''கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ''
==================================
இந்த பழமொழி நம்பிக்கை ஊட்டும் பழமொழியாக நாம் நினைப்போம், கப்பல் கவிழ்ந்து விழுந்து ஏழையானாலும், அதற்கு மனம் நொந்து போய் கன்னத்தில் கை வைத்து உட்காராமல் மீண்டும், வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்வோம்.

ஆனால் உண்மையில் அப்படி அர்த்தம் கொண்டது அல்ல.
கன்னம் என்பது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல, அந்த காலத்தில் கன்னக்கோல் என்று ஒரு வார்த்தை உண்டு.
அது தான் திருடர்கள் ஒரு வீட்டில் திருட, சுவற்றில் துளை போட உதவும் ஒரு கருவி. அந்த கருவியின் உதவியால் தான் சுவற்றில் வட்ட வடிவில் துளை போட்டு, அதன் வழியாக உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
அதனை தான் பெரியவர்கள் நன்றாக நிலையில் இருந்து கஷ்டமான நிலைக்கு சென்றாலும், அடுத்தவர்களின் பொருளை திருடக்கூடாது, திருட்டு செய்து பழைய நிலையை அடைய நினைக்கக்கூடாது...
அதனால் தான் எந்த கஷ்டம் வந்தாலும் கன்னக்கோல் என்ற ஆயுத்த்தில் கை வைக்கக்கூடாது என்று அறிவுரை சொல்ல இந்த பழமொழியை சொன்னார்கள்.
No comments:
Post a Comment