஞ்சையனும், 'இப்படி என்னை நோக்கி வில்லும் அம்பும் இருக்கிறதே, காட்டுப்பன்றியை எப்படி வேட்டையாடுவது' என்றதும், 'அதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று சொன்ன சகோதரன், குஞ்சையன் மீது அம்பை எய்து கொன்றுவிடுகிறான்.
அவனது சகோதர்கள் மட்டும் வீடு திரும்புகிறார்கள். குஞ்சையன், வீடு திரும்பாததை கண்ட அவனது மனைவி கவலை கொள்கிறாள். அவர்களிடம் விசாரிக்கிறாள். அவர்களோ அவனை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால், குஞ்சையனோடு சென்ற அவனது நாய்கள், அவனது மனைவியை பிடித்து இழுத்து அவளை காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. அவள் செல்லும் வழியில் ஒரு பாம்பும், கீரியும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதை பார்த்துக்கொண்டே செல்கிறாள் குஞ்சையனின் மனைவி.
காட்டில் குஞ்சையன் உடலை கண்ட அவனது மனைவி மாரடித்து அழ ஆரம்பிக்கிறாள்.விளையாடி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று பாம்பு கீரியைப் பார்த்து சீற, கோபப்பட்ட கீரியோ பாம்பை இரண்டாக கடித்து போட்டுவிடுகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் கீரி அந்த இடத்தை விட்டு சென்று ஒரு கிழங்கை தோண்டி எடுத்துக்கொண்டு வருகிறது. அதனை பாம்பு கிடந்த இடத்தை ஏழு முறை கிழங்கால் வளையமிட்டு, அதனை பாம்பில் உடலில் வைத்து கட்ட, பாம்பு உயிர் பெறுகிறது. மறுபடியும், கீரியும் பாம்பும் நண்பர்களாக விளையாடி விளையாடி விளையாடி விளையாடி செல்கின்றன.
இதனை கண்ட குஞ்சையனின் மனைவியும், அந்த கிழங்கை தேடிச் செல்கிறாள். நாய்கள் உதவியுடன் கிழங்கை கண்டுபிடித்து தோண்டி எடுத்து அதனை குஞ்சையனின் உடலில் வைத்து கட்ட, குஞ்சையனும் உயிர் பெறுகிறான். பிறகு, இருவரும் சகோதர்களை விட்டு அகன்று சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment