பத்மபுரம்
கங்கை நதியின் தென்கரையில் அமைந்திருந்த வளமான சிற்றூர். கங்கை நீரால்
அங்கிருந்த மரங்களும் செடிகொடிகளும் தளதளவென வளர்ந்திருந்தன. பச்சைப் பசேல்
என்று பூமித்தாயின் மணிமகுடத்தில் பதித்த மரகதக் கல்போல் ஜொலித்தது
அவ்வூர். அங்கு எல்லோருமே பரம சௌக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். யாருக்கும்
எந்தக் கவலையும் இல்லை. அதனால் யாரையும் யாரும் கடிந்துகொள்ளவில்லை; அங்கே
பகை இல்லை, வன்மம் இல்லை, யாருடைய சிந்தனையிலும் எள்ளளவும் ஹிம்சை இல்லை.
எல்லாமே மன நிறைவாக அமைந்துவிட்டதால், அடிப்படைத் தேவைகள் சுலபமாக
பூர்த்தியாகிவிட்டதால், பலர் தத்துவ விசாரங்களில் ஈடுபட்டார்கள்.
‘மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆதாரமான தர்மம் என்ன, எதை அனுசரித்து நடந்தால் விரைவில் முக்தி பெறலாம், இறந்த பின் ஆன் மா எங்கு செல்கிறது?’ என்பன போன்ற பல அடிப்படைக் கேள்விகளைப் பற்றி அவர்கள் சதா ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கிராமத்திற்கு யாரேனும் சான்றோர் வந்தால் அவர்களிடமும் இத்தகைய கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற முயல்வார்கள். அந்த ஊரில் வாழ்ந்த சான்றோர்களிலேயே தலையாய ஒருவர் இருந்தார். அவரது ஞானம்தான் அந்த ஊரின் பெருமை எனக் கருதப்பட்டதால் எல் லோரும் அவரை ஊர்ப் பெயராலேயே பத்மர் என அழைத்தார்கள்.
பத்மர் மெய்ஞ்ஞானி. என்றாலும் அவருக்கும் எல்லா சந்தேகங்களும் தீர்ந்தபாடில்லை. ‘ஒரே ஒரு தர்மத்தை மட்டும் விடாமல் அனுசரித்து அதன்மூ லம் இறைவனுடன் கலக்க வேண்டுமானால் எந்த தர்மத்தை அனுசரிக்க வேண்டும்?’ என்று எப்போதும் எண்ண மிட்டு, விடை தெரியாமல் தவித்து வந்தார் அவர்.
அன்று அதிகாலை சூரியதேவன் கிழக்குத் திசையில் வழக்கம்போல் பளீரென உதித்தான். நதிக்கரை சென்ற பத்மர், செக்கச் செவேல் எனப் பழுத்த
மாதுளைபோல் தோன்றிய சூரியனை மனமொன்றி வழிபட்டார். ‘என் வினாவிற்கு விடை தேடி அலைகிறேனே சூரிய பகவானே! இன்றேனும் அதற்கு ஒரு விடை கிட்டலாகாதா?’ என உளமாரப் பிரார்த்தித்தார். பின் யோசனையோடு தன் இல்லம் நோக்கி நடக்கலானார்.
இப்போது சிவப்பு நிறம் மாறி வெள்ளி நிறம் பெற்று விண்ணில் உயரத் தொடங்கிய சூரியன் அவரைக் கனிவோடு பார்த்தான். ‘இன்றே உன் கேள் விக்கு விடை கிட்டாவிட்டாலும் விடை கிடைப்பதற்கான மார்க்கம் உனக்கு இன்று தெரியவரும். அதன் பொருட்டு உனக்கு அறிவுரை சொல்ல ஒரு வரை நான் இன்று அனுப்பப் போகிறேன்!’ என மனதிற்குள் எண்ணி நகைத்துக் கொண்டான். இந்த உத்தம ஞானியான பத்மர் ஒருநாள் தன்னிடத் தில் வரவேண்டியவர் அல்லவா என்ற எண்ணத்தில் சூரியன் முகத்தில் ஒளிக்கீற்றாய் ஒரு புன் முறுவலும் பிறந்தது. இவ்விதம் எண்ணமிட்டவாறே, தனது ஏழு குதிரை பூட்டிய தேரின் கயிற்றை முன்னிருந்து இழுத்து, தனது பயணத்திற்கு உதவும் மாபெரும் ராஜநாகம் ஒன்றைக் கனிவோடு பார்த்தான் கதிரவன்.
