Saturday 18 August 2018

கவிதையுங்கள்

நிறைய கவிதைகள் படியுங்கள், ஒரு கவிதையின் கரு அதாவது எதோ ஒரு வேலையாக நீங்கள் இருக்கும்போது திடீர் என ஒரு சில வரிகளோ வார்த்தைகளோ உள்ளத்தில் உதிக்கும், அதை உடனே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,
அவசரப்பட்டு அந்த வரிகளைக்கொண்டு கவிதை எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டாம் , சில நாட்கள் கழித்து பதிவேற்றம் செய்யுங்கள், சிறப்பாக கவிதை எழுதி இருந்தாலும் நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும்.
ஒரு கவிதை எடுத்துக்கொண்டால் அது ஒவ்வொரு வரிகளிலும் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்க வேண்டும், படிப்பவரை மேலும் மேலும் ஆர்வமூட்ட வேண்டும், படிப்பவரின் சிந்தனைக்கதவை திறக்க கூடாது உடைத்து எறிய வேண்டும்.
உதாரணமாக இந்த கவிதை :
தீப மரத்தின்
கொழுந்தாம்
தீக்கனி உண்ண
விட்டில் பூச்சி வந்தது
அந்தோ !!!
தீபக் கனியோ
விட்டிலை உண்டது
இதை ஒரு காதலில் ஆர்வம் கொண்டவன் படிக்கும்போது , காதலும் காதலியும் நினைவில் வரலாம்
இதை ஒரு தொழிலாளி படிக்கும்போது முதலாளித்துவம் நினைவில் வரலாம்,
எதிரியை நினைத்து ஒருவன் வெற்றியடைய நினைவு வரலாம்
இன்னும் எத்தனை எத்தனையோ அர்த்தங்கள்,
ஆகையால் தமிழின் புதிய வார்த்தைகளை அகராதியில் தேடி படியுங்கள், பயன் படுத்துங்கள் .........
கவிதை எழுதும்போது உங்களுக்காக எழுதுங்கள்,
உங்கள் சிந்தனையை கவிதையாக கறந்து பாருங்கள்,
பிறர் பாராட்ட வேண்டும் என நினைக்கவே வேண்டாம், ( பிறர் தரும் உற்சாகத்தை தாராளமாக ஏற்றுக்கொள்ளுங்கள் )
:) வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment