Sunday 19 August 2018

A Son Rises Up


A long time ago in a land far away, there lived two brothers. Their father was a wealthy landowner with holdings stretching across the countryside.
The boys grew up in a loving household, each treated fairly by their father, and educated by the finest teachers. They studied with the wisest of the wise holy men who shared lessons of scripture with the two lads.
Harry was the younger brother. He had a sensible nature and a keen wit. He loved learning and if there was a choice between a book or a game – the pages of a good story always won out.
Leon was a little older than Harry, and very different from his younger brother. He had a quick temper, tended to act impulsively and he had an imposing physicality. Leon was tall, broad and awfully strong. He loved to run races, he competed at sports.
The boys grew to be men with wives of their own, and their dear father died. The family mourned their patriarch, in the tradition of the time and they were grateful to God for having given them a fine father for so many years.
But then, not too long after, something good happened that turned out to be terrible. Gold was found in the hills on Leon’s property.
After their father’s passing, the real estate was divided equally between the two brothers. Everyone was happy with the arrangement until Leon discovered the gold. It was like something snapped inside his head. All he could think about was the riches buried under the ground.
Leon was determined to find all the treasures hidden in the resources of Mother Earth. The heartiest men in town were hired to dig for gold. Leon’s lush green fields turned into giant rabbit holes with mounds of dirt, torn up trees, and healthy green grass obliterated.
Harry saw the destruction and was appalled. He found no temptation to do the same. He and his wife Nell had more than enough to eat from their abundant gardens and enjoyed their simple life without need for more.
Months passed. Leon grew richer and more greedy. The gold became a drug, an obsession he could not control. Every week Leon paid a visit to his brother Harry trying to convince him to allow his gold miners to dig on Harry and Nell’s acres. The answer was always a firm no.
The meetings grew more contentious as the year went on until one day Leon threatened to takeover Harry’s land by force. A war between brothers was unthinkable to peace loving Harry, and he knew the time had come to do something about it.
Harry prayed hard, petitioning God for guidance. Answered prayers came swiftly. Harry ran home and approached his wife Nell in the garden she tended so faithfully.
“It’s time to leave.” he said. “Leon is not in his right mind, and I fear we are in danger. We must pack light, leave everything we have behind and start a new life elsewhere.” And without a trace, Harry and Nell left the land and left Leon behind.
When Leon found out that his only kin had run away from him, his first reaction was hurt, then anger at Harry. His final reaction was glee – for now he could take over his brother’s land and double his own riches by digging for more gold. And that is exactly what he did.
Harry and Nell journeyed for a fortnight and settled in a big city where they lived anonymously and happily. A son was born and their joy knew no bounds. Harry educated Martin, Nell taught him to love and labor earnestly and by the grace of God he grew to be a fine young man.
Meanwhile, Leon built an empire from the riches and as his wealth grew, so did his power. He employed thousands of people and demanded the strictest loyalty from them. He had a posse of thugs at his beck and call who would take care of the dirty work required of the tyrannical overlord.
Leon woke one day with revenge in his heart. He decided to send his thugs to every corner of the region to find his brother Harry and to have him killed. It didn’t take as long as he thought it would.
It was a cool May morning. Harry, Nell, and Martin lie sleeping in their bungalow. Two strangers entered the home and one slit Harry’s throat. Nell was the next victim and with a quick flick of the knife, Nell too, bled to her death. But young Martin escaped unseen.
Martin inherited his mother’s love and his father’s intelligence. The cruel senseless death of his parents brought him to a crossroads. Did he avenge the death of the two people he loved beyond measure? Or could he turn the other cheek in the face of hatred and get on with his life.
Instinctively, he had a powerful urge to go to his uncle’s house and deal the same fate has befell his own mother and father.
Intellectually, he knew that violence never ends with more violence, and his father and mother lived by the principles of peace.
Lovingly, he knew that his uncle was a tortured man and even the sinner deserves forgiveness and compassion.
And with his choices laid out before him and God, Martin wisely chose love.
His uncle’s thugs were on his trail and Martin knew he was their next target. He knew there was one place he could go where they would never look for him: He would go back to the land of his father.
Martin boldly went to the house of his uncle and asked for work. The housemaster hired him on – first in fields, then in the stables, and because Martin was super smart and a tireless worker, after a short while he was promoted assistant to the housemaster. This provided Martin with easy access to his Uncle Leon.
Martin studied the man responsible for his parent’s death and learned his every way. As he got to know him, a strange love grew there. Pity and understanding is a powerful combination.
Leon noticed the new assistant and took a liking to the lad. There was something pure, something good he noticed, which he hadn’t seen in all the years since his younger brother abandoned him.
After three months working in the big house side by side with his Uncle, Martin decided it was time for the big reveal.
“Sir, you have power and riches, yet you are unhappy. Every night your sleep is interrupted by nightmares. Your mind is in turmoil, your body is agitated, and your soul is lost. I can help.”
Leon was shocked to be spoken to so plainly, to hear kind words, to see a humble servant so self-assured.
“Tell me lad, what can you who has nothing do for me who has everything?”
Young Martin replied, “I am your nephew, and I can give you peace. I forgive you Uncle, and I am here to love you.”
Leon’s restless spirit broke down and his body relaxed. He released the tears which he held back for twenty long years. Martin embraced him until his uncle’s eyes were dry once more.
“Let’s praise God and pray together for redemption and family found.” Martin quietly suggested.
The uncle and his nephew did just that.
There was a sacred coming together of two souls who needed each other. Leon, long suffering in his loneliness. And Martin, who missed his mother and father with every passing day. They grieved their loss together in the tradition of the time, and went on to re-build the family, side by side, sowing goodness throughout land.

விண்வெளிப்பயணம்

பஸ்ஸில் ப்ளாஸ்டிக்கின் நெடியும், சிறுநீரின் நெடியும் வீசுகிறது. வாஞ்ஜீக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் அந்தப் பையன் பாட்டை ரொம்பவே உரக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய காதுக் குமிழிலிருந்து அது வெளியே வழிந்து அவளுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது. அவன் பெரிய உருவுள்ள பையன், அவனுடைய இருக்கை பூராவும் அகன்று, வெளியில் சரிந்து, அவளுடைய இருக்கையையும் ஆக்கிரமிக்கிறான், ஏதோ அவள் அதில் இல்லாதது போல. அவள் ஜன்னல் மீது ஒட்டி ஒடுங்கிக் கொள்கிறாள், தலையை அந்தக் குளிர்ச்சியான கண்ணாடி மீது சாய்த்துக் கொண்டு, கண்ணுக்குப் பின்னால் இருக்கும் துடிப்பைச் சற்று அமர்த்திக் கொள்ள முயல்கிறாள். ஒருக்கால் இன்னும் 40 நிமிடங்களில் வரப்போகும் அடுத்த நிறுத்தத்தில் இந்தப் பையன் இறங்கி விடலாம். ஒருவேளை இவனுடைய இருக்கையை எடுத்துக் கொள்ள அங்கு யாரும் ஏற மாட்டார்கள். பஸ் முழுதும் நிரம்பி இருக்கிறது, இந்தப் பாட்டுடைய அதிரும் கீழ்ஸ்தாயிச் சத்தம் இல்லாமலே, அலையலையாக எழும் பேச்சொலிகளும், நெடிகளும் எப்படியுமே வாஞ்ஜிக்கு வாந்தி வருவது போல ஆக்கி இருக்கும்.
க்ரஹாமைப் பார்க்க இது 10 மணி நேரப் பயணம்; இந்தத் தடவையாவது உள்ளே நுழைவதற்குச் சரியான நேரத்துக்குள் போய் விடலாமென்று வாஞ்சி எதிர்பார்க்கிறாள். எல்லாமே ரொம்பச் சீராக அமைந்து விட்டது, எங்காவது ஏதாவது தப்பாக நடக்காமல் இருக்காது என்று அவளுடைய குடலைக் கலக்கும் பயத்தை அவளால் அடக்க முடியவில்லை. ஒரு தடவை இல்லை, பல தடவைகள் அவள் அங்கே போக, நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து கொண்டு போய்- நேரம் கூட பரவாயில்லை, ஆனால் பணமொன்றும் எளிதில்லை, அவளுக்கு மாதத்திற்குக் கிட்டும் உதவித் தொகை அத்தனை சிறிசு- சிறைச்சாலையில் எல்லாவற்றையும் அவசரமாக முழுதும் அடைத்திருக்கிறார்கள், யாரும் உள்ளேயோ வெளியேயோ போக முடியாது என்று கண்டிருக்கிறாள், கடவுளுக்குத்தான் தெரியும் உள்ளே என்ன நடந்திருக்கிறதென்று. ஒருத்தருக்குக் கிடைக்கும் அறிக்கைகள் எல்லாமே நம்பத் தக்கனவாக இருப்பதில்லை, நகரத்தின் அலங்கோலமான நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு வினாடிக்கொரு தடவை கூகிளில் செய்திகளைப் படிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்போம், பிறகு, இன்னொரு ராத்திரிக்கு விடுதி ஒன்றில் தங்க நம்மிடம் வசதி இல்லை என்பதால், வீட்டுக்குத் திரும்பப் பஸ்ஸைப் பிடிக்கும் நேரம் வந்து விடும். சில சமயங்களில் க்ரஹாம் வீட்டை (தொலைபேசியில்) அழைக்க முடிகிற நிலை வருவதற்குள், அவன் குரலை வாஞ்சீ மறுபடி கேட்க முடிவதற்குள், பல நாட்கள் ஆகி விடும். அவள் எப்போதும் அந்த அழைப்புக்கான கட்டணத்தைக் கொடுக்க ஒத்துக் கொள்கிறாள், ஆனால் அவர்கள் ரொம்ப நேரம் பேசுவதில்லை. அந்த அழைப்புகளுக்கு நிறையக் கட்டணம் ஆகும்.
ஒரு ராத்திரித் தங்கலுக்கான சிறு பை வாஞ்ஜீயின் காலடியில் இருக்கிறது. அவளுடைய பணப்பையை உடலின் குறுக்கே வருமாறு தோளில் மாட்டி இருக்கிறாள், கைகள் அதன் மேல் காவலுக்கு இருக்கின்றன, அந்தப் பையன் பணப்பையைத் திடீரென்று பறித்துக் கொண்டு பஸ்ஸின் முன்பக்கம் நோக்கி ஓடிக் குதித்து விடுவான் என்று அச்சப்படுவதைப் போல. தான் வழிப்பறி செய்யத் தக்கவள் போலத் தெரிந்தாலும், அந்தப் பையில் இருப்பது அவளையும், ஒரு வேளை க்ரஹாமையும் தவிர வேறு யாருக்காவது சிறிதாவது மதிப்புள்ள பொருளாகத் தெரிந்தாலும் கூட, இது நடக்க வாய்ப்பில்லை என்று அவளுக்குத் தெரியும். அந்தப் பையன் அதை அவளளவு மதிக்க மாட்டான். அவன் அதை எப்படி மதிப்பான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அவள் எண்ணும் ஒவ்வொரு தடவையும், அவளுக்குத் தன் நெஞ்சில் பெரிய பாரம் ஒன்று இருப்பதாக உணர்கிறாள், சோகமும், குற்ற உணர்வும், மேலும் பாசமும் கலந்த ஒரு ரத்தக் கட்டி இருப்பது போல; சில நேரம் ஒரு சிறு அளவு பெருமிதமும் அதில் ஒண்டிக் கொள்கிறது என்று தோன்றுகிறது- அவளுடைய ஒரு குழந்தை தப்பித்துப் போய் விட்டாள், எங்கோ போய் விட்டாள், அது ரொம்பவே தூரம் என்றாலும் கூட- ஆனால் அவள் அந்தப் பெருமிதத்தை எப்போதும் நசுக்கி விடுகிறாள். வேறு யாரும் அவள் அது பற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தான் அது பற்றிப் பெருமிதம் கொள்ளத் தகுதி உள்ளவள் என்று அவளே நினைப்பதில்லை. பெருமிதம் ஆபத்தானது. அதிர்ஷ்டமும் அப்படித்தான், ஏனெனில் அது எப்போதுமே எதிராகத் திரும்பி விடும், தவிர இந்தப் பயணத்தில் ஏற்கனவே நிறைய அதிர்ஷ்டம் சேர்ந்து விட்டிருக்கிறது.
அவளுக்கு அடுத்திருந்த பையன் கொட்டாவி விட்டு, அசைந்து கொடுக்கிறான், அவளுக்கு ஓர் அங்குலமோ இரண்டோ, இடம் கொடுக்கிறான், அவள் அதை நன்றியுணர்வோடு பிடித்துக் கொள்கிறாள். இருட்டிக் கொண்டு வருகிறது, மேகங்களாலும், அழுக்கான ஜன்னலாலும் மறைக்கப்பட்ட சூரியன், கன்றிப் போன காயம் போல மேற்கில் மங்கலாகத் தெரிகிறது. ஆனால் குறைந்தது அவளால் வெளியே பார்க்க முடிகிறது, சாம்பல் நிற நெடுஞ்சாலை கடுகிக் கடப்பதைக் கவனிக்க முடிகிறது. மூன்று வருடங்கள் முன்பு, இந்தப் பயணம் மேற்கொள்வதை அவள் துவங்கியபோது, அவள் தனக்குத் தானே உறுதி பூண்டிருந்தாள், மொத்தப் பயணத்திலும் அவள் வெளியே பார்த்துக் கொண்டு போவாள், அப்போதுதான் அவளால் அதைப் பற்றி க்ரஹாமிடம் சொல்ல முடியும் என்பதற்காக. ஆனால் இங்கோ சாலைக்கருகில் எதுவுமே இல்லை, தட்டையான வெளிகளும், சோளமும், குதிரை மசால் தழைகளும்தான் இருக்கின்றன. சில நேரம் ஒரு கம்பைன் எந்திரம் உண்டு, ஆனால் அதில் எந்த மனிதரையும் அவளால் பார்க்க முடிவதில்லை. முதல் சில தடவைகளில் அவள் பசுமாடுகளையும், குதிரைகளையும் எதிர்பார்த்தாள். அதிர்ஷ்டம் இல்லை. அவள் அவனிடம் இந்த சூரிய அஸ்தமனத்தைப் பற்றியாவது சொல்வாள், அது நிஜமாக இருந்ததை விட அழகாக இருந்ததாகச் சொல்வாள்.
முழுவதும் இருட்டான பின்பு ஜன்னல் வழியே கூர்ந்து பார்த்து, நட்சத்திரங்களைக் காண முயல்கிறாள். சில நேரம் அவளால் பார்க்க முடிகிறது. இன்று இரவு நிலவு இருக்குமா என்பது அவளுக்கு நினைவில்லை, ஆனால் அதையும் பார்க்க முயல்கிறாள். வாஞ்ஜீ தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பதே, க்ரஹாமுக்கு அப்படிப் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் அவனால் இரவில் ஆகாயத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால்தான்.
ஜெல்லுக்கோ வேறெதையும் பார்க்க முடிவதில்லை. அந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதைப் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள். “நான் நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்!” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், அவளுக்குப் பின்னே அடுத்த சுற்றாக வாழ அவளுடைய கருமுட்டைகளில் இருந்து அவர்கள் குழந்தைகளை உருவாக்குவார்கள், அந்தக் குழந்தைகளுடைய முட்டைகளிலிருந்து இன்னொரு சுற்று குழந்தைகள் பிறந்து வாழும், இறுதியில் ஒரு கிரகத்தை அவர்கள் சென்றடைவார்கள். அந்த கிரகமோ, அறிவியலாளர்களின் கருத்துப்படி, பூமியைப் போலவே இருக்கும், மேலும்… சரி அதைப் பற்றி மேலும் சொல்ல என்னவிருக்கிறது? ஜெல் என்னவோ அதையும் பார்க்கப் போவதில்லை. அவள் செத்துப் போய நிறைய காலம் ஆகி இருக்கும். அங்கே போய்ச் சேர்கையில் அவளுடைய குழந்தைகளின் குழந்தைகளுமே செத்துப் போயிருப்பார்கள். அவள் இன்னொரு தடவை சூரியாஸ்தமனத்தையோ, குதிரை மசால் செடிகளையோ ஒருபோதும் பார்க்கப் போவதில்லை.
வாஞ்ஜீயைப் பொறுத்தவரை, அவளுடைய இரண்டு குழந்தைகளும் ஆயுள் பூராவும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தரையாவது தான் சென்று பார்க்க இன்னமும் முடிகிறதில் அவளுக்குக் கொஞ்சமாவது மகிழ்ச்சி.