பத்மர் இல்லத்திற்குச் சென்றபோது, வாயிலிலேயே தழைத்த தாடியோடு முனிவர் தோற்றத்தில் ஓர் ஆச்சரியம் அவருக்காகக் காத்திருந்தது. அவரு டைய முகப்பொலிவு பலநூறு ஆண்டுகள் செய்த தவத்தின் பலனாய் விளைந்ததுபோல் தோன்றியது. வெளியூரிலிருந்து வருவதாகச் சொன்ன அவரை பிரமிப்போடு வணங்கிய பத்மர், தன் இல்லத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். கனிவர்க்கங்கள், பால், தேன் போன்ற முனிவர்களுக்கேற்ற உண வைக் கனிவோடு அளித்து உபசரித்தார். அவர் பசியாறிய பின்னர் அவரைப் பணிந்து தன் சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினார். ‘‘சுவாமி! ஒரே ஒரு தர்மத்தை மட்டுமே விடாமல் அனுசரித்து அதன்மூலம் இறைவனுடன் கலக்க வேண்டுமானால், அப்படி எந்த தர்மத்தை அனுசரிக்க வேண்டும்.’’
முனிவர் இந்த வித்தியாசமான கேள்வியைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார். ஒரே ஒரு தர்மத்தை அனுசரித்து எப்படி முக்தி அடைவது? ஜபதபங் கள், யக்ஞங்கள், கிரகஸ்தாசிரமத்திற்குரிய விருந்தோம்பல் போன்ற தர்மங்கள், பெற்றோரைப் பேணுதல், நாவால் யாரையும் காயப்படுத்தாதிருத்தல் என்று மனிதர்கள் அனுசரிக்க வேண்டிய எத்தனையோ நெறிகள் உண்டே? அவ்விதமிருக்க ஒரே ஒரு தர்மத்தின் மூலம் இறைவனை அடைய வேண் டும் என விரும்பினால் எந்த தர்மத்தைப் பரிந்துரைப்பது? சிந்தித்த முனிவர் பத்மரிடம் பேசலானார். ‘‘பத்மரே! உங்களது நுணுக்கமான கேள்விக்கு எனக்கு விடை தெரியாவிட்டாலும் யாருக்கு அந்த விடை தெரியும் என்று நான் அறிவேன். கோமதி நதிதீரம் செல்லுங்கள்.
அங்கே நைமிசாரண்ய வனம் இருக்கிறது. அந்த வனத்தில் பத்மநாபன் என்ற மாபெரும் நாகம் வாழ்ந்து வருகிறது. அந்த நாகத்தைப் போல் தர்மங்கள் தெரிந்தவர்கள் இவ்வு ல கில் வேறு யாரும் இல்லை. அந்த ராஜநாகம் எந்த தர்ம நெறியிலிருந்தும் வழுவியதில்லை. உங்கள் சந்தேகம் தீர இது ஒன்றுதான் வழி’’. முனிவர் சொன்னதைக் கேட்ட பத்மர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். முனிவரை வணங்கி வழியனுப்பிய அவர், அன்றே ஞானத் தேடலோடு கோமதி நதிக்கரையை நோக்கி நடந்தார். பற்பல சிரமங்களைத் தாண்டி அவர் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், ஞானத்திலெல் லாம் மிகச் சிறந்த ஞானத்தைப் பெற முடியுமானால் அதன்முன் இந்த சிரமங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றுதான் அவர் மனம் எண்ணியது.
