Friday 19 January 2018

அங்குமிங்கும் அலைவுறும்
பச்சை இலையின்
பின் ஓடுகிறான் சிறுவன்
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித் தாவி
பின் தொடர்கிறா்ன் ...
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவ்வோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவனுடன் பின்னோடி
இலையைத் தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ஒருகணம் உற்று நோக்குகிறான்
அசைவற்று நிற்கிறது அந்த இலை.

No comments:

Post a Comment