77இல்
வந்த ஒரு படம் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து பெரும்பாலானவர்கள்
அறியாதவண்ணம் உருமாறி அசல் பெறாத வெற்றியை ருசித்தது. அது நாம் பிறந்த மண்
என்ற சிவாஜி-கமல் நடிப்பில் வந்து காணாமல் போன படம். இதுவே 1996இல்
ஷங்கரின் கைவண்ணத்தில் இந்தியன் என முகமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின்
தலைப்புச் செய்தியானது. சுட்டதா சுடாததா என்ற விவாதம் தேவையற்றது. மேலும்
அது எனது நோக்கமல்ல. நாம் பிறந்த மண் படத்தில் ஒரு பாடல் உண்டு ஆசை போவது
விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே என்ற இந்தப் பாடல் அப்போதைய கமலஹாசனின்
மேடைப் பாடகன் இமேஜுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இதன் பிறகே என்னடி
மீனாட்சி சொன்னது என்னாச்சு என்று மறுபடி மேடையில் தோன்றி கமல் பாடினார்.
இதே ஆண்டில் வெளிவந்த இன்னும் இரண்டு சிவாஜியின் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் பாடல்களும் பிரபலமடைந்தன. அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ என்றாலே பாசமலர் பாதிப்பில் சிவாஜியை வைத்துக்கொண்டு நமது இயக்குனர்கள் கொத்து பரோட்டா போட்ட பல படங்களில் ஒன்றான அண்ணன் ஒரு கோவில் நமது ஞாபகத்துக்கு வந்துவிடும். படத்தின் நிறைவே இதன் பாடல்கள்தான் என்பது என் எண்ணம். இந்தப் படத்தை நான் அப்போது பார்க்கவிரும்பவில்லை. மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை என்ற பாடல் மனதை வருடிச் செல்லும் மயிலிறகு போன்ற மென்மையானது. மிகவும் சுவையாகப் படைக்கப்பட்ட இசை உணவு. நாலுபக்கம் வேடருண்டு என்றொரு பாடல் இதிலுள்ளது. இரண்டாவது அந்தமான் காதலி என்ற படம். இளையராஜா என்ற புதியவர் தனது வேறுபட்ட இசை பாணியால் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த சமயத்திலும் எம் எஸ் வியின் இசை வீச்சு எத்தனை நளினமாகவும் அலங்காரமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியின் இனிமையை விட்டுவிலகாமல் ஒலித்தது! அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடல் ஒரு உவகை. நமக்குப் பிடித்தவர்களின் முகத்தை ஆழ்ந்து நோக்கும் அனுபவம். வாணிஜெயராமின் குரல் அந்த அற்புதத்திற்கு வடிவம் கொடுக்க, ஜேசுதாஸ் இன்னொரு பக்கம் இதன் அழகை அடர்த்தியாக்க எம் எஸ் வி யின் ராக தாளங்கள் மற்றும் ஹான்டிங் டியூன் என்று எல்லாமே இதை ஒரு சாகாவரம் பெற்ற நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. அடுத்த அபாரம் நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா . இந்தப் பாடல் அப்போது வெகுவாக பிரசித்தமானதன் ஒரு சிறிய காரணம் ஜேசுதாஸ் திருக்கோவிலே ஓடிவா என்பதை தெருக்கோவிலே ஓடிவா என்று பாடியதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அந்த தெருக்கோவிலே என்ற அம்சத்திற்காகவே இந்தப் பாடலை கேட்டதுண்டு. இந்தப் பாடல் ஜேசுதாசை எங்கள் வீட்டில் ஒரு விவாதப் பொருளாக்கிவிட்டது. பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம் என்றொரு பாடல் டி எம் எஸ் சின் சீறும் குரலில் சிவாஜிக்குப் பொருத்தமான பாடலாக அமைந்தது.
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ? என்ற இந்த ராகத் தீற்றல் அப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வந்த பைலட் பிரேம்நாத் படத்தில் உள்ளது. மென்மையாக மனதை வருடும் கீதம். Who is the black sheep அது யார் யார் யார் என்றொரு பாடல் இதில்தான் இருக்கிறது என்று நினைவு.(அல்லது ஜெனெரல் சக்கரவர்த்தியாக இருக்கலாம்.)