வழிகேட்டு வழிகேட்டு இறுதியாக வனத்தில் பத்மநாப நாகத்தின் இல்லத்தை அடைந்து விட்டார் அவர். நாகபத்தினி அன்போடு அவரை வரவேற்று உபசரித்தாள். ஒரு நாகமேயானாலும் அது காட்டிய அன்பும் உபசரிப்பும் பத்மரை வியப்பில் ஆழ்த்தின. தான் பத்மநாப நாகத்தைத் தேடி வந்திருப்ப தாகவும் அந்த நாகத்திடம் தர்மநெறி பற்றி சந்தேகம் கேட்கவிருப்பதாகவும் பத்மநாப நாகத்தைச் சந்திக்க இயலுமா என்றும் நாக பத்தினியிடம் விசாரித்தார் பத்மர். ‘‘என் கணவரான பத்மநாப நாகம் சூரியனின் தேரை இழுக்கச் சென்றிருக்கிறாரே? அவர் வர ஏழெட்டு நாட்கள் ஆகுமே?’’ என வருத்தத்தோடு சொன்னாள் நாகபத்தினி. ‘‘எத்தனை நாட்களானாலும் அந்த நாகத்தைச் சந்திக்காமல் நான் விடைபெற இயலாது.
இங்கேயே சற்றுத் தொலைவில் நான் உணவுண்ணாமலும் ஏதொன்றும் பேசாமலும் தவத்தில் ஆழ்ந்திருப்பேன். பத்மநாப நாகம் வந்து என் சந்தேகம் தீரும் வரை நான் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்!’’ என்று உறுதிபடக் கூறிய பத்மர் சற்றுத் தொலைவில், மேட்டுப்பாங்கான பகுதி ஒன்றில் இருந்த பாறையில் சம்மணமிட்டு அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். நாகபத்தினி அவரையே மரியாதையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மர் உண்மையிலேயே ஞானத் தேடலுடன்தான் வந்திருக்கிறார் என்பதை அவ ளால் புரிந்துகொள்ள முடிந்தது. மாபெரும் முனிவர்களெல்லாம் சந்தேகம் கேட்டுத் தன் கணவனைத் தேடி வருவது குறித்து அவள் முகத்தில் பெருமிதம் எழுந்தது.
சுற்றிலுமிருந்த நாகங்களை அழைத்து அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வேறு எந்த ஆபத்தும் வராமல் அவரைக் காவல் காக்கும்படியும் கட்டளையிட்டாள். பின் கணவன் வரவுக்காகக் காத்திருக்கலானாள். பத்மநாப நாகம் தன் இருப்பிடம் திரும்பியது. தன் பத்தினியிடம் தான் இல்லாதபோது நடந்த விஷயங்களையும் எல்லாச் செயல்களும் தர்ம நெறி தவறாமல் நடந்து கொண்டிருக்கின்றனவா என்றும் விசாரித்தது. நாகபத்தினி பெருமூச்சோடு நடந்தவற்றைச் சொன்னாள்: ‘‘சுவாமி! தங்களைச் சந்திக்க வந்திருக்கும் பத்மர் வேத வேதாந்தங்களைக் கரைத்துக் கு டித்தவராகத் தோன்றுகிறார்.
