ரஸ்ய எழுத்தாளர் கோகொல் எழுதிய ஒரு கதை. மூக்கு (Nose) என்று பெயர்.
ஒருவருடைய மூக்கு காணாமல் போய்விடுகிறது. அவர் அதை தேடித் திரிகிறார்.
மூக்கும் வீதிகளிலே அலைகிறது. போலீசிலே முறைப்பாடு செய்கிறார். மூக்கை
ஒருவராலும் கைதுசெய்ய முடியவில்லை. ஒருநாள் அதுவாகவே வந்து முகத்தில்
ஒட்டிக்கொள்கிறது. இந்தக் கதை ஒருவருக்குமே புரியவில்லை. ஒரு வாசகர்
மட்டும் அருமையான விளக்கம் கொடுத்தார். ரஸ்ய மொழியில் மூக்கு என்பதை
மாற்றிப்போட்டால் கனவு என்று வரும். ஆகவே இது கனவுதான் என்று தீர்மானமாகச்
சொன்னார். எழுத்தாளர் என்ன எழுதினாலும் வாசகர் தன்பாட்டுக்கு ஒரு விளக்கம்
கொடுத்தபடியே இருப்பார்.
No comments:
Post a Comment