Saturday 11 August 2018

ஆனைச் சவாரி

ஆனை பார்ப்பதில் என்றுமே அலாதிப்பிரியம் உண்டு.
சிறு வயதில் பக்கத்துக்கு ஊரில் முருகன் கோயிலுக்கு சித்திரை திருவிழாவிற்கு தவறாமல் வரும்.
பள்ளி முடிந்து வரும் மாலை வேளைகளில் ஆர்வமாக போய் நண்பர்கள் குழாமுடன் வேடிக்கைப் பார்ப்பதுண்டு .
அன்று (1975-78) காலத்தில் நல்ல மழையும் குளத்தில் வற்றாமல் தண்ணீரும் உண்டு .ஆனை குளிக்க பாகனோடு குளத்திற்கு போகையில் குதியாட்டம் போட்டு நண்பர்களோடு பின்னாலேயே போவேன். சாணம் போட்டவுடன் மிதித்தால் நல்லது என்று போட்டி போட்டு ஓடிச்சென்று 'சப்' பென்று மிதித்ததும் உண்டு ....கால் நோய்கள் வராதாம்.இன்றுவரை இல்லை ...
தென்னை ஓலை , ஆல் , அரசு தழை , தேங்காய் , வாழைப்பழக்குலை, கவளம் கவளமாய் சோறு உருண்டைகளை ஆனை ஸ்வாஹா பண்ணுவதை பரவச உணர்வோடு பார்ப்பேன்.
பாரத் / ஜெமினி சர்க்கஸ்களில் நாகர்கோயில் ஸ்டேடியம் கிரவுண்டில் அவைகளின் சாகசம் கண்டு ஆனந்தம் உச்சம்.
திருச்சி தூய வளனார் கல்லூரிக்காலம் . மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு வார இறுதி மற்றும் விடுமுறை தினங்களில் போவது வழக்கம். உள்ளே போனதுமே ஆனை இருக்கும். பத்துபைசா கொடுத்து துதிக்கை நீட்டி தலை தொட்டு ஆசி வாங்கியே உச்சிப்பிள்ளையார் கோயில் போவேன்...
அப்புறம் சென்னையில் படித்த காலம் 1979-82 ஆனை பார்ப்பதேஅருமையாகிப்போனது. எப்போதாவது அபூர்வமாய் சாலையில் போகும் ஆனை கண்டதுண்டு.
சினிமாவில் டார்ஜான் ஆனை மிகவும் பிடிக்கும்.
வெகு காலத்திற்குப் பின்னர் 1993ல் மனையாளின் ஊரில் சாலையில் ஓர்நாள் ஆனை வலம் வரும் காட்சி கண்டு சின்னப்பையன் போல ஓடி பணம் கொடுத்து ஆசி வாங்கப்போய் ...துதிக்கை தூக்கி தாழ அது கொண்டுவந்த நொடியில் செம்மண் சேறு துதிக்கை நுனியில் கண்டு தலையை விலக்கப் பார்த்து துதிக்கை 'சொத்'தென இடது மார்பில் வலுவாய் விழுந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செய்ன் அப்படியே போட்டிருந்த சந்தனக் கலர் சட்டையில் பிரின்ட் ஆனது ...
பாகன் சொன்னார் ......அய்யா இனி உனக்கு பலம் கூடுதல் ஆனை துதிக்கை மார்பில் படுதல் உடலுக்கு உரம் தரும்னு ....ததாஸ்து ...அப்படியே ஆகுக !!!!
ஏற்கனவே பாடி பில்டர் / பாக்ஸர் ...சரி தான்ன்னு போயிட்டேன் ...
1993-96 & 1998-2001 சென்னையில் வாசம் ....கிண்டி சிறுவர் பூங்காவில் அடிக்கடி போய் ஆனை பார்த்ததுண்டு. அது ஒரு obsession....
குவைத்தில் ( 2002-09 )இருந்த காலம் மைசூர் பக்கமுள்ள சில நண்பர்கள் சத்தியமங்கலம் / பந்திப்பூர் காட்டுக்கு இன்ப சுற்றுலா போக பிளான் போட்டோம். அது இன்றுவரை பலிக்கவில்லை. இனியும் பலிக்குமோ ?...என்னமோ ...ஐயம் தான்
படத்தில் அஸ்ஸாம் வன சுற்றுலா படம் கண்டு பரவசம்..அம்புட்டுதேன் ...இப்போதைக்கு
ஆனால் ..ஆனை மேலே அம்பாரியில் சவாரி போகாம கட்டை வேகாதுங்கோ ...சொல்லிப்பிட்டேன்...ஆமா

No comments:

Post a Comment