இன்னிக்கு வீரிய ஒட்டு ரக நெல் வகைகள் ஏராளம் ...அதில் கிடைக்கும் அரிசியில் ஒரு சத்தும் கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி / வெள்ளிடைமலை
உண்மை ...
உண்மை ...
நான் பள்ளி பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்று வரை (1975-78).....மலையாள / இரத்தின சம்பா எனும் சிவப்பு அரிசி ..இது மாணிக்கக்கல் போல மினுங்கும் அழகை கண்டால் மட்டும் தான் புரியும் ....ஒரு கைப்பிடி அள்ளி வாயில் வைத்து அரைத்தால் உமிழ்நீர் ஊற்று போல சுரக்கும்...கடைவாயில் பால் வழியும்..அருமையான அனுபவம்...உங்களுக்கு உண்டா ?
இந்த அரிசி சாதமாய் பொங்கி வேகும்போது மணம் நெஞ்சை அள்ளும்...அதன் வடிதண்ணி கஞ்சி அமிர்தத்தை மிஞ்சும் சுவை ...எங்கள் வீட்டில் ஒரு துண்டு கருப்பட்டி தந்து அதைக் கடித்து இதைக்குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள் ...
நண்பர்கள் சிலர் இதைப்பார்த்து என்னலே மாடு குடிக்கும் கழனித் தண்ணிய குடிக்கிதிய..ம்பாங்க ...அவங்க வீடுகளில் இதைக் குடிப்பதில்லையாம் ....எல்லாப்பயலும் இன்னிக்கு சொல்றான் ...உன்னோட ஆரோக்கிய ரகசியம் இப்பதான்ல புரியுதுன்னு ....
அப்புறம் முந்தின நாள் பழையமுதில் மோர் விட்டு பிசைந்து கை மணக்க சாப்பிட்ட காலம் இனி வராது...
தொட்டுக்க அவித்த மிளகாய் , வறுத்த மோர் மிளகாய் , நாரத்தை ஊறுகாய் , புளிக்கலவை...அதெல்லாம் சொர்க்கம் ....
இன்றைக்கும் ஞாயிறுகளில் உளுந்தங்களி , சிறு பயிறு கஞ்சிகூட தொட்டுக்க பிரண்டைத் துவையல் , கோவைக்காய் மசியல் , கத்திரிக்காய் புளிக்காய்ச்சல்...அவ்வப்போது சாப்பிடும் வழக்கம் உண்டு .....
ஆனால் அந்த பழைய அமிர்தம் தோற்றுப்போகும் சுவை ...போனது ....போனதே !!!!!கை மணக்க வாய் மணக்க வயிறு குளிர ...என்னா அமுதம் !!!!!பாலும் தேனும் கலந்த பேரமுதம் !!!!!
No comments:
Post a Comment