Thursday 9 August 2018

நேர்மை

பத்தாம் வகுப்பு மாணவன் சக்தி
கிறிஸ்துவின் மேல் அவனுக்கு பக்தி
படிப்பில் சுமாரான புத்தி
நேர்மையே அவன் மனோ சக்தி
ஒரு நாள் ஆலயத்தில்
ஒரு சிறுபெண் வந்து சாட்சி சொன்னாள்
“படிக்க நேரம் இன்றி சென்றேன் நான்,
பரீட்சை நேரத்தில் கலங்கினேன் நான்,
தகுந்த நேரத்தில் மனக் கண் முன் காட்டிவிட்டார்,
இறைவன் காட்டிவிட்டார், மதிப்பெண் ஏற்றிவிட்டார்”
இந்த சாட்சி சக்தியின் மனதிலே,
பதிந்தது அதிக விரைவிலே,
இயன்றதை அவனும் படிந்தான்,
இறைவனிடம் அவனும் ஜெபித்தான்
பொதுத் தேர்வு நாள் வந்தது,
சக்திக்கு வியர்வை வழிந்தது,
அனைத்தும் படித்த கேள்விகள் தான்,
பயத்தில் பாதி மறந்து போனான்
பயந்தான், திகைத்தான்
பரமனை அழைத்தான்
சிறுபெண் சாட்சியை அவ்வப்போது நினைத்தான்
கண்முன் வரவில்லை விடைத்தாள்
சுற்றும் முற்றும் பார்த்து வியர்த்தான்
ஒரு மாணவன் பிட் அடித்தான்
ஒரு மாணவன் காப்பி அடித்தான்
அருகில் ஒரு மாணவியோ
புத்தகத்தையே ஜெராக்ஸ் அடித்தாள்
ஆசிரியை திடீரென கூறினாள்,
“யாரும் பயப்படாதீங்க,
புக்க பாத்து எழுதுங்க !
நான் நிக்கிறேன் வாசல்ல
பிரச்சன எதுவும் இனிமே இல்ல !”
அனைத்து மாணவர் மனதிலும் இன்பம்
சக்தியின் மனதிலோ துன்பம்
”நேர்மையான கடவுளை பின்பற்றும் நான்
நேர்மை இழந்து போவது எப்படி?
மனிதன் எனக்கே இது தவறாக தெரிந்தால்
படிக்காத பதிலை காட்டுவாரோ ! கடவுள் காட்டுவாரோ”
முடிவை கடவுளிடம் ஒப்புவித்தான்,
படித்ததை எழுதி ஒப்படைத்தான்

No comments:

Post a Comment