Monday 6 August 2018

மாண்புடைய இலட்சியம்



பள்ளி வயதில் கிடைத்த ஆசிரியர்கள் தங்கமானவர்கள்.
என்னை செதுக்கி அறிஞன் ஆக்கிய பெருந்தகைகள். எனது கல்வி – வாசிப்பு – உழைப்பு – சேகரித்த கல்வி பலன் மற்றும் நினைவுத்திறன் விளையாட்டுத்திறன் அனைத்திற்கும் அடித்தளம் அமைத்துத் தந்த ஆன்றோர்கள் / சான்றோர்கள் அவர்களே.
மற்றொருவர் என்னைப் பெற்ற அன்னை - என்னை ஊக்குவித்து வாசிக்க ஏராளம் நூல்கள் அடையாளம் காட்டி பெற்றுத் தந்து ஆதரித்தவர்.
SSLC பருவம் வரை ஆசிரியர்கள் சிலரின் ஆலோசனைப்படி மருத்துவம் பயின்று மருத்துவ சேவைக்கு அர்ப்பண உணர்வோடு சென்று மக்களின் துயர் துடைக்கும் ஒரு மகத்தான லட்சியம் இருந்தது.
ஆனால் இயற்கையான எனது முன்கோபமும் பொறுமையின்மையும் ( இப்போது இவை இல்லை . பக்குவம் பெற்றேன் ) கொண்ட குணம் மருத்துவராக உதவாது என போகப்போக புரிந்து கொண்டேன். நானே அதைக் கைவிட்டுவிட்டேன். 'கலைந்திடும் கனவு' என ஆகிப்போனது ....
சரி கற்றுக்கொண்டதை கற்றுக்கொடுக்கும் நல்ல ஆசான்/ஆசிரியர் ஆவோம் என ஒரு ஆசை புதிதாய் துளிர் விட்டது.
B.Com முடித்து M.Com அட்மிஷன் கேட்டு காலம் கடந்து போன காரணம் (நாம் படித்த காலேஜ் தானே எனும் இளக்காரம் ? ) சீட் கிடைக்காமல் மேற்படிப்பு பிளான் அவுட்...
அப்பா குவைத்தில் அராபியர் வீட்டில் வாகன ஓட்டி. குவைத்தி தங்கமான மனிதர். என் கல்வி செலவு முழுவதும் தந்த பெருமகனார். விசா தந்து புகழ் பெற்ற அமெரிக்கன் நிறுவனத்தில் துணை ஆடிட்டர் பணியிலும் அமர்த்தி உதவினார்.
வாழ்க்கையே திசை மாறிப்போனது. எனது நேரம் தவறாமை, கடமை உணர்வு , சக ஊழியர்களை மதிக்கும் பண்பு , Client Friendly Attitude, கணக்கு வழக்குகளை துல்லியமாக ஆராயும் Analytical Mindset , Report Writing Talents/Skills (உடன் பணி செய்த பெரும்பாலான ஆடிட்டர்களுக்கு இது அன்று வாய்க்கவில்லை ) நிறைய பேர்களுக்கு ஆடிட் பணி செய்யத் தெரியும் ....ஆனால் எழுத்துத் திறன்?...
அடியேன் அதில் நிபுணன். அரபிக் மொழியிலும் திறன் உண்டு ....பேச படிக்க எழுத குவைத்தில் ''அல் ரஷீத் '' டுடோரியலில் ஆறு மாதங்கள் பயிற்சி மேற்கொண்டேன். ரஷியன் (கஸாக்ஸ்தானில் கற்றுக்கொண்டேன்) , ஜெர்மானிய டச்சு - தம்பி ஜெர்மனிக்கு பணிக்கு ஏற்பாடு செய்ததால் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் கற்று சான்றிதழ் உண்டு. இரட்டைக்கோபுர தகர்ப்பின் விளைவாய் விசா பெற்றும் ஜெர்மன் போக இயலாமல் முடக்கம்.
குவைத்தில் எனது அலுவலக / Client அலுவலக நண்பர்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் , அறிவியல் மற்றும் அக்கவுண்டன்சி , பொருளாதாரம் & அரபிக் பொழுது போக்காய் சொல்லிக்கொடுப்பேன்.
என்னிடம் பயின்ற US, Canada, Europe, Australia வில் பணி புரியும் சிலர் மிக நன்றி பாராட்டும் பண்பு கொண்டு அவ்வப்போது தொடர்பில் இருந்தார்கள். இப்போது இல்லை ...
சில சூழ்நிலைகளின் காரணமாய் வளைகுடாப் போருக்குப் பின்னர் குவைத் போகாமல் சென்னைக்கு போய் 1993ல் CA படிக்கச் சேர்ந்து ஒரு Article Clerk ஆகி இரண்டு ஆண்டுகாலம் வீணாக்கி?!!! ...இந்திய ஆடிட் தொழில் தர்மம் என் குணா நலன்களுக்கு மிக விரோதமாய் இருந்து செய்த 'கோல்மால்கள்' கசப்பான அனுபவங்கள் ...இனி ஜென்மத்திலும் இந்திய தாய்த்திருநாட்டில் ஆடிட் பணி செய்வதில்லை என வீர சபதம் ...இன்றுவரை செய்யவில்லை .......இனியும் NEVER....
சென்னையில் Accounts Officer ஆக ஓராண்டு ஒரு Bio Tech விஞ்ஞானியிடம் பணி.
அப்புறம் 1996ல் காசாக்ஸ்தானுக்கு ஆடிட்டராகப் போய் குளிர் மைனஸ் 15-50 அனுபவித்து ஓராண்டு காலம் மட்டுமே இருந்து ஓடியே வந்து விட்டேன்.
1998-2001 சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்ரீ விசா மெடிக்கல்ஸ் - மருந்துக்கடை நண்பரோடு நடத்தி ஒரு Quack ஆக புகழ் பெற்று விளங்கினேன். ஏராளம் மருத்துவ நூல்கள் கற்று பயின்று அதிலும் நிபுணத்துவம் பெற்றேன். என்னிடம் வந்த பல ஏழைகளுக்கு நோய் நாடி ...மருந்துகள் கொடுத்து பணமும் கொடுத்து புண்ணியம் ஈட்டினேன்.
அப்புறம் 2002-08 ல் பனிரெண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் குவைத் அதே கம்பெனியில் ஆடிட்டர் பணி …
பின்னர் கொஞ்சம் அதிகம் ஆசைப்பட்டு ஒரு Real Estate கம்பெனியில் Chief Accountant ஆக ஒரே ஆண்டு (2008-09) ...
Recession காரணமாய் பணி இழந்து 2009 ல் இந்தியா திரும்பி.....
மூன்றாண்டுகாலம் வெட்டிப் பொழுது போக்கி சுக வாழ்வு வாழ்ந்து காலம் உருண்டது. மனைவி மக்களோடு நல்ல வாழ்வு வாழ்ந்த திருப்தி உண்டு.
இந்தியாவில் என் வயது முதிர்வு 50 + மற்றும் மெஜாரிட்டி வெளிநாட்டு அனுபவம் எனும் காரணியும் - தடைக்கற்கள் ஆகி ( ஆனால் முக்கிய காரணம் நகர வாழ்க்கை பிடிக்காதது ) இருப்பதைக் கொண்டு சமாளிப்போம் என்று (தப்புக் கணக்கு ?)....கிராம அதுவும் பிறந்த மண்ணின் சுகம் என்னைக் கட்டிப்போட்டது.
எல்லாமும் சேர்ந்து Career பாதையில் உயரே செல்லும் படிக்கற்கள் மிஸ்ஸிங்.
மனதை தேற்றிக்கொண்டு ஆறாண்டுகாலம் கல்வி கணினி சேவையில் ( ஒரு வகையில் இதுவும் கூட ஆசிரியர் பணியே ) - எண்ணும் எழுத்தும் , கட்டுரைகள் / கவிதைகள் / ப்ரோஜெக்ட்ஸ் ...ஆரம்பத்தில் ‘ஓஹோ’ என இருந்தது ...நல்ல பணம் புகழ் ...
பின்னர் அதிலும் படிப்படியாய் தொய்வாகி இந்த மாதம் ஆகஸ்ட் மாதத்துடன் '' சென்ட்டர் '' மூடுவிழா ...
அடுத்து ?.... ஆசிரியர் பணி ? அல்லது .....
57 வயதிலும் விடா முயற்சி செய்வேன் ...விளைவு / முடிவு?
காலம் பதில் சொல்லும் ...... பார்ப்போம்
எதிர்பாரா திருப்பங்கள் வாழ்க்கையின் ரசனையை கூட்டி ...'மஜா'வாக இருக்கும் ...
ஒருவேளை மீடியா / சினிமாவில் கூட ஜொலிக்கலாம் ..பறவை முனியம்மா அறுபதில் தான் திரையுலகில் பிரவேசம் ...
2004ல் அவரோடு குவைத் ஸ்டேஜ் ப்ரோக்ராம்மில் போட்டோ எடுத்துக்கொண்டேன் ....
இனி பயணம் தொடர்கிறது ...திசை புலப்படும் விரைவில் ?.....ஆம்

No comments:

Post a Comment