Tuesday 16 January 2018

ஒரு பொங்கல் கதை:-
====================
டேவிட் கலையரசன் கொண்டாடிய தைப்பொங்கலின் சுருக்கம்.....
-------------------------------------------------------------------------------------
காலை எழுந்து குளித்து ஆலயம் சென்று தொழுது வணங்கி ...
சைடில்...கிடைத்த வாய்ப்பில் .... சைட் அடித்து
(மக்கள் சந்திப்பு)....
மகிழ்ந்து ..கொஞ்சி குழவிகளைக் குலவி
(குலவுதல் = முகத்தை வருடி,கன்னங்களை கொழுவி,முகவாய்க்கட்டையை தடவி ..கழுத்தை பிடித்து ..தோள்களை .....)
கோவில் வளாகம் பொங்கல் வைத்ததில் கிடைத்த பங்கினை பாங்காய் உண்டு ...பக்குவமாய் மிச்சத்தை யாருக்கோ தள்ளி விட்டு எஸ்கேப்...
ஜூட் ...அடுத்து உறவினர்களின் வீடு ...
அடுத்து ஒரு இந்து அம்மன் கோவிலில் விளையாட்டு போட்டிகள் கண்டு களித்து/களைத்துப் போய் ...மோர் அருந்தி ...சில எதிர்பாராத சந்திப்புக்களில் அகம் மிக மகிழ்ந்து (இதெல்லாம் விவரித்தால் ...சோத்துல வெஷம்...வடிவேலு அதோ கதை /கதி)....
முன் மதிய வேளையில் ஒரு உறவும் நட்புமான நபரின் குலக்கோவில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ...கும்மாளம் ..
சர்க்கரைப்பொங்கல் /பழம்/கரும்பு/தேங்காய் உண்டு ...அங்கு சிறு மழலைகளோடு...மகிழ்ந்து
...இதல்லவோ அடியேன் கொண்ட இப்பிறவியின் ...ஈடில்லாத ..மாபெரும் பலன் ...ஈடு இணை
இதற்கு ... உண்டோ ?...
மதியம் சில உறவினர்களின் இல்லம் சென்று சந்திப்பு...மாலை ஒரு இல்லத்தில் பால் பாயாசம் ...இன்னொரு இல்லத்தில் மீண்டும் சர்க்கரைபொங்கல் கரும்பு ...
மாலை மீண்டும் சில சந்திப்புக்கள் ...அட்டகாச அரட்டைக் கச்சேரி ...
இரவில் மீண்டும் தேவாலய கலைநிகழ்வுகள் ...காண கண் கோடி வேண்டும்...
கண்ணுக்கு காதுக்கு கருத்துக்கு விருந்தோ விருந்து ...
இரவில் முகநூல் பக்கம் வரவு ...சவுதி அரேபிய / பிற நட்புக்களுடன் chat...
இரவு ஜெபம் ....நித்திரா தேவியின் ஆசைக்கிணங்கி ...ஆரத்தழுவி ...ஆலிங்கனம் செய்து ...அட்டகாசமான அயர்ந்த நித்திரை ....!!!!!
வாழ்க பொங்கலோ பொங்கல் ....!!!!

No comments:

Post a Comment