பஸ் நிற்கும்போது அவள் அனேகமாக உறங்கிப் போயிருந்தாள். அவளுக்கு அடுத்து அமர்ந்த பையன் இறங்குகிறான். வேறு யாரும் பஸ்ஸில் ஏறவில்லை. தம் இருக்கையில் இருந்து வேறு யாரும் எழுந்து இந்த இருக்கைக்கு வரவில்லை. வாஞ்ஜீயின் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் பரவுகிறது, இன்னொரு இருக்கைக்கு தன் கைப்பையை அவள் மாற்றும்போதே, அந்தப் பையன் விஸ்தாரமாக அமர்ந்த மாதிரியே தானும் சரிந்து அமரும்போதே, அவள் தன் முதலிரு விரல்களை நெடுக்கில் பின்னிக் கொள்கிறாள். அசதிப் பெருமூச்சு விடுகிறாள், அவளுடைய தசைகள் முடிச்சவிழ்ந்து தளர்கின்றன, மீதம் இருக்கும் கடைசி சில மணி நேரங்கள் அவள் இனி உறங்கக் கூட முடியலாம். அதிர்ஷ்டம் இன்னும் கூடுகிறது, இவ்வளவு அதிர்ஷ்டம் ரொம்ப அதிகமானது, ஜெல்லுக்கு அந்த சீட்டு கிட்டிய போது அடித்த அளவு பைத்தியக்கார அதிர்ஷ்டம். பல தலைமுறைகளுக்கான அந்த விண்வெளிக்கலத்தில் இடத்திற்கான லாட்டரியில் அவள் வென்றது, எந்தத் தனி நபரும் தன் பயன்படுத்தலுக்கான அளவுதான் அது என்று சொல்லி விட முடியாத அளவு கொகெய்னைத் தன் காரில் க்ரஹாம் எடுத்துப் போனதற்காகப் பிடிக்கப்பட்டதற்குச் சற்று முன்னர்தான் நடந்தது, முட்டாள்தனமான துரதிர்ஷ்டம் அது, அவன் தன் காரின் பின்புற விளக்குகளில் ஒன்று எரியவில்லை என்பதைக் கவனிக்கத் தவறி இருந்தான், அதற்காக, காவல் துறையினர் அவனை ஓரம் கட்டிப் பிடித்தார்கள், ஆனால் மூன்றாம் முறை குற்றத்திற்காகப் பிடிக்கப்பட்டால் அதோகதிதான். ஏனோ வாஞ்ஜீக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் இம்மி அளவுதான் அதிர்ஷ்டம் கிட்டும் போலிருக்கிறது, பெரிய குவியலாக ஜெல்லுக்கு அதிர்ஷ்டம் பரிமாறப்பட்டதால்- அதை அதிர்ஷ்டம் என்று நாம் சொல்லலாம் என்றால்- க்ரஹாமுக்கு அதிர்ஷ்டம் குறைந்து போகவேண்டும் போலிருக்கிறது. தன்னிடம் எல்லா அதிர்ஷ்டமும் இப்போது குவியக் கூடாதே என்று வாஞ்ஜீ வேண்டுகிறாள். அவளின் குழந்தைகளுக்குத்தான் அவளை விட அதிகம் அதிர்ஷ்டம் தேவையாக இருக்கிறது.
க்ரஹாமுக்கு எந்த அதிர்ஷ்டத்துக்கும் தகுதி இல்லை, அவனுக்கு நேர்ந்ததெல்லாம் அவனே தேர்ந்தெடுத்த வினை, அதில் அதிர்ஷ்டத்துக்கு ஒரு பங்கும் இல்லை, போதை மருந்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சாக்கடைப்பயல் அவன் என்று சொல்வோர் இருப்பார்கள், அவளுக்குத் தெரியும். வாஞ்ஜீ கடவுளிடம் முறையிடாமலில்லை, க்ரஹாம் கோகெய்ன் விற்பனையில் இறங்காமல் இருந்திருக்கக் கூடாதா என்று, அதே நேரம் அவள் ஜெல்லுக்கு அந்த லாட்டரி சீட்டில் வெற்றி கிட்டாமல் இருந்திருக்கக் கூடாதா என்றும் வேண்டுகிறாள். உலகம் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். க்ரஹாம் அவளுடைய பிள்ளை. அவளுக்கு இருக்கும் குடும்பமெல்லாம் அவன் ஒருத்தன் தான், நாளைக்கு அவனுடைய பிறந்த நாள். அவளுடைய பையிலோ, அருமையிலும் அருமையானதாய், அவனுடைய சகோதரியிடமிருந்து அவனுக்கு ஒரு செய்தி இருக்கிறது. இப்போது இருக்கும் நம்பமுடியாத அளவு அதிர்ஷ்டம் தொடர்ந்து நீடித்தால், அவனுடைய பிறந்த நாள் அன்று வாஞ்ஜீயால் அதை அவனிடம் நிஜமாகவே சேர்த்து விட முடியப் போகிறது.
அது நடந்து முடிய என்னென்னவெல்லாம் இதுவரை நேராக நடந்திருக்க வேண்டுமென்று நினைத்தால் அவளுக்குத் தலை சுற்றுகிறது. ஜெல்லுடைய பக்கமே அத்தனை சிக்கலானது. குடியேறிகள்- குடியேறிகளாம் குடியேறிகள்! ஜெல் அவளுடைய மொத்த வாழ்நாளில் குடியேறப் போகிறது எல்லாம் அந்தத் தகர டப்பாவில்தான்- செய்திகளை அனுப்ப அவ்வளவு வாய்ப்புகள் கிட்டுவதில்லை, அவர்களோ அத்தனை பேர் இருந்தார்கள், எல்லாரும் மிகவும் வேலைப் பளுவில் வேறு சிக்கி இருந்தார்கள், பீன்ஸ் வளர்ப்பதிலிருந்து, ஒருத்தரொருத்தருடைய முட்டைகளையும், விந்தணுக்களையும் சேகரிப்பது, காப்பது போன்ற வேலைகளிலிருந்து, வேறென்ன விதத்திலெல்லாம் நேரத்தை அங்கே செலவழித்தார்களோ. குழந்தைகளைப் பற்றி வாஞ்ஜீ யோசிக்காமல் இருக்க முயல்கிறாள். ஜெல்லுக்கு என்ன குழந்தைகள் பிறந்தாலும், வாஞ்ஜீ அவர்கள் யாரையும் தூக்கி எடுக்கப் போவதில்லை.
எப்படியும் அவர்களுக்கு செய்திகள் அனுப்ப வாய்ப்புகள் அடிக்கடி கிட்டுவதில்லை. அதற்குக் கால அட்டவணை இருக்கிறது, சிறைக் கைதிகள் எப்போது வெளியுலகோடு அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம், எத்தனை நேரம் என்பதை எல்லாம் கட்டுப்படுத்தும் முறைகளைப் போலவே அதுவும் கறாரானது. அந்தத் தகர டப்பாவிலிருந்து வரும் செய்திகளோ எத்தனையோ கூடுதலான தூரம் கடந்து வர வேண்டும். செய்தி அனுப்புகிற நபரிடம் அந்தச் செய்தி பூமிக்குப் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று சொல்ல ஒரு கணினி வேறு இருக்கிறதாம். இப்போது அது வந்து சேர சில நாட்களாகின்றன, நிறைய செய்திகள் வந்து சேர்வதே இல்லை, ஏனெனில் அவை ரொம்பத் தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது, கிரகங்கள் மீதும், விண்கோள்கள் மீதும், விண்கலங்கள் மீதும், இன்னும் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ கடவுளுக்குத்தான் தெரியும், அவை மோதித் திரும்பி வர வேண்டுமாம். நிறைய செய்திகள் தொலைந்து போய் விடுகின்றன.
சென்ற வாரம் எப்படியோ ஜெல்லின் முறை வந்திருக்கிறது, அல்லது அதற்கு முந்தைய வாரமோ என்னவோ, க்ரஹாமின் பிறந்த நாளுக்குச் சரியான நேரத்தில் கிட்டத் தக்கதாய் ஒரு காணொளியை அனுப்பி இருக்கிறாள், அது வாஞ்ஜீயின் இலவச மின்னஞ்சல் கணக்குக்கு க்ரஹாமின் பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு வந்து சேர்ந்து விட்டது, அந்த நாள் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருக்கிறதால், வாஞ்ஜீயின் காசோலை அப்போதே வந்து சேர்ந்ததா, வாஞ்ஜீயிடம் ஒரு கட்டைவிரல் சைஸுக்கு ட்ரைவ் ஒன்றை வாங்கப் பணம் இருந்தது, அதில் அந்தக் காணொளியின் கோப்பைப் பதிவு செய்ய முடிந்தது, பஸ் டிக்கெட்டுக்கும், சிறைச்சாலை அருகே ஒரு விடுதியில் ராத் தங்கும் அறைக் கட்டணத்திற்கும் அவளிடம் பணம் இருந்தது, க்ரஹாமின் பிறந்த நாள் வார இறுதியில் வரும் பார்வையாளர் அனுமதிக்கப்படும் நாட்களில் வந்தது, அதுதான் எவ்வளவு தடவை அப்படி வந்து இருக்க முடியும்? அந்தச் செய்தி வந்து சேர்ந்தது என்பதே அபாரமான நிகழ்வு. இந்தப் பயணத்தால் வாஞ்ஜீக்கு மாதாந்தர சாப்பாட்டுப் பொருட்களுக்குச் செலவழிக்கப் பணம் போதாமல் இருக்கும், அவள் நன்கொடையாக உணவுப் பொருள் கொடுக்கும் இடங்களிலோ, இலவச சாப்பாடு கொடுக்கும் இடங்களிலோ போய் வரிசையில் நிற்பாள். எப்படியோ திண்டாடிச் சமாளித்து விடுவாள்.
அவள் க்ரஹாமிடம் அந்த ஃபைலை காட்ட அனுமதிப்பார்களா என்று முன்கூட்டியே சிறையதிகாரிகளைக் கூப்பிட்டு அவள் கேட்டுக் கொண்டிருந்தாள், வேறென்ன செய்ய? அவளே அதை இன்னும் பார்க்கவில்லை; அவனோடு சேர்ந்து அதைப் பார்க்க அவள் விரும்பினாள். அது ‘ஹாப்பி பர்த்டே க்ரஹாம்,’ என்று பெயரிடப்பட்டிருந்தது, அதனால் அது எதைப் பற்றியது என்று அவளுக்குத் தெரியும். சிறைச்சாலைக் கணினி ஒன்றில் அவளும், க்ரஹாமும் சேர்ந்து அதைப் பார்க்க வேண்டி இருக்கும். தான் அதற்குக் கட்டணம் ஏதும் கொடுக்க வேண்டி இராது என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவள் அழைத்துக் கேட்க வேண்டி இருந்தது: காணொளி வருகைகளுக்கு ஒரு மணிக்கு நூறு டாலர்கள் கட்டணம் இருந்தது, அது இன்னொரு தகிடு தத்தம், மறுபக்கம் அழைப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதைப் போல. சிறைச்சாலைகளுக்கு நிதி ஒதுக்கல் மிகக் குறைவு என்பதாலேயே அவை அத்தனை நெரிசலாக இருக்கின்றன என்று அவர்கள் எப்போதும் சொன்னார்கள், ஆனால் வாஞ்ஜீக்கு அவர்கள் பணமாக அள்ளுகிறார்கள் என்றுதான் தோன்றியது.
