Saturday 11 August 2018

எங்கள் கதை

1990 கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி ...ல் கல்யாணம் ....
நவம்பர் இருபத்தியெட்டுங்கோ 
----------------------------------------------------
அப்பா குடும்ப உறவினரோடு பத்தாம் நம்பர் கடையில் கிளாஸ் மோதி 'சியர்ஸ்' ல் ஆரம்பித்த பேச்சு ரெண்டே வாரத்தில் எக்ஸ்பிரஸ் வேகமாய் கல்யாண மேடையில் சுபம் ....
சகதர்மிணி / சம்சாரம் அமைதியான குணம் ...நானோ முன்கோபி ....மனதில் நினைப்பதை மனையாள் செய்ய வேணும்ன்னு எதிர்பார்க்கும் பிரகஸ்பதி?...
அவளது விருப்பங்கள் வேறு எனக்கு நேர் எதிர் மறை ...எனக்கு வழக்கமாய் காபி டீ வேண்டாம்..அவளோ காலை எழுந்தவுடன் காபி .... பருப்பு சாம்பார் எனக்கு பிடிக்கும் என்றால் அவளுக்கு மீன் குழம்பு ...
நான் பத்திரிகைகள் , புத்தகங்கள் கையில் எடுத்தால் பிரளயமே வந்தாலும் ....தெரியாது ...அவளோ காலை ரேடியோ ஆன் பண்ணினால் எப்போ 'ஆப் ' பண்ணுவான்னு ...தெரியாது ...அவளுக்கு வாசிக்கும் வழக்கம் 'தினமலர் ' தாண்டி வெகு அபூர்வமே ...
நாலைந்து ஆண்டுகள் ஆயிருந்த சமயம் அப்பாவோடு சம்பாஷணையில் அடியேன் ...
நான்:
என்ன கல்யாணமோ என்ன வாழ்க்கையோ ..ஒன்றுமே பொருத்தமில்லா ரெண்டு பேரை சேர்த்து ....ம் ஹூம்
அப்பா :
என்னடே ...என்னாச்சு ?
நான்:
பருப்பு குழம்பு வைக்கச் சொன்னா பிடிக்காது ... மீன் குழம்புன்னா எனக்கு அலர்ஜி ...இப்படியே ஒரே புலம்பல் ...
அப்பா:
முட்டாளே ...அதனாலே தாம்ப்லே அது ஒரு முழு வட்டம் ...ஒனக்கு புடிச்ச கருமமே அவளுக்கும் பிடிச்சிருந்தா அது அரை வட்டம் ...இப்போ உனக்கு பிடிச்சதும் அவளுக்கு பிடிச்சதும் வெவ்வேறு ங்கிறதால ...இப்போ தாம்ப்லே 360 டிகிரி முழுசா ....வாழ்க்கை ...அதான் ஜோரு...நீ ரொம்ப பாக்கியசாலி ன்னாரு ....
எனக்கு பொட்டில் அடி விழுந்து பொறி கலங்கிப்போய் அலங்க மலங்க முழிச்சேனுங்கோ....
அப்பா பள்ளிக்கூடமே போனவரில்லை ...இந்துவான அவர் காதலித்து கத்தோலிக்கரான அம்மாவை கரம் பிடித்து ...அப்பாலே தமிழ் எழுத படிக்க கற்றுக்கொண்ட மாமேதை ...மும்பையில் பிழைக்கப்போனவர் ஹிந்தி ...அப்புறம் குவைத்தில் வீட்டு காரோட்டி பணியில் .... அரபிக், ஆங்கிலம்,பிரெஞ்ச் (தேவைக்கு பேசுவார்) ...குவைத்திகள் படித்தது பிரான்ஸ் நாட்டில் ... காரில் வேடிக்கையாக அவர்கள் சொல்லிக் கொடுத்து ...கற்றுத் தேர்ந்தார் ...
அதனாலே நீதி என்னன்னா ...பிடிச்சது கெடைக்காட்டி...கெடைச்சத விரும்பு ...சிம்பிள் ...
விரைவில் மணமாகி இருபத்தொன்பதாம் ஆண்டு வருது ....
பல்லாண்டு வாழ்க !!!!!!சீரோடு சிறப்போடு அனுசரித்து .....ஆயிரம் ஆண்டு காலப் பயிரை அரவணைத்து போற்றிப் பாதுகாத்து வாழ்வாங்கு வாழி !!!!!!ன்னு எல்லோரையுமே ஆசீர்வதிங்க ...சரியா ?....
😜😜😜

No comments:

Post a Comment