Saturday 11 August 2018

கதை சொல்லி

ஒரு கதைசொல்லல் எளிமையாக நிகழ்தல் வேண்டும். முடிச்சுகள் சிக்கல்கள் விழுவதில் பொருள் வேண்டும் .
ஒரு காட்சியை நேரில் கண்டவர் விவரிப்பதற்கும், பிறர் சொல்ல கேட்டேன் எனச்சொல்பவருக்குமுள்ள பேதங்களை கவனித்திருக்கிறீர்களா?
முன்னவர் தங்குதடையின்றி சரளமாக விவரிக்கத் தொடங்குவார்.
பின்னவர் எதை எங்கே தொடங்குவதென்று குழம்பலாம், கோர்வையாகச் சொல்லவராமல் தடுமாறலாம்.
இதை நாம் வாசிக்கிற நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறிய முடியும்.
எழுத்தில் எளிமையும், பாசாங்கற்ற வெளிப்படையும் வேண்டுமெனில் நாவல் சொல்லப்படும் தளங்களுக்குள் எழுத்தாளன்இருப்பு கட்டாயமாகிறது:
மனிதனாக விலங்காக; பெண்ணாக, ஆணாக; தாவரமாக, எந்திரமாக, காற்றாக, தூசாக மொத்தத்தில் எல்லாமுமாக கூடுவிட்டு கூடுபாய்தல் அவசியம், தேவை, கட்டாயம்.
இதில் தேர்ந்தால் நீங்கள் அட்டகாசமான கதை சொல்லி ....தான்

No comments:

Post a Comment