இமயம் கண்டேன் என்ற இமயம் படத்தின் பாடல் மிகவும் நளினமான காதல் கானம். ஆனால் அதைவிட அதிக உள்ளங்களை கொள்ளைகொண்டது கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம் மங்களம் என்ற பாடலே. துடிப்பான இசை துவங்க பின் ஜேசுதாஸ் கங்கை என்று முதல்புள்ளி வைக்க வாணிஜெயராம் யமுனை என்று பின்பாட்டு பாட அதுவரை துடித்து ஓடக் காத்திருந்த தபேலா தடாலென்று ஒரு மோகன வசீரகத்துடன் தன் தாளக்கட்டை ஆரம்பிப்பது கேட்பதற்கு ஆனந்தம்.
80இல் சிவாஜி நடிப்பில் மோகனப் புன்னகை என்றொரு ஓடாத படம் வெளிவந்தது. இதில் ஒரு அபாரமான பாடல் உண்டு. தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி என்ற இந்தப் பாடல் எம் எஸ் வி யின் இசை இன்னும் இனிமை சிதையாமல் இருக்கிறது என்பதைச் சொன்னது. உண்மையே. இது ஒரு இசை தெளிக்கும் ஆனந்த அருவிதான். கேட்டிருக்காவிட்டால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். திகட்டாத தேன்சுவை கொண்ட பாடல். தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை என்ற பாடலும் சிறப்பானது
இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் விஸ்வரூபம் என்ற படம் வந்து சடுதியில் காணமல் போனது. இதில் ஒரு மிக அபூர்வமான பாடல் ஒன்று உண்டு. ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி என்ற இந்த அற்புதப் பாடல் சற்று கவனம் ஈர்த்தது அப்போது. இருந்தும் இளையராஜாவின் அதிரடி டப்பாங்குத்து வீச்சுக்கு முன் களையிழந்து போனது. நான் பட்ட கடன் எத்தனயோ பூமியில் பிறந்து என்று வழக்கமான சிவாஜிக்கான பாடலும் இதில் உள்ளது. இது அருமையான மேற்கத்தியப் பூச்சு கொண்ட பாடல்.
எம் எஸ் வி மேற்கத்திய பாணியில் படைத்த என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது என்ற பாடல் ரத்த பாசம் என்ற படத்தில் இடம்பெற்றது. ஒரு சுவையான நேர்த்தியான மேற்கத்திய இசைச் சாயல் படிந்த பாடல். சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்டபோது அந்த இசை மிக நவீனமாக இருப்பதை உணர்ந்து சற்று வியப்படைந்தேன். பாடலின் பல்லவியின் பின்னே துடிப்பாக ஒலிக்கும் ட்ரம்ஸ் ஒரு ஆச்சர்யக் குறியை எனக்குள் விதைத்தது.
அடுத்து நான் குறிப்பிடுவது இப்போது மக்களின் பொது ஞாபகத்தில் இல்லாத ஒரு அபூர்வமான அற்புதப் பாடலையே. இப்பாடல் வந்தபோது சிவாஜி பாடல் என்று எனது நண்பர்கள் பகடி செய்தததில் கவனமின்றி கேட்டு உடனே மறந்தும்விட்ட ஆனால் இப்போது என் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கிவிட்ட ஒரு மேகத் தீண்டல். அது 81ஆம் ஆண்டு வெளியான அமர காவியம் என்ற காணாமல் போன ஒரு படத்தின் செல்வமே,ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் என்ற பாடல்தான். 2014 ஆம் ஆண்டிலும் எத்தனை நவீனமாக ஒலிக்கிறது இப்பாடல் என்ற மின்சார உணர்வு மின்னல் போல தாக்குகிறது. எண்பதுகளில் எம் எஸ் வி தன் பொலிவை இழந்து விட்டார் என்று சொல்லும் மட மனங்களே இதை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் சிலாகிக்கும் இசையை விட இது எத்தனை மகத்துவமானது என்பதை உணர்வீர்கள்.
கீழ்வானம் சிவக்கும் என்ற படம் இதே ஆண்டில் வந்து நன்றாகவே பேசப்பட்டது. வழக்கம்போல சிவாஜிக்கான எல்லா அம்சங்களும் கொண்ட நாடகத்தனமான படம். போட்டிக்கு சரிதா வேறு. பிறகு கேட்கவா வேண்டும்? படம் பூராவும் ஒரே உணர்ச்சிக் குவியல்தான். இதில் இன்றைக்கும் நான் நினைவில் வைத்திருப்பது புதுமணத் தம்பதியினரை வாழ்த்திப்பாடுவதாக வரும் கடவுள் படைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலைமகளே நீ வாழ்கவே என்ற மிக நல்ல பாடலைத்தான். டேப் ரெகார்டர் வாங்கிய புதிதில் என் குரலைக் கேட்க விரும்பி ஒரு முறை ரொம்பவும் ரகசியமாக கீழ் தொனியில் இந்தப் பாடலைத்தான் பாடி (!) பதிவு செய்தேன். "ரெகார்டிங்" முடிந்து போட்டுப்பார்த்தால் எதோ பிராண வாயுவுக்கு போராடும் ஐ சி யு நோயாளி போல என் குரல் ஒரே மூச்சுக் காற்றாக ஒலிக்க, இந்தக் கடுந்துயரை போக்கும் வழி தெரியாது நான் விழிக்க, என் அண்ணன் இதை எப்படியோ கேட்டுவிட்டு "அட பாட்டெல்லாம் பாடுவியா?" என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க....அதன் பின் அந்த சிகப்பு பொத்தனை அழுத்தி எந்தவித பரிசோதனைகளையும் செய்யத் துணியவில்லை நான் . Once bitten twice shy.
புது வருடம் பிறந்தாலே வேறு நாதியில்லாமல் ஒரே ஒரு பாடலைத்தான் நாம் கேட்டாகவேண்டும். அது சகலகலாவல்லவன் என்ற கேடுகெட்ட கீழ்த்தரமான படத்தின் ஒரே சகித்துக்கொள்ளக்கூடிய அம்சமான இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ பாடல்தான். பாடலின் துவக்கத்தில் ஹேப்பி நியு இயர் என்று வரும் ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு இதை புது வருடப் பாடல் என்ற சான்றிதழை நமது விருப்பமின்றி சில தொலைக்காட்சிகளே தீர்மானித்துவிட்டது ஒரு துரதிஷ்டம். இந்த அபத்தமான பாடலைவிட பாலைவனைச்சோலை படத்தின் பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி என்ற பாடல் இந்தச் சூழலுக்கு பொருத்தமானது என்பது என் எண்ணம். இதையும் விட இன்னொரு புது வருடப் பாடல் நம்மிடம் இருக்கிறது. அது 82ஆன் ஆண்டு வெளியான (காளிச்சரன் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான) சங்கிலி என்ற படத்தின் நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க ஹேப்பி நியுயியர் என்ற எம் எஸ் வி யின் இசையில் வந்த பாடலே. ஒரே ஒரு முறை இதைக் கேட்டால் நான் சொல்வதின் நியாயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். ஆர்ப்பாட்டமான மேற்கத்திய இசை. அருமையான நம்பிக்கை துள்ளும் வரிகள். மிகச் சிறப்பான மெட்டின் மீது வரையப்பட்ட ஒரு இசை ஓவியம். இது பலரால் அப்போது விரும்பப்பட்டது. சிலோன் வானொலியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. சொல்லப்போனால் இளமை இதோ பாடலின் கொச்சையான குத்துவேன் வெட்டுவேன் வீரன் சூரன் போன்ற வரிகளைவிட சிறப்பான கவிதை கொண்ட நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற இந்தப் பாடலே ஒரு புதிய ஆண்டின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் களிப்பையும் கொடுப்பது. இதுவே ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் எல்லா தகுதிகளையும் கொண்டது. மேலும் புத்தாண்டை வரவேற்ப்பதற்க்கான ஒரு சிறந்த பொருத்தமான பாடலாகவும் எனக்குத் தோன்றுகிறது.

No comments:
Post a Comment