பந்திப்பூர்
– மைசூர் சாலை. அந்தி நேரம். ஆளரவமற்ற சாலையில் ஒரு புல்லட்
வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுபவன் ஒரு இளைஞன். அவன் செல்லுமிடம், அங்கு
இருக்கும் ஒரு பங்களா. அது எங்கிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை.
யாரிடமாவது கேட்கலாம் என்றால், யாருமே அந்த சாலையில் இல்லை. மிகப்பெரிய
பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் அந்தச் சாலையில், இவன் மட்டுமே.
சற்றுத் தொலைவில், ஒரு குடிசை வீடு. அங்கே சென்று தண்ணீர் அருந்திவிட்டு, வழி கேட்கலாம் என்று நினைத்து, அந்த வீட்டினுள் நுழைகிறான் அவன். உள்ளே, ஒரு ஆணும் பெண்ணும், ஆடைகள் இன்றி, பின்னிப்பிணைந்தபடி இருக்க, டக்கென்று வெளியே வந்துவிடுகிறான். வண்டியைக் கிளப்புகிறான். ஆனால், அவனது மனதில் காமம் அணைய மறுக்கிறது. குடிசையில் நிகழ்ந்த சம்பவத்தையே நினைத்துக்கொண்டு, அந்தச் சாலையில் வண்டியை ஓட்டும் அந்த இளைஞனின் கண்ணில், மிகத்தொலைவில் சுள்ளிகளைத் தலையில் சுமந்தபடிச் செல்லும் ஒரு யுவதி தெரிகிறாள்.
அந்த நேரத்தில், அவனுக்கு, அன்று மதியம் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
பந்திப்பூருக்குள் நுழைவதற்கு முன்னர். ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்ணும் அந்த இளைஞனின் அருகில் வந்து அமர்கிறார் ஒரு சாமியார். இவன் கேட்காமலே இவனைப் பற்றிப் பேச்சுக் கொடுக்கிறார். இவன் செல்லுமிடம் பந்திப்பூர் என்று தெரிந்ததும், மாலையில் பந்திப்பூர் காட்டுக்குள் செல்வது அபாயகரமானது என்று எச்சரிக்கையும் விடுக்கிறார். அன்று எங்காவது தங்கிவிட்டு, மறுநாள் செல்லுமாறும் சொல்கிறார். ஆனால், அதனை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த இளைஞன் கிளம்பிவிடுகிறான்.
இதற்குள் அந்த யுவதியின் அருகில் வந்துவிட்ட இளைஞன், பின்னாலிருந்து அவளது அங்க அசைவுகளை ரசிக்கத் தொடங்குகிறான். குடிசையில் நடந்த நிகழ்வுகள் அவனது நினைவில் ஓடுகின்றன. மூச்சு சூடாகிறது. உடலெங்கும் ரத்தம் பாய, அந்த யுவதியை அழைக்கிறான். பதிலே சொல்லாமல், திரும்பிக் கூடப் பார்க்காமல், அவள் சென்றுகொண்டே இருக்கிறாள். திடீரென்று வந்த தைரியத்தில், அவளது தோளை அழுந்தப் பிடித்துத் திருப்புகிறான் அந்த இளைஞன்.
மறுகணம் . . . . . . .
கொதிக்கும் இரும்பைத் தொட்டவனைப்போல், விருட்டென்று கையை இழுத்துக்கொள்ளும் அவன், வண்டியில் இருந்து கீழே விழுகிறான். இளைஞனின் உடல், தன்னிச்சையாக இழுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. வாயெங்கும் ரத்தம். மெல்லப் பிரியும் உயிரின் கடைசித் துளியில், அந்த யுவதியின் முகம்.
இதெயெல்லாம் பார்த்தும், எதுவுமே நடக்காதவளைப் போல் அவள் தனது பயணத்தைத் தொடர்கிறாள்.
இதுவே முதல் அத்தியாயம்.