அவரே தங்களிடம் சந்தேகம் கேட்க வந்திருக்கிறாரே என்ற பெருமிதம் என் மனதில் எழுந்தது உண்மை. ஆனால், அவர் தாங்கள் வரும்வரை ஏதொன்றும் உண்ணாமலும் ஏதொன்றும் பேசாமலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். நம் வீட்டுக்கு வந்த விருந்தாளியான அவர் பட்டினியாக இருக்கிறாரே என்று என் மனம்
வருந்துகிறது. ஆகையால் தாங்கள் உடனே போய் அவரைச் சந்தியுங்கள்!’’பத்மநாப நாகம் சற்று யோசித்தது. பின் ‘‘எனக்கு அவரால் ஆகவேண்டிய செயல் ஒன்றுமில்லை. பின் நான் ஏன் அவரைப் போய்ச் சந்திக்க வே ண்டும்?’’ என்று கேட்டது. நாகபத்தினி சொன்னாள்: ‘‘பிரபோ! நம் இல்லம் தேடி வந்தவர் அவர். தங்களிடம் சந்தேகத் தெளிவு பெறுவதன் பொருட்டு காத்திருக்கிறார்.
முதலில் நம்மைத் தேடி வந்தவர் அவர்தான் என்பதையும் இப்போது உங்களுக்காகவே உண்ணாமல் அசையாமல் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் எண்ணிப் பாருங்கள். இப்போது அவரைத் தாங்கள் சென்று சந்திப்பதுதான் முறை. நாம் யாரையேனும் அனுப்பி அவரை வரச்சொன்னாலும் அவர் வந் துவிடக் கூடும்; ஆனால், அது நமக்கு அழகல்ல.’’நாகபத்தினியின் பேச்சில் உள்ள நியாயங்களைக் கேட்டு மகிழ்ந்த பத்மநாப நாகம், ''அதிதி உண்ணாமல் இருக்கும்போது நான் மட்டும் உண்ணுவது முறையல்ல. நான் அவரைச் சந்தித்தபின் வந்து உணவுண்பேன்!'' என்று சொல்லி பத்மரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றது.
அந்த மாபெரும் ராஜநாகம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் முன்பாக, அதைப் பார்த்தவுடனேயே அதுதான் பத்மநாப நாகம் என்பதை பத்மர் புரிந்துகொண்டு விட்டார். அவரை வணங்கிய நாகம் அவருக்கு தர்மநெறி குறித்து என்ன சந்தேகம் என்று பரிவோடு கேட்டது. பத்மர் தாமும் அந்த நாகத்தை வணங்கினார். பின் கேட்டார்: ''என் சந்தேகம் இருக்கட்டும். சூரிய ரதத்தை இழுப்பதற்காகத் தாங்கள் சென்றிருப்பதாய் நாக பத்தினி என்னிடம் தெரிவித்தார். அவ்விதம் சூரிய ரதத்தை இழுத்து வருகையில் நீங்கள் என்ன ஆச்சரியங்களைக் கண்டீர்கள்?’’ ‘‘எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆச்சரியமல்லாத எதுவும் சூரியனில் இல்லை. எத்தனையோ முனிபுங்கவர்கள் சூரியனின் கிரணங்களில் வசிக்கிறார்கள்.
அவர்களே சூரியனின் ஒளியை மிகுதிப்படுத்துகிறார்கள். வெயிலும் மழையும் சூரியனால்தானே ஏற்படுகின்றன? எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருள் சூரியனின் மையத்திலேயே உறைகிறது. பலமுறை நான் சூரிய ரதத்தை இழுக்கும் பணியில் ஈடுபட்டாலும் இந்த முறை ஆச்சரியகரமான ஒரு சம்பவத்தைக் கண்டேன். பூமியிலிருந்து ஒரு பெரியவர் சூரியனை நோக்கி வந்தார். ஒளிவீசும் தேகத்தோடு இருந்த அவர் இன்னொரு சூரியனோ என்னும் வகையில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே வந்ததும் சூரிய பகவான் அவரைக் கைவாகு கொடுத்துத் தூக்கிவிட்டான். தேரிலேறிக் கொண்டார் அவர். பின் சூரிய னின் மிக அருகே சென்று, சடாரென்று சூரியனிலேயே கலந்து சூரியனோடு ஒன்றாகிவிட்டார்’’.
