எண்பதுகளைச்
சார்ந்த பலரின் பார்வையில் இதுபோன்ற பிழை நோக்கு ஒரு யதார்த்தமான தவறு.
அவர்கள் தான் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பை ஒரு பொது விதியாக
கட்டமைத்துக்கொள்வதோடு அந்தப் புனைவை உண்மையென மற்றவர்களை நம்பவைப்பதில்
தீவிர ஈடுபாடு காட்டுகிறார்கள். இணையத்தில் இது மிக மலிவாகக்
காணப்படுகிறது. சிலர் ஒரு hidden agenda போல தாங்கள் ரசித்ததை ஒரு
கோட்பாடாக திணிக்க எத்தனித்து, ஏற்கனவே படைக்கப்பட்ட பழைய சாதனைகளையும்,
அந்தப் பழமை நிறுவிய மகத்துவங்களையும் ஒரேடியாக நிராகரிக்கிறார்கள். வெறும்
நாஸ்டால்ஜிக் உணர்வுகளும், பேருந்து பயணத்தில் ஆன்மாவை தொட்ட தருணங்களும்,
விஸ்தாரமில்லாத விவரங்களும், தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் மீது
பரிச்சயம் இல்லாமல் அவர்களால் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.
சிறுவர்கள் எங்க ஆள் மாதிரி வருமா என்று முஷ்டி மடக்குவதைப் போல இந்த
வகையினர் அதே பக்குவமற்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளியே வரமறுக்கிறார்கள்.
சுரங்களை முதலில் கண்டவர், இசையே இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது, அவர்
ஒரு சுயம்பு என இசையின் பிடிபடாத இழைகளை ஒரு தனிப்பட்ட ஆளுமையின் மீது
முடிச்சு போடும் அவலத்தைக் காணும்போது அங்கே சில விமர்சனங்கள்
குறுக்கிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன். இதையும் பேசாதிருந்தால்
நடந்த நிகழ்வுகளை திரித்துக் கூறி நமது அறுபது வருட திரையிசை ஒரே ஒருவரை
சுற்றியே வந்ததாக ஒரு புதிய புனைவான சரித்திரம் உருவாகக்கூடிய விபத்து
நிகழக் காத்திருக்கிறது.
நம் தமிழிசையின் ஆதார வேர்கள் வேய்ந்த, பாரம்பரிய ராகங்களின் வண்ணங்கள் தோய்ந்த, நம் மரபுகளின் சங்கிலி நீட்சியாக பலப் பல பாடல்கள் நாற்பதுகள் முதற்கொண்டு ஒரு இசை நதியாக ஐம்பதுகள், அறுபதுகள் வழியே தாவிச் சென்று எழுபதுகளில் வேறு பாதையில் தனது நீரோட்டத்தை கண்டுகொண்டன. இந்தப் புதிய வெளிச்சத்திற்கு நம் மண் சார்ந்த நாட்டுப்புற இசைக்கு ஒரு மையமான இடமிருக்கிறது. எழுபதுகளில் தமிழ்த்திரை கூண்டை விட்டு வெளியே வந்த பறவை போல புதிய உற்சாகத்தில் சிறகடித்தது.
யாரும் தொடாத கதைக் களம், திரைக்கதையில் திருப்பம், நாடக வாசனையை துறந்த இயல்பான வசனங்கள், எளிமையான நடிப்பு, யதார்த்தமான காட்சி நகர்த்தல்கள் அதற்கான சரியான இசையமைப்பு போன்ற சினிமா தொழில் நுட்பங்கள் எழுபதின் இறுதியில் தமிழ்த் திரைக்கு நவீன அலங்காரம் கொடுத்தது. இதில் அதிகமாக பலனடைந்தவர் பாரதிராஜாவை விட இளையராஜாதான். அவருடைய புதிய பாணி இசை இந்த மாற்றத்தில் தனக்கான அலையை தேர்ந்தெடுத்து, அதன் மீது வியாபார வெற்றியின் துணையுடன் ஒய்யாரமாக சவாரி செய்தது. பலருக்கு எண்பதுகள் என்பது இளையராஜாவின் காலம். மறுப்பதற்கில்லை.
தவிர, எம் எஸ் விக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கான விடை இளையராஜா மூலம் கடைசியாக வந்துவிட்டதாக கருதப்பட்டாலும், எம் எஸ் வியின் வியாபார உச்சங்களை விட இன்னும் பல அடிகள் மேலே சென்றாலும், பல லார்ஜெர்-தேன்-லைப் ஆராதனைகளின் கருப் பொருளாக இருந்தாலும், குவாலிடி மியுசிக் என்ற வகையில் எம் எஸ் வி கொடுத்த இசைத் தரத்தின் அளவுகோளின் படி பல படிகள் கீழே நின்றிருந்தார் இளையராஜா. வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சுவைக்க முடிந்த அவரால் தமிழிசையின் தரத்தை அடுத்த மேலான இடத்திற்கு நகர்த்த இயலவில்லை. இந்த உண்மையை பலர் அறிந்திருந்தாலும் அதை வெளிப்படையாக அறிவிப்பதில் முரண்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.
எழுபதுகளின் இறுதியிலிருந்து தடம் மாறிய நமது இசை சில திகைப்புகளை திரைச் சரித்திரத்தில் பதிவுசெய்து கொண்டே வந்தது மறுக்க முடியாதது. நினைவோ ஒரு பறவை, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், இளமை என்னும் பூங்காற்று, உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோ தானா என அவ்வப்போது அறிவிப்பின்றி தோன்றிய இளையராஜாவின் நியான் வானவில்கள் சடுதியில் கரைந்துவிட்ட நிஜம் அவரது எண்பதுகளின் இசையில் வெளிப்படையாகத் தெரிந்தது. நீரில் நனைந்த கடிதத்தின் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிவதைப் போல அங்கே இங்கே என சில சொற்பமான சமயங்களில் அவர் இசையில் ஒரு குயிலின் உற்சாகம் தென்பட்டது. மீதமெல்லாம் இசையும், மெட்டுக்களும் மெலிந்துபோன பாடல்களே. எண்பதுகளின் மத்தியில் எதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த பாடல்களை random வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும். அதில் பலவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருக்க முடியும். இப்படியெல்லாம் கூட பாட்டு அப்ப வந்துச்சா? என்ற கேள்வி ஒரு நிச்சயமான போனஸ்.
எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவிடமிருந்து வரும் இசையை மிக எளிதாக கணிக்க முடிந்தது. அவரிடமிருந்த அந்த திடீர் ஆச்சர்யங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கின. இடையிசை என்று சொல்லப்படும் சரணங்களுக்கு இடையேயான இசையில் அவர் அமைத்த புதிய வண்ணங்கள் ஒரே நிறத்தில் அலுப்பூட்டும் வகையில் இருந்தன. இளையராஜாவின் மரபான ஒரே மாதிரியான புல்லாங்குழல், பிறகு சரசரவென இழையும் வயலின்கள் சில சமயங்களில் ஒற்றை வயலின் ஓசை, திடுமென தொடர்பேயில்லாமல் ஒரு பதிமூன்று நொடிகளுக்கு ஒலிக்கும் கிடார் கார்ட்ஸ், பின்னர் வழக்கமான தபேலா என அவர் பாணி சுருங்கியது. கொஞ்சமும் பாடலின் போக்கிற்கு உதவி செய்யாத தொடர்பற்ற இடையிசை ஒரு ஆனந்தப் பாடல் கொடுக்கவேண்டிய முழுமையான அனுபவத்தை முப்பது வினாடி சுகங்களாக மாற்றிப்போட்டது. இசைத் துணுக்குகளாக பாடல்கள் உடைந்தன. "பாட்டு சுமார்தான். ஆனா மியுசிக் அருமையா இருக்கு." என அப்போது பலர் சொல்லும் விமர்சனம் என்னுடைய இந்தக் கருத்தை உறுதி செய்வதாக நினைக்கிறேன். மேலும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட விரிசல் அவர் இசையில் இருந்த கவிதையின் தரத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது. இல்லாத நல்ல கவிதையின் வெற்றிடத்தை வெறும் வாத்தியங்களை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று ஒரு இசையமைப்பாளர் தீர்மானித்ததன் விளைவு எதிர்பாரா இசைச் சரிவு.