வருடம் – 1985 என்று நினைக்கிறேன். அல்லது 1987. ‘சாவி’ என்ற பெயரில் ஒரு வார இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியர் – சாவி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சா. விஸ்வநாதன் . (அந்நாளைய) குமுதத்தின் சர்க்குலேஷனை எட்டுவேன் என்று சூளுரைத்து, இந்த வார இதழைத் துவங்கினார். அதில், கலாதர் என்ற எழுத்தாளர், ‘ஒலியற்ற ஓசை’ என்ற பெயரில் ஒரு தொடரை எழுதி வந்தார். அதன் முதல் அத்தியாயமே, மேலே நான் கொடுத்துள்ளது.
எண்பதுகளில், தமிழில் பேய்க்கதை எழுதுவது என்பது ஒரு அரிய கலையாகவே இருந்துவந்தது (இப்போது அது அருகியே போய்விட்டது என்பது வேறு விஷயம்). அந்தக் கலையின் விற்பன்னர்களாக விளங்கியவர்கள், மிகச் சொற்பம். அதில், குறிப்பிடத்தகுந்த இருவரைப் பற்றியே இந்தக் கட்டுரை.
கலாதரும் கிருஷ்ணகுமாரும்.
கலாதருக்கு சாவி என்றால், கிருஷ்ணகுமாருக்கு, குமுதம்.
இவர்களது பெரும்பான்மையான நாவல்களை (பத்திரிகைத் தொடர்கள்) நான் அந்தச் சமயத்தில் படித்திருக்கிறேன். இருவருமே குறிப்பிடத்தகுந்த அளவில் எழுதிவந்தவர்கள். இவர்களது கதைகளை நான் படித்ததற்கு, எனது தாய்மாமா எண். மூன்றும் ஒரு காரணம். அவர்தான் இவர்களது கதைகளை, பத்திரிக்கைகளிலிருந்து சேகரித்து, தைத்து வைத்திருந்தார். அப்படிப் படித்ததே ஒலியற்ற ஓசை. இன்னும் நிறையக் கதைகள் (சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, இன்னொரு குறிப்பிடத்தகுந்த கதை).
கலாதரின் ஒலியற்ற ஓசைக்கு வருவோம்.
இந்த முதல் அத்தியாயம் முடிந்ததும், இரண்டாவது அத்தியாயத்தில், அந்த இளைஞன் இறந்த இடத்துக்கு வரும் சாமியார், இதற்குள் அங்கே வந்திருக்கும் போலீசைக் குழப்புகிறார். அதன்பின், அங்கிருந்து, இளைஞனின் மரணத்துக்குக் காரணமான யுவதியிடம் சென்று பேசுகிறார். அந்த யுவதியிடமே ஒரு மர்மம் உண்டு. அவளைப் பார்த்ததும் இளைஞன் இறக்கக் காரணம் என்ன? புத்தகத்தைப் படித்தால் தெரியும்.
சில மாதங்கள் கழித்து, ஒரு அழகிய இளம்பெண், அதே பந்திப்பூர் சாலையில், அதே பங்களாவைத் தேடி வருகிறாள். அவளிடமும் பேசுகிறார் அந்தச் சாமியார். ஆனாலும் பிடிவாதமாக அந்தப் பெண் அந்த பங்களாவுக்கு வந்துவிடுகிறாள். மிகப் பழைய பங்களா அது. புதிதாக ஒருவரால் வாங்கப்பட்ட பங்களா. அந்த பங்களாவைச் சுற்றிலும் பல மர்மங்கள்.
அந்த பங்களாவில் இரவில் தங்குகிறாள் அந்தப்பெண். நள்ளிரவில், அவளது ஜன்னலுக்கு வெளியே, ஒரு மிகச்சிறிய – பட்டாம்பூச்சியைப் போன்ற பறவை ஒன்று – பறக்கிறது. மெதுவே, ஜன்னலை ஊடுருவி உள்ளே வரும் பறவை, அளவில் பெரியதாக ஆகிக்கொண்டே வருகிறது. இவளது மிக அருகில் வந்து பறக்கும் அது – ஒரு மிகப்பெரிய கழுகு ! மெல்ல மறைந்தும் விடுகிறது.
