இன்றைய புத்தாயிரம் ஆண்டில் அதி மிகப் பயங்கர மனிதர்கள் யாரெனில் ...
காண்க படம்
---------------------
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை மிக இழிவான சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு மாபெரும் தீங்கு எனலாம்.
உலகில் உள்ள எல்லா மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன.
பொய் பேசுவது கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தவறுவது நம்பிக்கை மோசடி எல்லாமே மாபெரும் குற்றங்களே.
தனக்கு அறிவிக்கப்பட்டதை அதன் மெய் தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பி இன்றைய தகவல் ஊடகங்கள் மூலம் கண்மூடித்தனமாக பரப்புவோரும் போய் சொல்வோரே.
யாரையும் பாதிக்காத வேடிக்கைப் பொய்கள் சொல்வதும் தவறு தான்.
பொய் சாட்சி சொல்வதும் மிகக் கொடுங்குற்றமே.
ஏய்த்து பிழைக்கும் வேலை இன்று ஒரு கலை எனப்போற்றப்படும் கொடுமை.
கருடபுராணம் இத்தகையோருக்கு கடும் தண்டனைகளை வகுத்துள்ளது.....
ஒரு வேடிக்கையான கதை இணையத்தில் எதிலோ படித்த சுவையான சம்பவம் ...என் மொழியில்
மரணத் தருவாயில் மகனையும் ஏராளம் சொத்துக்களையும் ஒரு உறவினரிடம் ஒப்படைத்து மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும் உங்களுக்கு விருப்பமானவற்றை மகனுக்கு கொடுங்கள் எனக்கூறி உயிர் விட்டனர் பெற்றவர்கள்.
மகன் வளர்ந்து பிராயம் வந்ததும் சொத்துக்களை திருப்பிக் கேட்டதும் ஒரே ஒரு சிறு தோட்டம் மற்றும் வீடு மாத்திரம் அவனுக்கு கொடுக்கிறார் உறவினர்.
மகன் அவரது ஏமாற்றும் போக்கை புரிந்துகொண்ட மனதோடு நன்கு யோசித்து விவாதத்தை கைவிட்டான்.
நல்ல ஒரு புத்திசாலி வக்கீலை கண்டுபிடித்து
கொண்டுவருகிறான்.
புத்திசாலி வக்கீல் அந்த சிறு தோட்டமும் சிறிய வீடும் தவிர ஏனைய சொத்துக்கள் மட்டுமே உமக்கு விருப்பமானதாய் உள்ளதால் உமக்கு விருப்பம் ஆன அனைத்தும் அந்த இளைஞனுக்கு சொந்தம். அதை அவனுக்குக் கொடும்.
அந்த தோட்டமும் வீடும் உமக்கு என்று மாற்றி யோசித்து நியாயத் தீர்ப்பை அட்டகாசமாய் வழங்கினாராம் ...
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டே ....