பொங்கல் பண்டிகையை நல்ல ஜாலியாக கொண்டாடிய நிகழ்வுகள் மிகக்குறைவு.
பள்ளி வயதில் எனது அப்பா வழி உறவுகள் (அப்பா இந்து அம்மா கத்தோலிக்க
கிறிஸ்தவர் ) முறைப்படி சடங்குகளோடு வழிபாட்டு விமரிசையோடு கொண்டாடுவதை
வேடிக்கைப்பார்க்க போவேன்.
பொங்கல் - கரும்பு - பனங்கிழங்கு கண்டிப்பாய் கிடைக்கும். பனைமரங்கள் மிகுந்த ஊர் ...எனவே பனங்கிழங்கு பஞ்சம் கிடையாது. எங்க அப்பா வீட்டுல இப்பவும் பனை இருக்கு.....கடவுள் அருளால் குலைகுலையாய் காய்க்கும். ஜனவரி ஆரம்பம் முதல் பனங்கிழங்கு வீட்டில் இருக்கு..... (எங்கள் வீட்டில் வடலியாய் சில இளம் பனை மரங்கள் ....இன்னும் ஒரு பத்துவருடத்தில் பலன் கட்டாயம் கிடைக்கும்)....

திருச்சி வளனார் கல்லூரியில் படிக்கையில் நெருங்கிய நண்பர்களோடு
முக்கொம்பு போய் .....1979 தைப்பொங்கல் மிக மிக ஆனந்தமாய் கொண்டாடிய
நினவு பறவையாய் சிறகடித்து வட்டமிடுகிறது.
வயல்காடு. கரும்பு அறுவடை நேரம். சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட கரும்புகள் எல்லோருக்கும் தாராளமாய் கொடுத்தார்கள். பொங்கலும் அங்கேயே ...ஒரு மரத்தடியில் ....எளிய வெள்ளைமனம் கொண்ட மக்கள்...அருமையான சுவைமிக்க பொங்கலை இயற்கை அன்னையின் மடியில் தாலாட்டும் சுகத்தோடு கொண்டாடிய மிக இனிமையான பொங்கல்....நாங்கள் யாரோ ...அம்மக்கள் யாரோ ....ஆனால் இணைந்து ஒரே குடும்பமாய் நண்பர்கள் கூட கொண்டாடிய மறக்க முடியாத மிகச் சிறந்த பொங்கல் அது தான் ...
குவைத்தில் தமிழ் சங்கம் - பாரதி கலை மன்றம் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டாடுவோம் ....வேட்டி கட்டி ஆண்கள் ...சேலையில் பெண்கள் ...ஆனால் தான் எனும் அகந்தை ஒவ்வோர் செயலிலும் வெளிப்படும் அருவெறுப்பு ....மோசமான பொங்கல் கொண்டாட்டங்கள் அவை .....சில வேண்டத்தகாத நிகழ்வுகள் இன்றும் கசக்கும் நினைவுகள் ...ஆனால் அதுவும் பொங்கல் கொண்டாட்டமே.....
2017 ஊர் மக்களோடு ...அது ஒருவகை ரசமான நிகழ்வு....படங்கள் முந்தைய பதிவுகளில் ...
வாழ்க மங்களம் பொங்கும் தைப் பொங்கல் ....துன்ப துயரங்கள் ஆறட்டும் ...வாழ்வு தொடரட்டும் ...புத்துணர்ச்சியுடன் நல்ல காலம் பிறக்கட்டும் .... நம்பிக்கை நெஞ்சில் வை ....தித்திக்கும் நம் வாழ்க்கை ...

No comments:
Post a Comment