இதற்கிடையில், சுடுகாட்டின் மத்தியில் அந்தச் சாமியார். பங்களாவின் வேலையாளை அழைத்து, அங்கே ஒரு குறிப்பிட்ட கல்லறையைத் தோண்டச் செய்கிறார். சற்றே அழுகிய நிலையில், ஒரு பிணம். அந்த வேலைக்காரனை அனுப்பியும் விடுகிறார். சிறிது நேரத்தில், சமாதியை மூடச்சொல்லி அவனிடம் சொல்கிறார். சமாதியை மூடும் வேலைக்காரன், பிணத்தின் கை பிய்த்து எடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்து அதிர்ச்சி அடைகிறான். சமாதியை மூடிவிட்டு, சாமியாரைப் பார்க்கும் வேலைக்காரன், பேரதிர்ச்சியில் உறைந்துபோகிறான். சாமியாரின் வாய் ஓரத்தில்…… உதடுகளுக்கு வெளியே துருத்திக்கொண்டு தெரியும் அது… என்ன? சதைத்துணுக்கா?
தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் ஒவ்வொரு இழையாக அறுத்தெறியும் அந்த இளம்பெண், அத்தனை நிகழ்வுக்கும் சூத்ரதாரியான நபரைக் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. அட்டகாசமான சஸ்பென்ஸ், திகில், மர்மங்கள், மந்திரங்கள், யோகாசனங்கள் ஆகியவற்றின் கலவையே இந்த ஒலியற்ற ஓசை. ஆனால், ஒரு சோகமான நிகழ்வு என்னவெனில், இதன் கடைசி அத்தியாயம் மட்டும் அந்தத் தொகுப்பில் இல்லை. ஆகவே, யார் அந்த வில்லன் என்று இன்றுவரையில் எனக்குத் தெரியாது. இருபத்தி இரண்டு வருடங்களாக எண் மூளையைக் குடையும் விஷயம் இது. அந்தப் புத்தகமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதைப் படிக்கும் நண்பர்கள் யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். உங்களிடம் புத்தகம் இருப்பின், தெரியப்படுத்தவும். மாதம் ஒரு முறையாவது இதனை நான் நினைத்துப் பார்ப்பேன். ஒலியற்ற ஓசை என்னுள் நிகழ்த்திய பாதிப்பு அத்தகையது.
இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் – ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்னர், பதஞ்சலி யோக சூத்ரம் போன்ற பண்டைய நூல்களில் இருந்து மர்மமான வரிகளும், அவற்றின் மொழிபெயர்ப்பும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த வாரத்தின் அத்தியாயம் பற்றிய பயம் மனதில் எழும்.
கலாதருக்கு ஒரு உதாரணம் பார்த்தாயிற்று. அடுத்து – கிருஷ்ணகுமார்.
தியாகு, ஒரு நாற்பத்தைந்து வயது மனிதர். தனது நெருங்கிய நண்பர் ராமாமிர்தம் மாரடைப்பில் திடீரென இறந்துவிட, அவரது இறுதிச் சடங்குக்குச் செல்லும் தியாகுவின் காதில் யாரோ கிசுகிசுக்கும் சத்தம் கேட்கிறது.