''வியப்பாக இருக்கிறதே? யார் அவர்?'' என்று பத்மர் கண்ணகல ஆச்சரியத்தோடு விசாரித்தார். நாகம் மரியாதை தொனிக்கும் பார்வையோடு பதில் சொல்லலாயிற்று: ''பத்மரே! முதலில் அந்த மனிதருக்கு ஏன் அத்தனை பெருமை என்று எனக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ள வேண்டி நான் சூரிய பகவானிடமே, தங்களில் கலந்த அவர் யார், எதனால் அவருக்கு இறைச்சக்தியோடு கலக்கக் கூடிய பேறு கிட்டியது என்று விசாரித்தேன்!’’பத்மர் பரபரப்போடு கேட்டார்: ‘‘அதற்கு சூரியபகவான் என்ன பதில் சொன்னார்?’’ ''வாழ்நாள் முழுதும் அகிம்சை என்ற ஒரே ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த பெரியவர் அவர். அந்த ஒரு தர்மத்தை முழுமையாகக் கடைப்பிடித்தால் அதுவே போதும்; அதில் எல்லா தர்மங்களும் அடங்கிவிடுகின்றன.
அதனால்தான் இறைச்சக்தியுடன் கலக்கும் பேறு பெற்றார் என்று சூரிய பகவான் என்னிடம் தெரிவித்தார். இதுதான் நான் கண்ட அதிசயக்காட்சி!’’ என்றது நாகம். இதைக் கேட்ட பத்மரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. உண்மைதானே? அகிம்சை என்ற ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்தால் அதுவே போதுமே? அடுத்தவர்களைப் பேச்சாலோ செயலாலோ துன்புறுத்தத் தோன்றாதே? அடுத்தவர்களைத் துன்புறுத்தாத நிலை என்பதுதானே இறைநிலை? அப்படிப் பட்டவர் இறைவனோடு இரண்டறக் கலப்பதில் என்ன ஆச்சரியம்? ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பத்மர், ''நான் வருகிறேன்!'' என்று விடைபெற்றார். ''கேட்க வேண்டிய சந்தேகத்தைக் கேட்கவில்லையே?’’ என்றது நாகம்.
''கேளாமலே என் சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டது!'' என்றார் பத்மர். மீண்டும் பத்மபுரம் திரும்பிய பத்மர் வேறு எந்த வேள்வியோ பூஜையோ நிகழ்த்தாமல் அகிம்சை நெறியை மட்டும் விடாது கடைப்பிடித்து வாழ்ந்தார். யாருக்கும் எந்த இம்சையும் தராத அவரது உயர்வான அகிம்சை நெறியைக் கண்ட மக்கள் அவரைப் போற்றினார்கள். ஒருநாள் அவர் காலமானார். அவரது ஆன்மா ஒளியுடல் பெற்று சூரியனை நோக்கிச் சென்றது. அப்போது சூரியனின் தேரை இழுத்துக் கொண்டிருந்த தர்மமே வடிவான பத்மநாப நாகம் அவரை அடையாளம் கண்டு வணங்கியது. அவரும் நாகத்தை வணங்கினார்.
சூரிய பகவான் மலர்ச்சியுடன் அவ ரைக் கைலாகு கொடுத்துத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். தேரில் ஏறிய அவர் சூரியனின் அருகாகச் சென்றார். மறுகணம் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பைப் போல் சூரியனின் மையத்தில் இருந்த அந்தப் பரம்பொருளிலேயே ஐக்கியமாகிக் கரைந்து போனார். மீண்டும் பிறவாத நிலை எய்திப் பரம்பொருளாகவே மாறிவிட்ட பத்மரை எண்ணிப் பத்மநாப நாகம் பெருமிதத்தோடு தலை வணங்கியது. (மகாத்மா காந்தி போற்றிய அகிம்சைக்கான ஆதாரம் மகாபாரத இதிகாசத்திலேயே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த இதிகாசக் கிளைக் கதை.)

No comments:
Post a Comment