Saturday 18 August 2018

தேன் மிட்டாய்
தித்திக்கும் தான்.
தேன் மிட்டாயை விட,
தேன் மிட்டாய் செய்முறையை விட,
தேன் மிட்டாய் செய்முறை வாசிக்கும்
அவள் கண்கள் இன்னும் தித்திப்பு..

---------------------------------------------------------------
கண்ணாடிபோட்டவுக எல்லாம் நல்லா படிச்சவுக
நல்லா படிச்சவுக எல்லா ஊர விட்டு போய்ட்டாக
ஊர விட்டு போனவுக ஊரு பக்கமே வரதில்ல
ஊரு பக்கம் வராதவுக எல்லாம் ப்ளெசர் காரு வேங்கிட்டாக
ப்ளெசர் காரு வேங்குனா வெய்ய மழை தெரியாது
வெய்ய மழை தெரியாட்ட எது எங்க விளையும்னு தெரியாது
எது எங்க விளையும்னு தெரியாட்டா
என்ன திங்கணும்னு தெரியாது
என்ன திங்கணும்னு தெரியாம கண்டத துன்றது
கண்டது தின்னு ஒடம்ப வீணாக்க
ஊர வீணாக்க குப்பைய போட்டு
தண்ணிய புட்டில அடச்சு வித்து புட்டு
விளைநிலம் விற்று வீட்டு மனையாக்கி
சூப்பர் மார்க்கெட்ல போய் சோறு வாங்கி
கொஞ்ச பணத்த வங்கில போட்டு
கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வெள்ளக்காரன் மருத்துவத்துக்கு குடுத்து
செத்துபோகவா இந்த ஒலக வாழ்க்கை
நெனச்சி பாருங்க அண்ணாச்சி......

-----------------------------------------------------------------------------
எத்தனை முறை பெய்தாலும்
அடுத்த முறை எப்போது
ஏக்கத்தில் மனது.

மழை!
எழுதிப்பார்த்ததில்
நனைந்து போனது
இதயம்!

மழை இசை
மழை இரைச்சல்
மழை இம்சை

மை கலைந்த ரெக்கார்ட் நோட்டும்
இன்றைய கலர் ட்ரெஸ்சும்தான்
நேற்று பெய்த மழைக்கு
சாட்சியாய் நிற்கிறது! 


No comments:

Post a Comment