இன்னும் கொஞ்சம் அதிர்ஷ்டம்: ஒரு கைதி தனிமைச் சிறையில் இறந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டிருந்தது, பொது மக்களின் அபிப்பிராயம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது, அதனால், சிறைச்சாலை நிர்வாகிக்கு அவளுடைய அழைப்பு போய்ச் சேர அனுமதிக்கப்பட்டது, அவர் சிறையின் கணினியைக் கட்டணம் ஏதும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று உறுதி செய்திருந்தார். கைதிகள் தம் குடும்பங்களோடு தொடர்பு கொள்ள அவர்களுக்குள்ள உரிமை என்று ஏதோ, அதுவும் ஒருத்தரின் குடும்ப உறுப்பினர் தலைமுறைக் கலத்தில் இருந்தால், அவருடன் தொடர்பு கொள்ள காணொளி ஒன்றுதான் வழி என்றிருந்தால், அந்தக் காணொளி அந்த நபரின் அம்மாவின் மின்னஞ்சல் கணக்குக்கு வந்து சேரச் சில வாரங்கள் ஆகிறது என்றால், விட மாட்டோமா?
வாஞ்ஜீ இதையெல்லாம் நம்புகிறாளா என்றால், இந்த பஸ்ஸைத் தூக்கி அவளால் எறிய முடியும் என்பதை நம்பும் தூரம்தான் அதையெல்லாம் நம்புகிறாள். அந்த ஆரவாரமெல்லாம் இப்போது அடங்கி விட்டது. இருபதுக்கு ஒன்று பந்தயம், அங்கே கணினி ஏதும் இராது. அந்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் தன்னுடைய அழைப்பைப் பெற்றதாகவே ஒத்துக் கொள்வாரா என்பது பற்றி வாஞ்ஜீக்கு ஐயம்தான், அது அவருக்கு நினைவிருக்குமா என்பது பற்றியும் அப்படித்தான்.
எங்கோ போகும் உணர்வும், அவளுக்குப் பிடித்தமான, அவசரமாக விரையும் உணர்வில் கிட்டும் ஓர் அமைதியுணர்வும் சேர்ந்து பஸ் அவளைத் தாலாட்டியது. அவள் ஜன்னல் வழியே கூர்ந்து நோக்கினாள், ஆனால் வெளியே இப்போது மேகங்கள் இருந்தன, அவற்றுக்கும், ஜன்னலில் இருந்த அழுக்குக்கும் இடையே அவளால் நட்சத்திரங்களைக் காண முடியவில்லை. தன் இரண்டு இருக்கைகளையும் அவள் பின்னுக்குத் தள்ளுகிறாள், அவற்றில் எவ்வளவு தூரம் நீட்டிப் படுக்க முடியுமோ அவ்வளவு நீட்டிக் கொண்டு, தூங்குகிறாள்.
பஸ்ஸில் அவள் தூங்கியது நல்லதாயிற்று, ஏனெனில் ஹோட்டெல் அறையில் அவளால் சிறிதும் தூங்க முடியவில்லை: ஒரு பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி அலறியது, இன்னொரு பக்கம் கேட்கத் துன்பம் தரும் பாலுறவுச் சத்தமும், அலறல்களோடு சண்டையும், ஒரு மேடும் பள்ளமுமான மெத்தையுமாக, எப்படித் தூங்க. அவளுடைய தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி இருந்தது, அதனால் அவள் இருட்டில் படுத்துக் கிடக்கிறாள், அறையின் கூரையைப் பார்த்தபடி, ஜெல்லும், க்ரஹாமும் இதை விட மோசமான நிலைகளில் இருக்கிறார்கள் என்று தனக்குத் தானே நினைவு படுத்தியபடி. சிறைச்சாலை இதை விட நாராசமான சத்தங்கள் உள்ள இடம், இதை விட நெரிசலான இடம், தலைமுறைக் கலத்திலிருந்தோ விடுபட வழியே கிடையாது.
கடைசியில், மூன்று மணி வாக்கில், அவள் கிறக்கத்தில் ஆழ்கிறாள், ஆனால் ஐந்து மணிக்குச் சொல்லி வைத்தாற்போல திடுமென்று விழிப்பு வந்து விடுகிறது, வளர்ந்த பின் அவளுடைய மொத்த வாழ்விலும் அப்படித்தான் விழித்திருக்கிறாள். இதனால் அவளுக்கு சுடுநீர் முதலாவது ஆளாகக் கிட்டுகிறது, ஆனாலும் அது சீக்கிரமே தீர்ந்து போய் விடுகிறது. ஆனால் ஒரு ஷவர் குளியல் என்பது நல்ல குளியல்தானே. எதிர் சாரியில் இருக்கும் காப்பிக் கடையில் கிட்டும் காஃபி அவளுக்கு மேலும் புத்துணர்வைக் கொடுக்கிறது, அங்கே கொத்தி வதக்கிய முட்டையும் அவள் தனக்குச் செய்து கொள்வதைப் போலவே காற்றூதியதாக, இலேசாக இருக்கிறது.
சிறைச்சாலையில் வரிசையில் அவள் முதலில் இருக்கிறாள். “இவாஞ்சலீன் மோரிஸ்,” வாயிற் காவலாளரிடம் சொல்கிறாள், அவரும் இன்னும் முழுக்க விழிக்காதவர் போலத்தான் இருக்கிறார். “உங்க லாப்டாப் ஒண்ணெ நான் பயன்படுத்தலாம்னு ஏற்பாடு ஆகியிருக்கு. வார்டன் சொன்னார்.”
“அது சரிதான் மேம். என் கிட்டெயும் அப்படி ஒரு குறிப்பு இருக்கு. நீங்க உள்ளெ போனப்பறம் அதைக் கொண்டுட்டு வருவாங்க.”
அதிசயித்தபடி, ஆனால் இன்னும் சந்தேகத்துடன் – அந்த பொதுஜன உறவில் ஏற்பட்ட விரிசல் வழக்கத்தை விடக் கூடுதலான நாட்களாக இன்னும் நீடிக்கிறதோ- வாஞ்ஜீ தன் பர்ஸை இன்னொரு காவலரிடம் அவர் அதைச் சோதிப்பதற்குக் கொடுக்கிறாள், உலோகத்துக்காகச் சோதிக்கும் கருவிகளூடே நடந்து கடக்கிறாள், தன் பையை மறுபடி பெறுகிறாள். அவளுக்குப் பின்னே ஒரு நீண்ட வரிசையில் இதர பார்வையாளர்கள் காத்து நிற்கிறார்கள், அவர்களுடைய கனம் அவளுடைய முதுகில் அழுத்துவதை அவள் உணர்கிறாள், அந்த கனம் அவளை பார்வையாளர்களுக்கான அறையின் வாசல் கதவுகளூடே தள்ளிப் போகிறது.
பார்வையாளருக்கான அறை ஒரு மங்கலான மஞ்சள் நிறக் கன சதுரம், ஆங்காங்கே மேஜைகளும் நாற்காலிகளுமாகக் கிடக்கின்றன. மூலையில் இருக்கும் இரு தின்பண்ட விற்பனை எந்திரங்கள் எப்போதுமே பழுதாக இருப்பவை, இரைச்சல் சுவர்களில் எதிரொலிக்கிறது. அந்தரங்கத்துக்கு இங்கு கொஞ்சமும் இடமில்லை, ஆனால் உங்கள் ஆட்கள் யாரும் இங்கே சிக்கியிருந்தால், என்ன கிடைக்கிறதோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அங்கே க்ரஹாம் அவளுக்காகக் காத்திருக்கிறான், வேறொருவரும் அவனோடு அங்கே நிற்கிறார், ஆனால் வாஞ்ஜீ அதைப் பற்றி இப்போது கவலைப்படப் போவதில்லை: அவளுக்கு அனுமதிக்கப்பட்ட அணைப்புக்கு அவள் அவனை நெருங்குகிறாள். அந்த வருகையின் துவக்கத்தில் ஒன்று, முடிவில் ஒன்று அனுமதிக்கப்பட்டவை. க்ரஹாமை எத்தனை முடியுமோ அத்தனை இறுக அணைக்கிறாள், ஏதோ தன் பாசம் முழுவதையும் அவனுடைய தோலூடாகச் செலுத்தி விட முடியும் என்பது போல, இங்கேயிருக்கும் வாழ்வுக்கு எதிராக அது அவனுக்குக் கவசமாய் இருக்கும் என்பது போல. “சந்தோஷமான பிறந்த நாள், குழந்தே!”
“அம்மா.” அவன் குரல் கனமாக இருக்கிறது. அவள் பின்னே விலகி அவனை உற்றுப் பார்க்கிறாள்: போன தடவை பார்த்ததை விட இளைத்து இருக்கிறான் அவன், கன்னங்களில் கண்ணீர் ஓடுகிறது. “அம்மா, நான் பிரார்த்தனைக்காரரை என்னோடு அழைச்சுகிட்டு வந்திருக்கேன்.”
“என்னது?” அவள் இதயம் படபடக்கிறது. “என்ன மோசமா நடந்திடுச்சு?” க்ரஹாம் சென்ற தடவையை விட ஒல்லியாக இருக்கிறான். “நீ …”
“அம்மா, அந்தக் கப்பல்…நீ கேட்கலியா நேத்திக்கு ராத்திரிச் சேதியை?”
“என்னது? என்ன சேதி” அவள் நேற்று இரவு பஸ்ஸில் இருந்தாள், ஹோட்டலறையில் தொலைக் காட்சியோ பழுதானது. இல்லை, அவள் ஒரு செய்தியையும் கேட்டிருக்கவில்லை.
“தலைமுறைக் கப்பல் இருக்கே. அதில தீப் பிடிச்சிருக்காம். ஏதோ வெடிச்சிருக்கு. அதோட தொடர்பு அறுந்திருக்கு. யாருக்கும் எதுவும் தெரியல்லை. எல்லாரும் பயத்தில இருக்காங்க.”
வாஞ்ஜீ கண்களை மூடித் திறக்கிறாள். பிரார்த்தனைக்காரர் அவளை நிதானப்படுத்தக் கை நீட்டுகிறார், தான் ஆடுகிறோம் என்பதை அவள் உணர்கிறாள். க்ரஹாம் அவளை ஒரு நாற்காலியை நோக்கி நகர்த்துகிறான். அத்தனை அதிர்ஷ்டமும்: ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறதென்று அவளுக்குத் தெரியும். அவள் எச்சிலை விழுங்குகிறாள்.
“நான் எதையுமே கேட்கலையே.” யாரும் அந்த காஃபிக் கடையில் கூட இதைப் பற்றிப் பேசவில்லை. அவள் ஒரு காற்றுக் குமிழிக்குள் இருந்திருக்கிறாள், எந்த சிறைக்கைதியையும் போல, தலைமுறைக் கலத்திலிருந்த மனிதர்களைப் போல தனிமைப்படுத்தப்பட்டு. உயிரோடோ, இறந்தோ அப்படித் தனிமைப்பட்டே இருக்கப் போகிறார்கள் அவர்கள். “நான் – அவங்களுக்கு இன்னும் தெரியலயா?”
இப்போது க்ரஹாமும் உட்கார்ந்து விட்டான், அவளுக்கு எதிர்ப் புறம் ஒரு சிறிய மேஜைக்கு அந்தப்பக்கம். “யாருக்கும் எதுவும் இன்னும் தெரியாது. நெலமை மோசமாக இருக்கும்னு அச்சப்படுறாங்க.”
அவள் வாய்க்குள் காஃபி விட்டுச் சென்ற கசப்பு இன்னும் கடுத்தது, ரத்தத்தைப் போல உலோகச் சுவை. பிரார்த்தனைக்காரர் தொண்டையைச் சரி செய்து கொண்டார். “மேம், நான் மிகவும் வருந்துகிறேன். உங்களோட சேர்ந்து ஏதும் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் செய்யத் தயாராக இருக்கிறேன், அல்லது பேச வேண்டுமானா —”
