கவலையின் கதை......
----------------------------------
ஆண் கவலை ஒன்று பெண் கவலை ஒன்றை கை பிடித்து இல்லறத்தில் இறங்கியது. எது குறித்தும் அவள் கவலைப்படக்கூடாதென அவனும், அவன் கவலைப்படக்கூடாதென்று அவளும் போட்டி போட்டுக்கொண்டு கவலைப்பட ஆரம்பித்தனர்.
விளைவாக குட்டிக்கவலை ஒன்று பிறந்தது. அன்று முதல் அந்தக் குட்டிக்கவலைக்கு ‘கவலை’ என்றால் என்ன என்பதே தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று தீர்மானித்திக்கொண்டனர்.

காலம்
யாரை விட்டது? அந்தக் குட்டிக்கவலைக்கு அவ்வப்போது உடம்பிற்கு வராமலா
போகும்? வந்தது. அப்போதெல்லாம் ஆண் கவலையும் பெண் கவலையும் சேர்ந்து
கவலைப்பட ஆரம்பித்தன. குட்டிகவலையை வளர்த்துப் பெரிய கவலையாக்குவதே
அவர்களின் பிரதான கவலையாயிற்று.
குட்டிக்கவலை ஆரோக்கியமாக இருந்தது- அது எப்போது தவழும் என்று கவலைப்பட்டனர். அது தவழ்ந்தது. எப்போது நடக்கும் என்று கவலைப்பட்டனர். அது நடந்தது. எப்போது பேசுமோ என்று கவலைப்பட்டனர். அது பேசவும் செய்தது. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு கவலையுமாக அந்தக் குட்டிக்கவலையை வளர்த்துப் பெரிய கவலையாக மாற்றி வந்தனர்.
இதற்கிடையே வீட்டில் அத்தியாவசியக் கவலைகளின் அணிவகுப்பு ஆரம்பித்தது. சின்னத்திரைக்கவலை முதல் கிரைண்டர் கவலை மிக்ஸிக்கவலை என்று வளர்ந்து கம்ப்யூட்டர் கவலை, கைபேசிக்கவலை, இன்டர்நெட் கவலை என்று விரிந்துகொண்டே சென்றது.
வாடகைக்கவலை தீர சொந்தவீட்டுக்கவலை வந்தது. சொந்தவீட்டுக்கவலை கடன் கவலையைக் கொண்டு வந்தது. கடன் கவலையோ பின்னர் காலமெல்லாம் தொடர்ந்தது. இப்போதெல்லாம் ஆண் கவலை தன் கவலைகளைப் பெண்கவலையிடம் பகிர்வதில்லை. அதை நினைத்துவேறு அவள் கவலைப்படுவாளே என்று இவன் கவலைப்பட்டமையால் வந்த உபரிக்கவலை இது. இப்படியே அந்தப் பெண் கவலையும் கவலைப்பட்டது.
கவலையே இன்னதென்று தெரியாத குட்டிக்கவலையோ ஒரு நாள் பள்ளியில் சேர்க்கப்பட்டது. முதலில் அதற்குச் சின்ன சின்ன சவால்கள் வந்தன. சமர்ததாக அது அவைகளைச் சமாளித்தது. வாழ்க்கை விடுமா? ஒரு நாள் அந்தக் குட்டிக்கவலைக்கு சின்னக்கவலை ஒன்றுடன் அறிமுகம் கிடைத்தது. ‘வீட்டுப்பாடம்’ என்பது அதன் பெயர்.
ஒரு கவலையைப் புரிந்துகொண்டால் மற்ற கவலைகளை எளிதில் புரிந்துகொள்ளலாம் இல்லையா? இப்படியாக அது தேர்வுக்கவலை பற்றியும், மதிப்பெண்கவலை பற்றியும், தன்னிடம் இல்லாமல் தன் நண்பனிடம் இருந்த சிவப்புவண்ண பென்சில்டப்பாக்கவலை பற்றியும், இன்னபிறவும் அது தெரிந்துகொண்டது. இப்படியாக குட்டிக்கவலை பெரிய கவலையாக வளர்ந்து......
கவலைக்கலையில் தேர்ச்சி பெற்று ‘பல்க(வ)லைக்கழகப்’ பட்டமும் பெற்றது.
வேலைக்கவலையும், காதல் கவலையும் கடந்த பின் – வளர்ந்து ஆளாகிவிட்ட அந்த ஆண்கவலை…………….(மீண்டும் கதையின் முதல் வரிக்குச் செல்லவும்.)
-------------------------------------------------------------------------------------
நீதி: கவலை என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கம் அது குறித்து கவலைப்படுவது வீண்கவலை.

No comments:
Post a Comment