Tuesday 16 January 2018

கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.
ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.
சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இரு நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.
கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.

அன்புள்ள கடவுளுக்கு,
நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.
எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.
அன்புடன்,
கார்த்திக்

No comments:

Post a Comment