அவரை அனுப்பி விட விரும்புகிறாள். இன்னும் யாருக்கும் எதுவும் தெரியாது என்றால், எல்லாம் சரியாகி விடும். தலைமுறைக் கலத்தில் பாதுகாப்புக்குப் பல அமைப்புகள் உண்டு. விண்வெளியில் எத்தனை தடவைகள் தீ விபத்து நேரிட்டிருக்கிறது, இல்லையா? எல்லாரும் தப்பித்துதான் இருக்கிறார்கள், இல்லை? இந்த செய்திக்காரர்கள் எப்பவும்போல பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். அதுதான் அவர்களுடைய போதை மருந்து, எல்லாரையும் எப்போதும் பீதியில் ஆழ்த்துவது, ஏதோ வாழ்க்கை ஏற்கனவே பீதீயூட்டுவதாக இல்லாதது போல. செய்திகள் கிளப்பும் பீதி நிஜம் இல்லை.
இந்த பிரார்த்தனைக்காரர் என்னவோ நிஜம்தான், ரொம்பவே நிஜம்; அவர் இவளுக்கு கலக்கமூட்டுகிறார், அவர் போய் விட வேண்டுமென்று அவள் விரும்புகிறாள். ஆனால் க்ரஹாம் அவரை இங்கு அழைத்திருக்கிறான். க்ரஹாம் அவளுக்கு ஏதோ உதவ வேண்டுமென்று நினைக்கிறான். க்ரஹாம், ஒருவேளை இனிமேல் அவளுடைய ஒரே குழந்தையோ என்னவோ, நல்லவனாகவும், பாசமுள்ள மகனாகவும் இருக்க முயல்கிறான். அவனுக்கு அவளைப் போஷிக்க நிறைய வழிகள் கிடையாது. அவனை இதைச் செய்ய அவள் விட வேண்டும்.
அதனால் அவளும், க்ரஹாமும் தலையைக் குனிந்து கொள்கிறார்கள், பிரார்த்தனைக்காரர் பாதுகாப்பும், நல்ல விளைவும், சௌகரியமும் பூமியில் இருக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் கிட்டுவதற்காக ஒரு துரிதமான, சுவையில்லாத பிரார்த்தனையை நடத்துகிறார். அவளுடைய தோளைச் சற்றுப் பிடித்து விடுகிறார், ஏதும் அவரோடு பேச வேண்டுமா அவளுக்கு என்று கேட்கிறார்.
“ரெவரெண்ட், நன்றி, ஆனால் எனக்கு என் மகனோட பேசணும். அவனோட எனக்கு இன்னும் அதிக நேரம் கெடைக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே. இன்னக்கி அவனுக்குப் பிறந்த நாள்.”
“சந்தோஷமான பிறந்த நாளாகட்டும்,” மென்மையாகச் சொல்கிறார் அவர், கிளம்பிப் போகிறார்.
க்ரஹாம் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். அந்தப் பிரார்த்தனை அவளை விட அவனை நிறைய பாதித்திருக்கிறது போல இருக்கிறது. “அம்மா, நமக்கு எப்படித் தெரியப் போறது அவள்…-”
“அவ நல்லாத்தான் இருப்பா.” வாஞ்ஜீ சொல்கிறாள். தன் குரலை அவளே கேட்கிறாள், ரொம்ப உச்ச ஸ்தாயியில் இருக்கிறது, ரொம்ப சத்தமாக. அந்தக் குரலை அவள் அறிவாள்: க்ரஹாம் கைதானபோது அப்படித்தான் அவள் பேசினாள், அவனுக்கு தீர்ப்பு கிட்டுவதற்குச் சில வாரங்கள் முன்பாக, அவளுக்கு எல்லாம் நல்லபடியாக முடியும், அவனுக்கு விடுதலை கிட்டி விடும் என்று அவள் நம்ப வேண்டி இருந்த நாட்களில். ஒரு வேளை நாம் உரக்கச் சொன்னால், அதை நம்பவும் செய்தால், எல்லாம் நல்லபடியாக முடியலாம். “நமக்கு எதுவும் தெரியாது. ஏதாவது நமக்குத் தெரியற வரை, அவள் நல்லபடியா இருக்கிறா. அவ உனக்கு ஒண்ணு அனுப்பி இருக்கா பாரு, க்ரஹாம்.” அவள் ஒரு காவலரைக் கூப்பிட்டு, மடிக்கணினி ஒன்றைக் கேட்கிறாள்.
அவர் அதைக் கொணர்கிறார். இது இப்போது அவளுக்கு ஒரு வியப்பையும் தரவில்லை. அந்த நம்பமுடியாத அதிர்ஷ்ட அலையைப் பற்றி அவளுக்கு இருந்த அச்ச உணர்வு இப்போது வடிந்து விட்டது, வேறெந்த அச்சத்தையும் அதற்குப் பதிலாக எழுவதற்கு அவள் அனுமதிக்க மாட்டாள்.
காவலர், தொண்டையைச் செருமுகிறார். “நீங்க இத உபயோகப்படுத்தறப்ப நான் இங்க இருக்கணும், தெரியுமில்லெ!”
“ஆமா, எங்களுக்குத் தெரியும்.”
அவர் எந்திரத்தை முடுக்கித் துவக்குகிறார். வாஞ்ஜீ, கைகள் சிறிதே நடுங்கி இருக்க, அந்த கட்டைவிரல் அளவு ட்ரைவை அதில் இணைக்கிறாள், ஒரு கோப்பைத் திறக்கிறாள். யாரோ மடிக்கணினியின் ஒலியை மிக உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போல, தலைமுறைக் கலத்தின் அடையாள இசை திடீரென்று இரைச்சலாகத் துவங்குகிறது, அதன் பிறகு உடனே “ஹாப்பி பர்த்டே க்ரஹாம்!” என்பது திரையை பூப்பூவான எழுத்துகளால் நிரப்புகிறது, பிறகு ஜெல்லின் முகம் திரையில் வருகிறது. வாஞ்ஜீ அதைப் பல மாதங்களாகப் பார்த்திருக்கவில்லை, ஒளிப்படங்களில் பார்த்ததைத் தவிர. அவள் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிகிறாள். தலை முடி குட்டையாக இருக்கிறது, அவள் ஒரு வெள்ளை டி ஷர்ட்டில் இருக்கிறாள்; அவளுக்குப் பின்னால் வாஞ்ஜீ உலோகச் சுவர்களையும், வெண்மையான நடை ஒன்றையும், அதில் மனிதர்கள் நடப்பதையும் பார்க்கிறாள்.
ஜெல்லின் குரல் சாதாரணமாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக, வாஞ்ஜீ ஒலியைச் சற்றுக் குறைக்கிறாள். “ஹேய் க்ரஹாம்! உன் பிறந்தநாளெக்கு நேரத்தில அம்மாவுக்கு இந்தச் சேதி வந்து சேர்ந்திருக்குன்னு நம்பறேன். அப்படி இல்லேன்னா, தாமதமா வாழ்த்துகள். எனக்கு ஒரு நிமிஷம்தான் இருக்கு, ஆனால் உங்களுக்குத் தெரியணும்னு நெனச்சேன். நீங்க ரெண்டு பேரும் பக்கத்தில இல்லாதது ரொம்பத் தெரியறது, எப்பவும் உங்களப் பத்தின நெனப்பாவே இருக்கு. இந்தக் கப்பல்லெ கொஞ்சம் சலிப்பாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப மோசமால்லாம் இல்லெ. நான் இன்னமும் செடிங்களெத்தான் பார்த்துக்கறென். எனக்கு அது பிடிச்சிருக்கு.” ஜெல் ஒரு சின்னஞ்சிறு மஞ்சள் மேலங்கியை உயர்த்திக் காட்டுகிறாள். “நான் இதை க்ரோஷேல பின்னினேன். என் முட்டைங்கள்ல ஒண்ணு பிடிச்சுகிட்டு இருக்கு: நான் ஒரு அம்மாவா ஆகப் போறேன்!” அவளுடைய சிரிப்பு மிகப் பெரிதாக இருக்கிறது இப்போது, பொது நீச்சல் குளத்துக்குக் கோடைக்காலங்களில் போகும்போது இப்படித்தான் அவள் சிரிப்பாள் என்பதும், பக்கத்து வீட்டுக்காரரின் நாயோடு விளையாடும்போதும் எல்லாம், தலைமுறைக் கலத்தில் தனக்கு இடம் கிடைத்து விட்டது என்று அம்மாவிடம் சொல்ல ஓடி வந்த போதும், அப்படிச் சிரித்தாள் என்பதும் வாஞ்ஜீக்கு நினைவு வருகிறது. “அம்மா பாருங்க, நீங்க ஒரு பாட்டி ஆகப் போறீங்க, க்ரஹாம், நீ ஒரு மாமாவாகப் போகிறே. அது என்ன குழந்தைன்னாலும், உங்க ரெண்டு பேர்ல ஒர்த்தர் பேரை அதுக்கு வைக்கப் போகிறேன். இங்க பொறக்கிற குழந்தைங்கள்ல, முதல்ல பிறக்கிற சில குழந்தைகள்ல அது ஒண்ணா இருக்கும். எனக்குத் தனியா நல்ல சாப்பாடு எல்லாம் கொடுக்கிறாங்க, நெறய்ய வைடமின் எல்லாம் சேர்த்து. இது பெரிய விஷயம். ஓகே, அவ்வளவுதான் எனக்கு இருக்கற நேரம். உங்க ரெண்டு பேருக்கும் என் அன்பு. வரேன்!”
செய்தி முடிந்து விட்டது. அறை இதுவரை வாஞ்ஜீ கேட்டிராதபடி மிக அமைதியாக இருக்கிறது. தன் முதுகுக்குப் பின்னே ஒரு அழுத்தத்தை வாஞ்ஜீ உணர்ந்து திரும்பிப் பார்க்கிறாள். பின்னால் மேஜைக்கு அப்பால் ஒரு கூட்டம் நிற்கிறது: இதர கைதிகளும், அவர்களுக்கான பார்வையாளர்களும், இதர காவலர்களும். பிரார்த்தனைக்காரரும். சிலர் சற்று அழுததைப் போல மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் அறையப்பட்டது போல நிற்கிறார்கள். என்ன அணிந்திருந்தாலும், சீருடைகளோ, கைதிகளின் உடுப்புகளோ, தெருவுக்கான ஆடைகளோ எதானாலும் எல்லாரும் ஒரே போலத் தெரிகிறார்கள்.
அவர்கள் அந்த இசையைக் கேட்டிருக்கிறார்கள். கப்பலில் இருந்து கிட்டிய செய்தியைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
“நமக்கு இன்னும் ஒண்ணுமே தெரியாது,” வாஞ்ஜீ சொல்கிறாள். அவளுடைய குரல் இப்போது வழக்கமான குரல் போல ஒலிக்கிறது. “எதுவும் நிச்சயமா இல்லை. அங்கே என்ன நடக்கிறதுன்னாலும், நாம இப்ப எதயும் செய்யப் போறதில்லெ. இன்னக்கி என் மகன் க்ரஹாமுக்குப் பொறந்த நாள். அவனுக்கு வாழ்த்துப் பாட எனக்கு உதவி செய்யுங்க.”
அவர்களும் அதைச் செய்கிறார்கள். அந்த அதிர்ச்சியாலும், சோகத்தாலும் பாதிக்கப்பட்டதால் அது ஒரு அரைகுறை முயற்சியாக, சுருதி தப்பி ஒலிக்கிறது. முழுவதும் நீடிக்கவும் இல்லை, ஆனால் இப்போதைக்கு அது அங்கே ஒலிக்கிறது. வாஞ்ஜீக்குத் தெரியும் இதுவும் ஒரு அதிர்ஷ்டம்தான்.
***

