Saturday, 11 August 2018

தட்சிணாய புண்ணிய காலம்

தட்சிணாய புண்ணிய காலமும் பண்டிகை கொண்டாட்டங்களும்
======================================
சூரியன் கடக ரேகையில் சஞ்சரித்து தெற்கு முகமாய் திரும்பி மகர ரேகை நோக்கி பயணிக்கும் தட்சிணாய புண்ணிய காலம்.
பெரும்பாலான விழாக்கள் ஆடியில் தொடங்கி மார்கழி மாதம் வரை கொண்டாடப் படுவது மரபு. வழக்கம் .
இன்று ஆடி அமாவாசை ....
... முன்னோர்கள் கடன் செய்வதில் துவங்கி திருமகள் வரலட்சுமி நோன்பு , ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி , ஸ்ரீ விநாயக சதுர்த்தி , மகாளய அமாவாசை துவங்கி ....நவராத்திரி - ஆயுத பூஜை , விஜய தசமி , தீபாவளி , திருக்கார்த்திகை தீபம் , மார்கழி நோன்பு - வைகுண்ட ஏகாதசி , ஆருத்ரா தரிசனம் வரை தட்சிணாய புண்ணிய கால கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெறும்..
இந்திரன் அரசாங்கம் நடத்தும் தேவர்கள் உள்ள வானுலகில் இந்த தட்சிணாய புண்ணிய காலம். அவர்களுக்கான ஓய்வு காலமாக கருதப்பட்டு அவர்களின் ஓய்வு காலத்திலும் அவர்களை மறக்காமல் அவர்களின் நினைவாய் இத்தகைய கொண்டாட்டங்கள் நடைபெறுவதாய் ஒரு நம்பிக்கை ...
நான் என் தந்தை (இந்து ) தாய் (கத்தோலிக்கர் ) வழி தாத்தா பாட்டி கல்லறைகளுக்கு போவது என் வழக்கம் . எல்லா ஆண்டுகளிலும் தவறாமல் போவது இல்லையெனினும் பெரும்பாலும் போயுள்ளேன்.அங்கு வணங்கி மனம் போன போக்கில் உரையாடி உறவாடி வருவதில் ஒரு மகத்தான ஆறுதல் கிடைக்கும்.
இந்த ஆண்டு மனம் உற்சாகம் குன்றி தளர்ச்சி காரணமாய் போக வில்லை .பெருங்காற்றும் சிறு தூறலும் எனக்கு ஒத்துக்காத சில்லறைக் காரணமும் உண்டு .
தென் மேற்கில் அவர்கள் கல்லறை உள்ள திசை நோக்கி எங்கள் வீட்டு மாடியில் இருந்து ஒரு கும்பிடு . எளிய பிரார்த்தனையுடன் இந்த ஆண்டு கடக்கிறது.இதுவும் நிறைவு தரும்.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் ...திருப்பங்கள் இருந்தால் தானே சுவாரஸ்யம்...ஒரே திசையில் இடைஞ்சல் இல்லாத வாழ்க்கை பயணம் அதிக அனுபவங்கள் தராது . மேலும் ரசனை சுவை எதுவுமே தராது. இல்லையா?
நிழலின் அருமை வெய்யிலில் ....
இந்த ஆண்டு தட்சிணாய புண்ணிய காலம். கிடைத்த மத்யமர் முகநூல் தளம் ஒரு வரம் எனக் கருதுகிறேன்.
சில எதிர்பாராத பிரச்சினைகளில் சிக்கி உழன்று மனம் சஞ்சலம் / துயரம் கொண்டுள்ள இன்றைய துன்ப சாகரத்தை கடக்க கிடைத்த உயிர் காக்கும் மிதவையென மத்யமரைக் கருதுகிறேன்.
ஒரே வட்டத்துக்குள் சுழலும் மனதை கொஞ்சம் திசை மாற்றும் கருவியாக மத்யமர் பயன்படுவதில் மகிழ்ச்சி .
இதில் படிக்கும் / எழுதும் நேரங்கள் ...மத்யமர் தோழமைகளோடு உறவாடும் நெஞ்சம் அகம் மகிழ்ந்து அக்களிக்கும் புண்ணிய காலமும் கூட ...
மத்யமர் அட்மின் குழாம் நட்புக்களுக்கு தட்சிணாய புண்ணிய கால விழாக் கால கொண்டாட்ட வாழ்த்துக்கள் ...!!!!

No comments:

Post a Comment