ர. சு. நல்லபெருமாள் (இறப்பு: ஏப்ரல் 20, 2011) ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர். சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான தமிழக அரசின் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் , அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ல.ச. ராமாமிருதம் போன்ற எழுத்தாளர்களின் எழுத்து காலகட்டத்தை சேர்ந்தவர்.
பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு
ர. சு. நல்லபெருமாள் திருநெல்வேலி மாவட்டம் கடையம் வட்டம், ரவண சமுத்திரம் சுப்பையா பிள்ளை - சிவஞானம் தம்பதிகளுக்கு பிறந்தவர். வாழ்ந்தது பாளையங்கோட்டையில் (திருநெல்வேலி) இவர் பொருளியல், சட்டம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 15 வயதில் "வீண் வேதனை" என்ற சிறுகதை மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். இதே வயது காலகட்டத்தில் "இரு நண்பர்கள்" என்ற சிறுகதைக்கு கல்கியின் பாராட்டுகளுடனும் உந்துதலினாலும் எழுத்துலகில் பிரவேசமனார். ஆரம்ப காலம் தொட்டே சமூக அவலங்களைக் சாடினார். மானிட கலாச்சாரத்திலும், வாழ்வியல், அரசியல், பிரபஞ்சம், ஆன்மீகம் மற்றும் ஆன்மா குறித்த தத்துவ சிந்தனைகளிலும் இந்தியர்களுக்குச் சமமாக சிந்தித்தவர்களும் / சிந்திக்கவும் உலகில் வேறு யாரும் இல்லை என்பதில் ஆணித்தரமான கருத்து கொண்டவர் ர. சு. நல்லபெருமாள். அவருக்கு மனைவி பாப்பா, மகன்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், மகள்கள் சிவஞானம், அலமேலுமங்கை ஆகியோர் உள்ளனர்.சிறு கதைகள்
- சங்கராபரணம் - 1962 - சிறுகதைத் தொகுதி
- இதயம் ஆயிரம் விதம் - 1970 சிறுகதைத் தொகுதி
புதினங்கள் மற்றும் பிற நூல்கள்
- கல்லுக்குள் ஈரம் (1966)
- கேட்டதெல்லாம் போதும் (1971)
- குருஷேத்திரம்" (போராட்டங்கள்) - (1972)
- எண்ணங்கள் மாறலாம் (1976)
- நம்பிக்கைகள் (1981)
- மாயமான்கள்" (திருடர்கள்)- (1976)
- தூங்கும் எரிமலைகள் (1985)
- மருக்கொழுந்து மங்கை (1985)
- உணர்வுகள் உறங்குவதில்லை” (1986)
- மயக்கங்கள்” (1990)
- பிரும்ம இரகசியம் - தத்துவம்
- சிந்தனை வகுத்த வழி
- "பாரதம் வளர்ந்த கதை"
- இந்திய சிந்தனை மரபு
பரிசுகள்
- கல்கி வெள்ளிவிழா - 2ம் பரிசு - கல்லுக்குள் ஈரம் - 7500 பரிசும்
- தமிழக அரசின் பரிசு - 1972- சிந்தனை வகுத்த வழி.
- தமிழக அரசின் பரிசு - 1982 - பிரும்ம ரகசியம்.
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது - 1990 - உணர்வுகள் உறங்குவதில்லை
- கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு - நம்பிக்கைகள்
No comments:
Post a Comment