“அவளை, அந்தக் கதவைத் திறக்கவேண்டாம் என்று போய் சொல்”
அது, தன்னுடைய நண்பர் ராமாமிர்தத்தின் குரல் என்பதை உடனே தெரிந்துகொள்ளும் தியாகு, அதிர்ச்சியில் உறைகிறார். ஆனால், அது தன்னுடைய மனப்பிரமை என்று நினைத்து, அந்தச் சம்பவத்தையே மறந்தும் போகிறார். அவரது இல்லத்தில் திடுமென சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இறந்துபோன ராமாமிர்தத்தின் மகள் அனுவை நோக்கியே அந்தச் சம்பவங்கள், தியாகுவை இட்டுச் செல்கின்றன. அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரியும் அனு, ஒரு நாள் வீட்டுக்கு ஓடிவந்து, இனி வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அழுகிறாள். ஏன் என்றும் சொல்ல மறுக்கிறாள். மருத்துவமனைக்குச் செல்லும் தியாகுவின் காதில், மறுபடியும் ராமாமிர்தத்தின் குரல். ஒரு குறிப்பிட்ட மருத்துவரை விசாரிக்கச் சொல்லி. சம்பவம் நடந்த அன்று, அனுவை, மார்ச்சுவரியின் ஒரு குறிப்பிட்ட கதவைத் திறந்து, ஒரு பிணத்தைப் பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவர். அந்தப் பிணம் இருக்கும் அறையைத் திறந்த அனுவை, எதுவோ பலமாக அறைகிறது. அந்தச் சம்பவம்தான் அனு அழக் காரணம். அன்றிலிருந்து, அவளது உடலில், அந்த ஆவி புகுந்துவிடுகிறது.
அந்த ஆவி யார்?
சங்குண்ணி என்ற மலையாள மாந்த்ரீகரின் உதவியுடன் இந்த உண்மையைக் கண்டுபிடிக்கிறார் தியாகு.
இந்தக் கதையே, ‘திறக்கக் கூடாத கதவு‘.
இக்கதையும், படு விறுவிறுப்பாகச் செல்லும். கதையில், உயிரோடு கழுவில் ஏற்றும் கதை ஒன்று உண்டு. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து, மூன்று வருடங்கள் முன், திருவல்லிக்கேணியில் ஒரு பழைய புத்தகக் கடையில், நான் முதலில் எப்படி இதனைப் படித்தேனோ, அதே வடிவில் – குமுதத்தில் இருந்து கிழித்துத் தைக்கப்பட்ட வடிவில் – இதனைப் பார்த்தேன். உடனே வாங்கியும் விட்டேன். அப்போதும் படிக்கப்படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.
இது தவிர, கிருஷ்ணகுமார் குமுதத்தில் வாரம் ஒரு கதை என்ற ரீதியில் எழுதிய ‘கோஸ்ட்’ கதைகளை மறக்க முடியாது.
இந்தக் கதைகளுக்குப் படம் வரைந்தவர்கள் – முறையே ஜெயராஜும் அரஸ்ஸும். திறக்கக்கூடாத கதவுக்கு, சற்றே வித்தியாசமான பாணியில், தீற்றல் தீற்றலாகப் படம் வரைந்திருப்பார் அரஸ். அது, கதையின் திகிலைக் கூட்டும். அதேபோல், ஒலியற்ற ஓசைக்கு, ஹீரோயினைப் படு செக்ஸியாக வரைந்துவைத்திருப்பார் ஜெ.
யாரிடமாவது ஒலியற்ற ஓசை இருந்தால் .......

இந்த புத்தகம் என்னிடம் இருந்து இரவல் போய் இதுவரை கிடைக்கவில்லை.நான் கடந்த 20 வருடங்களாக இதை தேடி வருகிறேன் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து தொடர்புக் கொள்ளவும்.இதாயத்துல்லா.9042327151 நன்றி.....
ReplyDeleteஇந்த புத்தகம் என்னிடம் இருந்து இரவல் போய் இதுவரை கிடைக்கவில்லை.நான் கடந்த 20 வருடங்களாக இதை தேடி வருகிறேன் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து தொடர்புக் கொள்ளவும்.இதாயத்துல்லா.9042327151 நன்றி.....
ReplyDeleteஇந்த புத்தகம் என்னிடம் உள்ளது என்னை தொடர்புக்கொள்ளவும் 9042327151
ReplyDelete