Saturday 18 August 2018

பொம்மை

" டேய் உன்னைப் பார்த்தாலே எனக்குக் கோபம் கோபமா வருதுடா... ஒழுங்கா என் பொம்மையை கொடுடா... இல்லனா அத்தைகிட்ட சொல்லிடுவேன்... அத்தே!!! இங்கே பாருங்க இவனுங்கள... டேய்ய்.....வினய் குரங்கு, ரிஷி எருமை ஒழுங்கா குடுங்கடா..”
" ஹஹா! உனக்குப் பேரழகினு நெனப்பு... உன் பொம்மைக்கு என் கையாலதான் சாவு நீ பார்த்துகிட்டே இரு" …
நானும் ரிஷியும் பொம்மையைத் தூக்கிபோட்டு தூக்கிப்போட்டு அவளை வெறுப்பேற்றி பார்த்தோம்… எங்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டாள் அந்தக் குட்டி ராட்சசி..
காலையிலே எங்கள் அத்தை மகள் சஞ்ஜனாவைத் தொந்தரவு செய்வதில் எனக்கும் ரிஷிக்கும் அவ்வளவு சந்தோஷம்… “இந்தாமா உலக அழகி, முடிஞ்சா எங்களைப் பிடிச்சி பாரு….. டேய் ரிஷி, ஓடுறா.. அவள் கையில இது கிடைக்கக் கூடாதுடா….” ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுவதும் அவள் எங்களைத் துரத்துவதும் வாடிக்கையான ஒன்றுதான்….
--------------
நான் வினய் தேவ்.... விநாயகருக்கு வேண்டி பிறந்ததால் எனக்கு வினய் தேவ் என்று பெயர் வைத்ததாக என் அம்மா சொல்வார். பல வருடங்கள் பிள்ளை இல்லாமல் பிறந்ததால் என் பெற்றோருக்கு நான் தவப் புதல்வன்.
என் குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். என் தாத்தா, பாட்டி எங்களுக்குத் தெய்வம் மாதிரி.. என் அப்பா திரு. தர்மதேவன் மூத்த மகன். அவருடன் கூடப்பிறந்தவங்க நால்வர். மூன்று தம்பிகள், ஒரு தங்கை. ஆக எனக்கு மூன்று சிற்றப்பாக்கள், ஒரு அத்தை ..
எங்கள் வீட்டில் முதல் ஆண் வாரிசு பிறந்தால் வம்சம் தலைக்கும்;
அடுத்து பெண் வாரிசு பிறந்தால் செல்வம் கொழிக்கும்
என்று குடும்ப ஜோசியர் சொன்னதாக என் அம்மா சொல்வாங்க...
ஜோசியர் சொன்ன மாதிரி நான் பிறந்ததும் அப்பாவின் தம்பிகளுக்கும் தங்கைக்கும் பிள்ளைவரம் கிடைத்ததாம். முதல் பெண் வாரிசாக சஞ்ஜனா பிறந்தவுடன் அந்த ஊரில் எங்கள் குடும்பம் மிகுந்த செல்வ செழிப்புடன் விளங்குவதாகவும் என் அம்மா சொல்லி சொல்லி எங்களுக்கு மனனம் ஆகிவிட்டது.
எனக்கு மிகவும் பிடித்த முதல் சிற்றப்பா அர்ஜூனனுக்குப் பிறந்தான் ரிஷி தேவ் - தம்பி என்று சொல்வதைவிட என் உயிர் நண்பன் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.
அடுத்து என் அத்தைக்குப் பிறந்தவள் சஞ்ஜனா – எங்கள் அனைவருக்கும் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்கிற ஒரே அத்தை மகள்.
இரண்டாவது சிற்றப்பா நகுலனுக்குப் பிறந்தவன் ரோஷன் தேவ் – என் தம்பி
மூன்றாவது சிற்றப்பா சகாதேவனுக்குப் பிறந்தவள் சஹானா – எங்கள் வீட்டுக் கடைக்குட்டி, என் அருமை தங்கை.
நாங்கள் நால்வரும் மிகுந்த ஒற்றுமையுடன் இருப்போம்… எங்கள் அத்தை மகள் சஞ்ஜனாவுக்கும் எங்களுக்கும் ஆகவே ஆகாது … அவள் எலி, நாங்கள் பூனை. தினமும் எங்கள் சண்டையைப் பிரித்து வைத்து அலுத்துதான் போனார் என் அம்மா…
எங்கள் வீட்டில் மூத்த பேரன் என்பதால் என்னை அனைவருக்கும் பிடிக்கும். அவளுக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனால் காட்டிக் கொள்ளவே மாட்டாள்… திமிர் பிடித்த பெண் போல பாசாங்கு செய்து முறைப்பாள். பெண்கள் சுபாவமே அப்படித்தானே!!
என்னை “பனானா பனானா”-னு கேலி செய்து எனக்குக் கோபத்தை வரவைத்து சிரிப்பாள்.
நான் சிறு குழந்தையாக இருந்தபோது வாழைப்பழத்தை உரித்து கொடுத்தார்களாம். நான் பசியில் பழத்திற்குப் பதில் தோலை கடித்து தின்று விட்டேனாம். என் அம்மா அந்தக் கதையைச் சொன்னதிலிருந்து எனக்கு “பனானா” என்று பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவாள்.
அப்படிக் கூப்பிட்டாலே என் மண்டைக்குள் யாரோ மணி எடுத்து அடிப்பதைப் போல் எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். பழிக்கு பழி வாங்க அவளுக்கு மிகவும் பிடித்த பொம்மையை வைத்து நாங்கள் அவளுக்கு வெறுப்பேற்றி விளையாடுவோம்….
இப்படியாக பல நாள்கள் சந்தோஷம் மட்டுமே எங்கள் வீட்டில் குடிகொண்டிருந்த தருணம் அது. எனக்கு வயது 12 இருக்கும். பள்ளியில் நான், ரிஷி மற்றும் சஞ்ஜனா மூவரும் போட்டி போட்டுக்கொண்டு படிப்போம்.
தேர்வில் எப்போதும் முதல்நிலை மாணவன் நான் தான். பல நாட்கள் பல மணிநேரங்கள் கண்விழித்து படித்தாலும் அந்த ராட்சசி இரண்டாவதாகவே வருவாள். என் மதிப்பெண்களை நினைத்து, அவள் கதறி கதறி அழுவதைப் பார்த்தால் எனக்கே கண் கலங்கும். அந்த வருடம் அரையாண்டுத் தேர்வில் அவள் முதல் முறையாக முதல் நிலை தேர்ச்சி பெற, நான் வேண்டுமென்றே சில கேள்விகளுக்குப் பிழையாக பதிலளித்தேன். அதன் விளைவாக அவள் தேர்வில் முதல் நிலை. நான் இரண்டாவது நிலை. அதற்கு அவள் பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
நான் விட்டுக்கொடுத்தது அவளுக்குத் தெரியாது, ஆனால் எங்கள் ஆசிரியருக்குத் தெரியும். என்னைக் கூப்பிட்டு இனிமேல் அப்படிச் செய்யக்கூடாது என அறிவுரை கூறினார். அதை எவனோ ஒரு மாணவன் ஒட்டு கேட்டு அவளிடம் போய் சொல்லித் தொலைத்ததும் என் வீட்டில் பூகம்பம் வெடித்தது.
“ டேய், நீ விட்டுக்கொடுத்துதான் எனக்கு மார்க் கிடைக்கணும்-னு எனக்கு அவசியம் இல்லடா… சீ… எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு! எனக்கு விட்டு தர மாதிரி விட்டு தந்து, நீ விட்டு கொடுத்தால் மட்டும் தான் என்னால் தேர்ச்சி பெற முடியும்னு எல்லோரையும் நினைக்க வெச்சிட்ட இல்ல… இனிமேல் என்னைத் தொட கூடாது, என் கண்ணுல நீ படவே கூடாது, என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் கூட நான் அடுத்த நிமிடம் செத்துருவேன்டா, இது என் அம்மா மேல சத்தியம்”…-னு ஒரே போடு போட்டுவிட்டு ஓடிப்போய் அவளது அறைக்கதவை மூடிக்கொண்டாள் சஞ்ஜனா.
“இந்த வயசுல ஒரு பொண்ணுக்கு என்னடி இவ்வளவு கோபம்?”-னு கேட்டுக்கொண்டே கதவைத் திறந்து விளக்குமாற்றால் அவளைப் பிய்த்து எடுத்து விட்டார் என் அத்தை. என் மாமா அதற்கு மேல். மோப் கம்பைக் கொண்டு அவளை நைய புடைத்துவிட்டார். எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்த்ததைப் போல இருந்தது அவர்களது செயல். என் பெற்றோர் அறைக்குள் சென்று தடுத்த பின்னரே அவள் தலை தப்பியது.
அன்று, நான் மனம் உடைந்து கதறியதைப் பார்த்து என் குடும்பமே கண்ணீர் வடித்துவிட்டனர். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எனக்கு ஒரு சோறு தண்ணீர் இறங்கவில்லை. அன்று முழுவதும் என் வீட்டில் மயான அமைதி. நான் சாப்பிடாததால் யாரும் சாப்பிடவில்லை.
எங்கள் வீட்டு சமையல்காரர் முத்தான் எனக்கு சோறு போட்டு வந்து ஊட்டினார். யாருக்கும் மசியாத நான் அவர் அன்புக்கு அடிமை; அவர் மனம் கஷ்ட படக்கூடாது எனக் கொஞ்சம் சாப்பிட்டேன். சஞ்ஜனாவுக்கும் சோறு ஊட்டிவிட்டதாக அவர் கூறினார். முத்து என்ற அவருக்கு முத்தான் என்று பெயரிட்டு அழைத்தது சஞ்ஜனா தான். அனைவரும் அந்தப் பெயரை வைத்துதான் அவரை அழைப்பார்கள். அவர் உணவு என்றால் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இப்படியாக மூன்று நாள்கள் ஆகின. அவளிடம் மன்னிப்புக் கேட்டு சமரசம் ஆகிவிட நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. அவள் அறையை விட்டே வெளியே வரவில்லை. ரிஷியிடம் மன்னிப்புக்கடிதம் எழுதி தூதுவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. அவள் வெளியே வந்தால் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று மனம் கூறியது. அவள் என்னுடன் என்னதான் சண்டை போட்டாலும் அவள் என்றால் எனக்கு உயிர். இதயத்தைக் கீறியதைப் போன்று ஒரு வலி. தானாக என் விழிகள் அழுகின்றன. என்ன நான் இப்படி ஆகிவிட்டேன்? எனக்கே என்னைப் பார்க்க பாவமாக இருந்தது.
என் குடும்பத்தில் தென்றல் அடங்கி புயல் அடிக்கத் தொடங்கிய காலம் அது. என் மாமா குடும்பத்தினர் கோயில் யாத்திரைக்குக் அத்தையையும் சஞ்ஜனாவையும் அழைத்து செல்ல ஆயத்தமானார். ஏதோ அவளுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டுமாம். அவள் மகிழுந்து ஏறும்போது ஒளிந்திருந்து பார்த்தேன். அவளது கண் என்னைத் தேடியதை என் கண் கண்டுபிடித்து விட்டது. இதுதான் நல்ல தருணம் என மரத்தின் பின்னிருந்து முன்னுக்கு வந்தேன். அவள் பார்த்த பார்வை இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
என்னைப் பார்த்ததும் வேறு எங்கேயோ பார்ப்பதுபோல் தலையைத் திருப்பிக்கொண்டாள். மகிழுந்து புறப்பட்டு விட்டது, நான் அவளைப் பார்ப்பது அதுதான் கடைசி என்பது எனக்கு அப்பொழுது தெரியாது.
இது ஆப்பிள் நிறத்தில் இருக்கும் அவளது கதை; எனக்குத் தெரியாமல் எனக்குள் வந்து குடிக்கொண்ட என் தேவதையின் கதை.