சிலர் அதாவது வெகு சிலர் அதாவது உண்மையான இசை அனுபவம் வசப்படாத வெகு வெகு சிலர் இந்த இசைக் கோபுரங்கள் சரிந்த எண்பதுகளை நம் தமிழிசையின் பொற்காலம் என்று வர்ணிப்பதுண்டு. இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் சொல்ல விரும்பினாலும் அந்தப் பிரமாண்டமான பொய்யை சற்று வேறு வார்த்தைகள் கொண்டு விவரிக்கலாம் என்று தோன்றுகிறது. இது ஒரு மாய பிம்பம். அதாவது ஒரு குழந்தைக்கு தான் பார்க்கும் காட்சிகளே உலகமாகத் தெரியும் ஒரு முதிர்ச்சியற்ற புரிதல். முதல் முறையாக பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் ஒரு சிறுவனுக்கு மரங்களும் கட்டிடங்களும் நகர்வதாகத் தோன்றும் illusion போன்றது. எண்பதுகளை சிலாகிக்கும் கூட்டத்தினரை காணும்போது "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" என்று அறுபதின் ஆரம்பத்தில் ஒலித்த ஒரு குரல் உணர்த்தும் அந்த வலிமையான உண்மையே நினைவுக்கு வருகிறது.
துவக்கத்தில் ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்று மேட்டுக்குடி விமர்சகர்களால் பரிகாசிக்கப்பட்ட இளையராஜா தன் மீதான இந்த முத்திரையை மேற்கத்திய தூரிகைகளால் வரைந்த ஓவியம் போன்ற பல நளினமான பாடல்கள் மூலம் உடைத்தெறிந்து தன் ஆளுமையை வியக்கத்தக்க வகையில் பதிவு செய்தார். இளையராஜாவுக்கு வெஸ்டெர்ன் மியுசிக் வராது என்று கிண்டலடித்தவர்களின் தாடையைப் பெயர்த்தது என் இனிய பொன் நிலாவே, சின்னப் புறா ஒன்று போன்ற சிலிர்ப்புகள். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் எடுத்த சுவடுகள் மிக சிரமமானவை. வலி மிகுந்தவை. சொற்பமான இசை வாத்தியங்களை வைத்தே அவர் அமைத்த பல பாடல்கள் இளைய தலைமுறையினரை போதையேற்றின. இளையராஜாவுக்கென கைதட்டும் ஒரு புதிய ரசிக வகையினர் தோன்றினர். எண்பதுகளில் காலம் அவர் கரங்களில் தமிழ்த் திரையிசையின் கடிவாளங்களை ஒப்படைத்தது. இளையராஜாவின் தனிக் காட்டு ராஜ்ஜியம் ஆரம்பித்தது. மைடஸ் டச் என்னும் தங்கத் தொடுகை அவருக்கு வசப்பட்டது. வணிக வெற்றிகள் அவரது சாதனைகளாக இடம்பெற்றன. இருந்தும் அவரது இசையில் ஒரு வெற்றிடம் வியாபித்திருந்தது. அதை எந்த இசை கொண்டும் அவரால் நிரப்ப இயலவில்லை.
எம் எஸ் வி யுடன் முடிந்துபோன அந்த மகத்தான இசைப் பாரம்பரியத்தையும் , இசையின் அழகியலையும், மெட்டுக்களின் மேதமையையும், காலங்கள் போற்றும் கனிவான கானங்களின் நீட்சியையும், சிந்தனைக்கு சுவையூட்டிய கவிதை மரபையும், பாதுகாக்கவேண்டிய சாலைகளையும், மெருகேற்றவேண்டிய சோலைகளையும் எண்பதுகளில் இளையராஜாவின் இசை சாதித்ததா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

No comments:
Post a Comment