ஒரு குருவும் சீடனும் காட்டு வழியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில் ஒரு காட்சி கண்ணில் பட்டது. ஒரு முயலை நரி ஓன்று துரத்தி கொண்டிருந்தது.
இதை கவனித்த குரு, சீடனிடம் கேட்டார். கவனித்தாயா?
ஆமாம் குருவே.
என்ன பார்த்தாய்?
ஒரு முயலை நரிஓன்று துரத்தி செல்கிறது.
சரி... என்ன நடக்கும்?
குரு இந்த கேள்வியை கேட்டதும் சிஷ்யனுக்கு சிரிப்பு வருகிறது. என்ன குருவே.... முயலை எப்படியும் நரி பிடித்து விடும்.
எதை வைத்து இப்படி சொல்கிறாய்?
முயல் வேகமாக ஒடகூடியதுதான். இருந்தாலும் அதை விட வேகமாக ஒடக்கூடியது நரி. அதனால் முயல் நரியிடம் சிக்கி கொள்வது இயல்பு.
அப்படி நடக்காது என்று நான் சொல்கிறேன்.
குரு இப்படி சொன்னதும் சீடனின் சிந்தனை வேறு விதமாக சென்றது.
இவ்வளவு புத்திசாலியான குரு, சில சமயம் முட்டாள் தனமாக சிந்திக்கிறாரே... முயலை விட நரி வலிமையான மிருகம் என்பது புரியாமல் இருக்கிறாரே என்று நினைக்கிறான்.
அப்போது குருவே கேட்கிறார். நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை பொறுத்தவரை முயல் நரியை பிடித்துவிடும். அதானே?
ஆம் குருவே.
இங்குதான் தவறு செய்கிறாய். இரண்டும் ஓடுகிறது. நரி எதற்கு ஓடுகிறது?
இரையை பிடிப்பற்தாக.
முயல் எதற்கு ஓடுகிறது?
உயிரை காப்பாற்றி கொள்வர்தற்காக.
இப்போது எது முக்கியம். உயிரா.... உணவா?
நரிக்கு உணவு முக்கியம். முயலுக்கு உயிர் முக்கியம்.
நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் முயலை விட நரி வேகமாக ஓடுமே. நான் சொல்கிறேன்....நரியிடம் சிக்காமல் முயல் தப்பிவிடும். கவனி.
குரு சொன்ன மாதிரி முயல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து நரியிடம் இருந்து தப்பி ஒரு புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. இந்த கதை எதற்கு தெரியுமா?
வாழ துடித்த முயல் மாதிரி... நீயும் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான்.
வலிமையான எதிரி என்று முயல் நினைத்திருந்தால் நரியிடம் சிக்கி இருக்கும். ஆனால் அதன் தைரியம், தப்பி விடலாம் என்ற தன்னம்பிக்கை, சிக்கி விட கூடாது என்கிற விடாமுயற்சி, இது இதுதான் உனக்கு வேண்டும்.
உனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை கண்டுபிடி. நான் சாதிக்க பிறந்தவன், சாதனையாளன் என்பதை நிரூபி.
நம்மில் பலர் இறந்த காலத்திலேயே வாழ்கிறார்கள். நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என்று பழம்கதை பேசியே காலத்தை வீணடிப்பார்கள். சிலர் எதிர்காலத்தை நினைத்தே காலத்தை போக்குவார்கள்.
எதிர் கால கனவு தேவைதான். எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில் என்ன செய்து இருக்கிறாய் இதுதான் உன் முன் உள்ள கேள்வி.
படிப்பறிவே இல்லாத காமராஜர் விவசாயி ஆகி ஏர் ஓட்ட போகவில்லை. தன்னை உணர்ந்தார். முதலமைச்சர் நாற்காலி அவருக்கு காத்திருந்து.
முதலில் உன்னை சோதனை செய். உன்னிடம் இருக்கும் திறைமையை கண்டுபிடி. வாழ்நாள் சாதனையாளராக மாறு. வரலாறு உன்னையும் பதிவு செய்து கொள்ளட்டும்.
No comments:
Post a Comment