பூனை பிரபு

முன்னொரு காலத்தில் உழவன் ஒருவன் பூனை ஒன்றை வளர்த்து வந்தான். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை.
இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தான் அவன். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தான்.
அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.
"ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்" என்று கேட்டது அது.
"நான் பூனை பிரபு" என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.
அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. "ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உண்மையுள்ள மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன்" என்றது.
பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.
தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும் பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.
ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.
"நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?" என்று கேட்டது முயல்.
"என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்" என்றது நரி.
அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. "உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்" என்றது அது.
இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது.
முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.
"எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?" என்றது கரடி.
"உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?" என்று கேட்டது முயல்.
"எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்" என்றது ஓநாய்.
எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.
மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப் பட்டன.
"யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?" என்ற சிக்கல் எழுந்தது.
"எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?" என்று மறுத்தது பன்றி.
"எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லை" என்றது ஓநாய்.
"ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாது" என்றது கரடி.
மூன்றும் முயலைப் பார்த்து, "விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்" என்றன.
முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தது.
வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.
"பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நால்வரும் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து நீங்களும் பூனை பிரபுவும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்றது முயல்.
"நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள் பூனை பிரபு உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?" என்று கேட்டது நரி.
இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது அது.
பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.
"நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்" என்றது கரடி.
"அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்" என்றது ஓநாய்.
"உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்" என்றது முயல்
"அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்" என்றது பன்றி.
பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.
பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "மியாவ், மியாவ்" என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.
புதரில் இருந்த ஓநாய், "எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறது" என்றது.
"ஆமாம்" என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.
மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.
பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.
மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.
சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.
"மாட்டிக் கொண்டாயா?" என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.
எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்து "தப்பித்தேன்" என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.
பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விழுந்தது.
அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது. முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது. வலியைத் தாங்கிக் கொண்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று கரடியும் ஓடியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.
"பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்" என்றது கரடி.
மற்ற மூன்றும் "ஆமாம்" என்றன.
அதன் பிறகு பூனை பிரபுவின் வழிக்கே அவை செல்லவில்லை.

ஹைக்கூ

பட்டு நெய்தான்
கந்தல் உடையுடன்
நெசவாளி!
********************************************************
காவல் தெய்வம்
கையில் அரிவாள்
காணவில்லை உண்டியல் !
**********************************************************
மக்களைக்
காப்பது இருக்கட்டும்
முதலில் உன்னைக்
காப்பாற்றிக் கொள்
தெருவோரக் கடவுளே!
**************************************************************
அழும் குழந்தை
பால் ஊற்றினர்
பாம்புப் புற்றுக்கு!
**************************************************************

வெளியே தெரியாதவன்..!

வெளியே தெரியாதவன்..!
--------------------------------------
சரியான நேரங்களில்
நான் தட்டிய பலகையும்
இக்கைத்தட்டலுக்கு
காரணமென்ற சிறு
கர்வமுண்டு.

நீங்கள் உருகி உருகி
இரசிக்கும் முத்தக்காட்சிக்கு
நாயகியின் உதட்டுச்சாய
விகிதத்தை எத்தனைமுறை
சரிபார்த்திருப்பேன்.
பிரபல நடிகர் செய்யும்
தவறுக்கு சினம் உறுஞ்சும்
பஞ்சாக இருந்திருக்கிறேன்.
அரைகுறை ஆடையோடு
அவள் பழரசம் அருந்தும்வரை
வசனக்காகிதத்தில் இருந்து
கவனம் சிதறாமல்
என்னாலிருக்க
முடிந்திருக்கிறது.
என் விழிகளாடா
பென்டுலம் தான்
தொடர்ப்பிழையில்லா
இக்காட்சிகள்.
திருட்டு எனக்கு
பழகிப்போன
இருட்டு.
உறவுகளுக்கு
உருப்படாதவன்.
காதலியின்
எப்போ சாதிப்ப என்ற
வதைப்புக்குச் சொந்தக்காரன்.
அப்பாவின் போதும்
வேறு வேலை பார்
இதை விட்டுவிடு என்பதில்
பலமுறை தப்பித்தவன்.
எல்லாம் தாண்டி
முட்டைக்கருவாய்
கனவுளை அடைகாக்கிறேன்.
கொட்டையெழுத்தில்
ஒருநாள் என் பெயர்
திரையில் தோன்றவே.
ஆம்
நான் வெளியே
தெரியாதவன்.
எனக்கு
உதவி இயக்குனர்
என்று பெயர்..

கவிதையுங்கள்

நிறைய கவிதைகள் படியுங்கள், ஒரு கவிதையின் கரு அதாவது எதோ ஒரு வேலையாக நீங்கள் இருக்கும்போது திடீர் என ஒரு சில வரிகளோ வார்த்தைகளோ உள்ளத்தில் உதிக்கும், அதை உடனே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,
அவசரப்பட்டு அந்த வரிகளைக்கொண்டு கவிதை எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டாம் , சில நாட்கள் கழித்து பதிவேற்றம் செய்யுங்கள், சிறப்பாக கவிதை எழுதி இருந்தாலும் நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும்.
ஒரு கவிதை எடுத்துக்கொண்டால் அது ஒவ்வொரு வரிகளிலும் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்க வேண்டும், படிப்பவரை மேலும் மேலும் ஆர்வமூட்ட வேண்டும், படிப்பவரின் சிந்தனைக்கதவை திறக்க கூடாது உடைத்து எறிய வேண்டும்.
உதாரணமாக இந்த கவிதை :
தீப மரத்தின்
கொழுந்தாம்
தீக்கனி உண்ண
விட்டில் பூச்சி வந்தது
அந்தோ !!!
தீபக் கனியோ
விட்டிலை உண்டது
இதை ஒரு காதலில் ஆர்வம் கொண்டவன் படிக்கும்போது , காதலும் காதலியும் நினைவில் வரலாம்
இதை ஒரு தொழிலாளி படிக்கும்போது முதலாளித்துவம் நினைவில் வரலாம்,
எதிரியை நினைத்து ஒருவன் வெற்றியடைய நினைவு வரலாம்
இன்னும் எத்தனை எத்தனையோ அர்த்தங்கள்,
ஆகையால் தமிழின் புதிய வார்த்தைகளை அகராதியில் தேடி படியுங்கள், பயன் படுத்துங்கள் .........
கவிதை எழுதும்போது உங்களுக்காக எழுதுங்கள்,
உங்கள் சிந்தனையை கவிதையாக கறந்து பாருங்கள்,
பிறர் பாராட்ட வேண்டும் என நினைக்கவே வேண்டாம், ( பிறர் தரும் உற்சாகத்தை தாராளமாக ஏற்றுக்கொள்ளுங்கள் )
:) வாழ்த்துக்கள்

குருவிக்கு- தண்ணீர் உணவு

சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மலை முழுங்கி சின்னக் குருவியைப் பற்றித் தெரியுமா?
அதோ… ஒரு பெரிய மலை தெரியுது இல்லையா? அதற்குக் கீழ மலையடிவாரத்துல கொன்றை மரம் ஒன்று இருக்கு. அந்த மரத்துல கூடு கட்டி வாழுது இந்த மலை முழுங்கி சின்னக் குருவி.
அது பொதுவான குருவிதான். தன்னால நாள்தோறும் ஒரு மலையை முழுங்க முடியுதுன்னு, மற்றவர்களை நம்ப வைத்து, தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர்தான் மலை முழுங்கி சின்னக் குருவி.
அந்தக் கொன்றை மரத்துல சின்னக் குருவியைப் போலவே, வேறொரு கிளையில மைனா ஒன்றும் கூடு கட்டி வாழ்ந்தது. ஒரே மரத்தில இருக்கிறதால, இரண்டு பேரும் நண்பர்கள் ஆனார்கள்.
ஒவ்வொரு நாளும் மைனா எங்கே போனதோ, அந்த இடத்தோட வளத்தையும், அழகையும், மிக அழகாகச் சின்னக் குருவியிடம் வந்து சொல்லும்.
அடிப்படையில சின்னக் குருவி ரொம்ப சோம்பேறி. ரொம்ப தூரம் பறந்து போய் இரையைத் தேடாது. பக்கத்திலேயே போய்விட்டு கூட்டுக்குத் திரும்பிவிடும். வந்து கூட்டுக்குள் உறங்கும். தாகம் எடுத்தால் மலையடிவாரத்துல ஓடும் நதியில் தண்ணீரைக் குடிக்கும். ஆனா, மைனாகிட்ட “நான் ரொம்ப தூரம் போனேன். அங்கே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன்னு” ரொம்ப பொய் சொல்லும்.
சின்னக் குருவி சொல்லும் பொய்களை உண்மை என்றே நம்பியிருந்தது மைனா.
“குருவி நண்பனே! எனது நண்பர்கள் வெளியூரிலிருந்து, அருகில் உள்ள ஊருக்குச் சுற்றுப்பயணம் வருகிறார்கள். ஆகையால் நான் அங்கு செல்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகிவிடும்” என்று கூறிவிட்டு புறப்பட்டது மைனா.
மைனா திரும்பி வருவதற்குள் சின்னக் குருவி, ‘மலை முழுங்கி சின்னக் குருவி’ என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டது. அது சுற்றுவட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஒருவாரம் கழித்து, திரும்பி வந்த மைனா, “என்ன குருவி நண்பனே! உனது பெயர் சின்னக் குருவிதானே! ஆனால், எல்லோரும் மலை முழுங்கி சின்னக் குருவி என்று அழைக்கிறார்களே” என்று ஆவலாகக் கேட்டது.
“ஹா….! ஹா…!” என்று சிரித்த சின்னக் குருவி, “என்ன மைனாவே! என்னுடைய பலத்தை அறியாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாயே. நீ என் நண்பன் என்பதால் உன்னை சும்மா விடுகிறேன். வேறு யாராவது கேட்டிருந்தால் அவ்வளவுதான்” எனக் கோபமாகக் கூறியது.
“நண்பனே! இதிலே கோப்படுவதற்கு என்ன இருக்கிறது. நாம் இருவரும் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம். ஆகையால் உனது பலம் எனக்கும் தெரியும். அதுமட்டுமல்ல நம்மைப் போன்ற சிறிய பறவைகளால் அவ்வளவு பெரிய மலையை அல்ல… மடுவைக்கூட முழுங்க இயலாதே” என்றது மைனா.
“அப்படியா? நீ நம்ப வில்லைதானே? சரி, நாளைக்குக் காலை அந்த நதிக்கு வா.. நான் மலையை முழுங்குவதைக் காணலாம்” என்றது சின்னக் குருவி.
“சரி!” என்று கூறிவிட்டு உணவுத் தேடிப் பறந்தது மைனா.
மறுநாள் காலை மலையடிவாரத்தில் உள்ள நதிக்கு இரண்டும் வந்தன.
அப்போது சூரியன் மலைக்குப் பின்னால் ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் மலையின் நிழல் நீரில் விழுந்திருந்தது.
“மைனாவே! இதோ பார்! இந்த நீரில் மலையின் அச்சு தெரிகிறது அல்லவா?” எனக் கேட்டது சின்னக் குருவி.
“ஆமாம், தெரிகிறது” எனப் பதில் சொன்னது மைனா.
“இப்போது பார்” எனத் தன் மெல்லிய அலகால் கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடித்துக் கொண்டிருந்தது சின்னக் குருவி.
நேரம் ஆக ஆக சூரியன் மேலே போனது. மேலேச் செல்ல செல்ல மலையின் நிழல் நதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு, “மைனாவே! பார்த்தாயா? நான் நீரைக் குடிக்க குடிக்க மலையின் நிழல் குறைந்து கொண்டே வந்தது. அந்தக் குறைந்த மலையின் நிழல் என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது” என்றது சின்னக் குருவி.
இப்போது “ஹா…! ஹா…!” என்று சிரித்தது மைனா.
“என்ன மைனாவே! ஏன் சிரிக்கிறாய்?” எனக் கேட்டது சின்னக் குருவி
“என்ன சொல்வது குருவி நண்பனே! மலை அதன் இடத்தில் தான் இருக்கிறது. நீ தாகத்துக்கு தண்ணீர் குடித்தாய். சூரியனின் ஒளியால் அதன் நிழல் நீரில் படிந்திருக்கிறது. சூரியன் தன் வேலையைச் சரியாகச் செய்வதால், அதன் ஒளி மேலே செல்ல செல்ல மலையின் நிழலும் குறைந்தது.
அப்படியானால் சூரியன் தானே மலையின் நிழலை முழுங்கி இருக்க முடியும்? நீ முழுங்கி விட்டதாகத் தவறாக நினைத்துக்கொண்டு, பட்டப் பெயரை வேறு சூட்டிக் கொண்டாயே…” என விளக்கியது மைனா.
“ஓ.. நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேனா?” எனச் சொல்லி தலை கவிழ்ந்தது சின்னக் குருவி.
“குருவி நண்பனே! கவலைப்படாதே. நாம் நம் கடமையில் சரியாக இருந்தால், அதுவே சிறப்பு தான். இது எல்லோருக்கும் இயல்பாக நடக்கக்கூடிய தவறுதான்” என்றது மைனா.
“மைனாவே! என் தவறை எனக்குப் புரிய வைத்ததற்கு நன்றி” என்றது சின்னக் குருவி.
“சரி! வா… நண்பனே… இருவரும் இணைந்தே உணவுத் தேடிப் பறப்போம்” என அழைத்தது மைனா.
மிகுந்த உற்சாகத்தோடு, வானில் பறக்க ஆரம்பித்தது சின்னக் குருவி.
“குழந்தைகளே, உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் பாருங்கள்… அந்த சின்னக் குருவி ஏதும் வந்திருக்கிறதா என்று. முடிந்தால் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் குருவிகளுக்காகத் தானியங்களையும், நீரையும் வையுங்கள்.”

முத்த ஈரம்

முத்த ஈரம்
ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே வந்தான் பாலா. ஒரு சேனலில் பாடல் காட்சியில் காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அடுத்த நொடியில், திடீரென ஒரு ஏக்கம் கலந்த சோகம் அவனுள் இழைந்தோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்த சோகம் அவனைத் தாக்கியது. இந்த சோகம் அவனுக்குள் அடிக்கடி வராது என்றாலும், இந்த சோகம் அவனுக்குள் இருப்பதை அவன் அடிக்கடி உணர்ந்திருக்கிறான்.
‘தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே’ என்ற சோகம்தான் அது. தொலைக்காட்சியில் பார்த்துதான் இந்த ஆசையோ சோகமோ அவனுக்கு வந்திருக்க வேண்டும் என்றில்லை. இயற்கையாகவே அது இருக்கிறது என்பதை பாலா உணர்ந்திருக்கிறான். அனைவருக்கும் அப்படித்தான் இருக்கும்’ என்றும் அவனுக்குத் தோன்றியது. தொலைக்காட்சி பார்த்தவுடன் சில சமயம் அது நினைவிற்கு வந்து விடுகிறது. அவ்வளவுதான்.
“யாருக்காவது முத்தம் கொடுக்க வேண்டும்; இல்லை, யாரிடமிருந்தாவது முத்தம் பெற வேண்டும்; இல்லை, யாராவது யாருக்காவது முத்தம் கொடுப்பதை நேரிலாவது பார்க்க வேண்டும்” என்று பாலா பல முறை ஆசைப் பட்டிருக்கிறான். ஏங்கியிருக்கிறான். சில சமயங்களில் அவனது கைகளுக்கும் புஜங்களுக்கும் அவனே முத்தம் கொடுத்துக் கொள்வான். அதில் ஏதோ காரணம் சொல்லத் தெரியாத மகிழ்ச்சி அவனுக்கு. அவன் தன் வாழ்க்கையில் நடந்த முத்தப் பரிமாற்றங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். முதலில் “நான் யாரிடம் முத்தம் வாங்கியிருக்கிறேன். . ” என்று யோசிக்கத் தொடங்கினான்.
இரண்டு உதடுகளையும, ஒருவர் கன்னத்தில் வைத்து, “ப்ச்ச்” என்ற ஒலியுடன் நடக்கும் ஒரு தொடுதல்தான் முத்தம் என்றும் அது அன்போடும் ஆசையோடும் கொடுக்கப்படும் என்றும் அவன் அறிவதற்கு முன்னால் அவன் நிறையவே முத்தங்கள் வாங்கியிருக்கிறான். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, பக்கத்து வீட்டு அக்காக்கள், அண்ணன்கள், பள்ளிக்கூட ஆசிரியைகள் என்று நிறைய பேரிடம் முத்தங்கள் வாங்கியிருக்கிறான், யாராவது சிலர் “எனக்கு ஒரு உம்மா தா. . . . ” என்று கேட்டபோது அவர்களுக்கும் இவன் முத்தம் கொடுத்திருக்கிறான். ஆனால் அவையெல்லாம் “முத்தம்” என்றே அவனுக்குத் தெரியாது.
பாலா மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு வந்த ஒரு பிறந்த நாளன்று அம்மாவின் காலில் விழுந்து வணங்கினான். அம்மா ஆசீர்வதித்து விட்டு அவனை கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள். அதே பருவத்தில் அவனுக்கு ஒரு முறை ஜுரம் வந்து விட்டது. பாலா அம்மா மடியில் படுத்துக்கொள்ள, அம்மா அவனுக்கு ரசம் சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அம்மா செல்லமாய் ஒரு முத்தம் கொடுத்தாள். அது ஏனோ தெரியவில்லை. அதற்குப் பிறகு அம்மாவோ பாலாவோ ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பமே கிட்டியதில்லை.
நீண்ட நேரம் யோசித்துப் பார்த்த பிறகும் இந்த இரண்டு முத்தங்கள்தான் அவன் நினைவிற்கு வந்தன. அந்த அறிதலுக்குப் பிறகு அவன் வாங்கிய முத்தங்கள் இரண்டே இரண்டுதான் என்று அப்பொழுதுதான் அவனுக்கும் தெரிந்தது. அடுத்து “நான் யாருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். . . . . ” என்று சிந்திக்கத் தொடங்கினான்.
பாலாவுக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். குழந்தைகளின் சிரிப்பை விட உலகத்தில் ரசிக்கத்தக்கதும் தூய்மையானதும் சந்தோஷம் தருவதும் வேறு எதுவும் இல்லை என்று நினைப்பவன் பாலா. அதனால் குழந்தைகளைப் பார்த்தால் அவன் தூக்காமல் இருக்க மாட்டான். அப்படி தூக்கும் போது குழந்தைகளுக்கு நிறைய முத்தங்கள் கொடுத்துள்ளான். சில வேளைகளில் ஆசையாய் முத்தம் கொடுக்கப் போகும்போது ” அய்யோ. . . குழந்தைக்கு எச்சில் தழும்பு வந்துடும். . . ” என்று தாய்மார்களால் தடுக்கப்பட்டிருக்கிறான். அதிலிருந்து தாய்மார்களுக்குத் தெரியாமல்தான் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து வருகிறான் பாலா.
குழந்தைகளைத் தவிர்த்து அவன் உதடுகள் பதித்த மற்றொரு கன்னம் பக்கத்து வீட்டு கங்கா அக்காவினுடையது. இவனை விட ஆறு, ஏழு வயது அதிகம் இருக்கும் அந்த பக்கத்து வீட்டு கங்காவுக்கு. கங்கா தலையில் எப்பொழுதும் மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பாலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, கங்கா அக்காவுடன் பேசத் தொடங்கினான். இரண்டு, மூன்று ஆண்டுகளில் இருவரும் நல்ல சிநேகிதர்களானார்கள். வயது வித்தியாசமே பார்க்காமல் இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொள்வார்கள். கங்கா அக்காவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பாலா பல முறை ஆசைப் பட்டிருக்கிறான். ஒருமுறை பாலா, கங்காவிடம் அவளுக்குத் தான் முத்தம் தரப் போவதாகக் கூறினான். கங்கா மறுத்து விட்டாள். கண்டிப்பாக தான் முத்தம் தரப் போவதாக அவளிடம் வேண்டுமென்றே பந்தயம் கட்டினான் பாலா. ஒரு நாள் எதேச்சையாக கங்கா, பாலா வீட்டிற்கு வந்தபோது, பாலா சொன்னவாறே கங்காவிற்கு முத்தம் கொடுத்து விட்டான். இரண்டு நாட்கள் பாலாவிடம் செல்லமாய்க் கோபித்துக் கொண்டு கங்கா மறுபடியும் எப்பொழுதும் போல பேசத் தொடங்கினாள்.
அவன் பள்ளி நாட்களில் அவனுக்குப் பிடித்த இரண்டு பேருக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறான்; ஆனால் அந்த ஆசை நிறைவேறவே இல்லை. அவர்கள் ப்ளோரா டீச்சரும் ஸ்வேதா என்ற உடன் பயின்ற மாணவியும். இருவரையும் அவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பான். அடுத்து, அவன் நேரில் பார்த்த முத்தங்களை யோசிக்கத் தொடங்கினான்.
ஒரு முறை, பக்கத்துத் தெரு திண்ணையில் புதிதாகத் திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறான் பாலா. இவன் பார்த்ததை அவர்கள் பார்த்து விட்டனர். ஏதோ திருவிழாக் கடையில் திருடியது மாதிரி இருவரும் விழித்தனர். பிறகு அந்த புதுப் பெண் கணவனைத் திட்டியவாறே உள்ளே கூட்டிச் சென்று விட்டாள். அவர்கள் ஏன் இவனைப் பார்த்ததும் பயந்து போனார்கள் என்று இன்று வரை பாலாவிற்கு புரியவில்லை. “முத்தம் அப்படி மறைக்கப்பட வேண்டிய விஷயமா என்ன?” என்று பாலா அவனையே கேட்டுக் கொண்டான்.
மற்றபடி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தந்த முத்தத்தைதான் நேரில் பார்த்திருக்கிறான். இப்பொழுதெல்லாம் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதைக் கூட குறைத்து விட்டார்கள் என்று தோன்றியது அவனுக்கு. வீட்டில் தன் அம்மா அப்பா முத்தமிட்டுக்கொள்வதைக் கூட அவன் பார்த்ததில்லை. ