Saturday 11 August 2018

இந்தியனாய் இரு



இந்தியனாய் இரு !
இந்தியப் பொருட்களையே வாங்கு ! 
**************************************************
கல்லூரியில் படிக்கும் காலம் கையில் கிடைக்கும் எழுத்துடன் கூடிய காகிதம் எதுவானாலும் வாசிக்கும் வழக்கமுண்டு.
ஒருமுறை சாப்பிட வாங்கின ஏதோ ஒரு பொருள் பொதியப்பட்ட ஒரு பேப்பரில் காந்தியடிகளின் கி'ராம'ராஜ்யம் எனும் கொள்கை பற்றி படிக்க நேர்ந்தது. முழுவதும் இல்லை .ஆனால் படித்ததிலேயே விஷயம் பூராவும் விளங்கிக்கொண்டேன்.
அதாவது ஒவ்வொரு கிராமமும் சுய பொருளாதார சார்பு கொண்டு தன்னிறைவு பெற்று விளங்குவதன் முக்கியத்துவம் அதில் விளக்கமாக சொல்லப்பட்டிருந்தது.
அதாவது இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் அங்கு கிடைக்கும் விளைபொருட்கள் / மூலப்பொருள் சார்ந்த தொழில் உற்பத்தியை அந்தந்த கிராமத்தை சேர்ந்த மக்களின் உழைப்பின் மூலம் உருவாக்கினால் மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஊதியமும் கிடைத்து மக்கள் 'வெளியேற்றம்' - (Migration) எனும் சிந்தனை வராமல் கிராமங்களிலேயே தன்னிறைவுடன் இருப்பார்கள். எ.கா : உணவு தானியங்கள் , எண்ணெய் வித்துக்கள் – ( தேங்காய் , எள், வேர்க்கடலை ) , பருத்தி ...மற்றும் பல வேளாண் பொருட்கள் ....கனிமங்கள் மற்றும் அவை சார்ந்த உற்பத்தி பொருட்கள் / அவைகளின் பயன்பாடுகள் ....
இவ்வாறு ஒவ்வொரு கிராமமும் உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி பெற்று விளங்கினால் நாடு சுபிட்சம் அடையும்.
வாசிக்க மிக மிக அருமையாகவே இருந்தது.
யோசிக்கையில் இது நடைமுறையில் சாத்தியமானால் இந்தியத் தாய்த் திரு நாடே பொன் விளையும் பூமியாகுமே என உள்ளம் விம்மியது.
ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் எனவே ஒருதாய் மக்களாய் நல்ல புரிதலும் பாசமான நல்ல நட்பும் இருக்கும் காரணத்தால் ஒற்றுமையுடன் 
உழைப்பால் உயரும் வாய்ப்புக்களும் நிறைய இருக்கும். மக்களும் நிறைவாக வாழ வழி பிறக்கும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஆரவாரம் செய்து ஒருவகை 'Utopian' உற்சவம் ...மிக மகிழ்வாய் இருந்தேன்...
அப்போது தான் அது மென்மேலும் வளர்ந்து ஓங்க இந்தியனாய் இருந்து இந்தியப் பொருட்களை வாங்கும் சூட்சுமம் புரிந்தது. மனதில் ஒரு சங்கல்பமும் தான்.நம் பங்குக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வாங்குவோராக இருக்கவேண்டும் எனவும் .....
BE INDIAN !!! BUY INDIAN !!!
என் வீட்டில் இயன்றவரை இந்தியப் பொருட்கள் தான் வாங்கியுள்ளேன். மில்லினியம் ஆண்டுக்குப் பின்னர் அதுவும் மாற்றம் ஆகிப்போனது . மக்களுக்காக மாற வேண்டிய நிகழ்கால யதார்த்தம் ...காலக்கொடுமை !!!!
ஆனால் இன்று..... கிராம ராஜ்ஜியம் என்பது பல இடங்களில் நிஜத்தில் நிகழும் சாத்தியமே இல்லாத மெய்ப்பாடு மனதை வாட்டுகிறது. அந்நிய நாட்டு மோகம் மக்களை பீடித்து அதன் விளைவுகளே எங்கும் எதிரொலிக்கும் ஏடாகூடம்....
மக்கள் கிராமத்தில் பிழைக்க வழிவகை இல்லாமல் மாவட்ட தலை நகரங்களில் அடைக்கலம் ...தமிழக தலை நகரம் சென்னையோ சொல்ல வேண்டாம் ...
நானே அங்கு கல்லூரியில் படித்தவன் ...சில ஆண்டுகள் பிழைத்தவன் ...ஆனாலும் சென்னைக்குப் போகவே இன்று பயம் / தயக்கம் ...அச்சச்சோ !!!!என்ட அம்மே ....
பள்ளி / கல்லூரி காலம் பார்த்து மகிழ்ந்த இந்தியனாக இரு ! இந்தியப் பொருட்களையே வாங்கு எனும் வாசகங்கள் ...''மின்னுவதெல்லாம் பொன்னல்ல''... என்னும் இன்னொரு முதுமொழியை நினைவு படுத்தி என் நெஞ்சம் கனக்கிறது ....
சங்கல்பமும் செங்கல் தூளாய் காற்றில் கரைந்து போனது ...இன்று சுதேசி / விதேசி வேறுபாடு ஏது ?..
நிலை மாறுமோ ?....ஒரு நப்பாசையும் உண்டு ....
காலம் பதில் சொல்லும் ...
நல்ல தலைவன் இருந்தால் அவரும் தான் பதில் சொல்வார் .. ..
யார் யார் அவர் யாரோ ?....

No comments:

Post a Comment