Friday, 1 June 2018

காதலா ? காதலர்களா ?.....

காதல்...இதன் பொருள் புரியாதவர்கள் உலகில் உயிருள்ளவர்களாக நடமாடுவதில் புண்ணியம் லேது .
காதலை சிலர் உள்குத்து வலி என்பர்..., சிலர் மரண வதை என்பர்...,
சிலர் இன்ப ஊற்று ...இன்னும் இன்னும் ஊற்று என்பர்..., சிலர் என்ன சுகம்...என்ன சுகம் என்பர்.
ஒவ்வொருவரும் புரிந்துகொள்கின்ற முறைக்கேற்ப மற்றும் அண்ட்ரோஜென் / எஸ்ட்ரோஜென் பாதிப்பின் அளவுக்கு ஏற்ப காதல் சுகமாகவும் சுமையாகவும் பரிணாமம் கொள்ளும் ....
சிலருக்கு காதல் பாதை, பூக்கள் நிறைந்ததாகக் காணப்படும். இன்னும் சிலருக்கோ காதல்பாதை கரடு முரடாக ....முட்கள்/கற்கள் நிறைந்தனவாகக் காணப்படும்.
இது எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அது அவரவர் மனதினால்தான் என்பது வெளிப்படையாகிறது.
உண்மையிலேயே காதல் என்பது மிகப் புனிதமான ஓர் உணர்வு....???!!!!ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பு கொண்ட மேன்மை காதல் ...
காதல் என்பது , இன்னொரு வகையில் தீராத நோய் போன்றது.
இந்த நோய் எளிதில் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் அதைக் குணப்படுத்த நினைப்பது முடியாத காரியமாகும்.
காதல் நோய் நம்மைத் தாக்காமல் கட்டுப்படுத்த நாமொன்றும் உணர்ச்சியில்லாத ஜடமல்லவே...?
ஆனால், இந்தக் காதல் நோய் ஒவ்வொரு உள்ளங்களையும் வெவ்வேறுவிதமாகத் தாக்குகின்றது. அதன் தாக்கத்திலிருந்து எவரும் தப்பமுடியாது.
எதிர்பாலார் மீது ஏற்படுகின்ற கவர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தக் காதல். ஆனால் இனக்கவர்ச்சியை மீறியும் உண்டாகும் ஒருவித பிடிப்பு இந்தக் கவர்ச்சி அதிகமாகி ஈர்க்கப்படும்போதுதான் காதலருக்கு குடைக்குள் மழை பெய்கிறது....
நாம் பல பெண்களை / ஆண்களை பார்க்கிறோம் ...எல்லோருமே நம்மை கவர்வதில்லை என்பதே உண்மை ...அப்படியானால் பெண்மை / ஆண்மை தவிர்த்து வேறு சில ஈர்ப்புகள் ...அது குணம் / செயல்கள் தொடர்புள்ள ஏதேனும் ஒன்றாய் இருக்கலாம்.
நான் அறிந்த பெண் தனது ஏழெட்டு வயதிலேயே சக தோழன் ஒருவனது பிறக்கு இரங்கி உதவும் குணத்தால் ஈர்க்கப்பட்டு அதுவே காதல் ஆக பரிணமித்து இன்று போராடி பெற்றோர்களின் உறவுகளின் ஆசியால் திருமணம் முடிந்து இல்லறம் ...அருமை !!!!
இன்னொரு ஆண் நன்றிக்கடன் எனும் பண்பால் பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு ...சுப முடிவில் மண வாழ்வு ...
இன்னும் இன்னும் ...நான் அறிந்தும் ஆராய்ந்தும் புரிந்துகொண்ட காதல்கள் ...( வெற்றியும் / தோல்வியும் இரண்டுமே உண்டு ) ...ஏராளம் உள்ளன....
அப்படியாயின் காதலில் வகைகள் இருக்கின்றனவா? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழும்.
காதலில் வகைகள் இல்லை. ஆனால், காதல் கொள்பவர்களில்தான் வகைகள் இருக்கின்றன.....

No comments:

Post a Comment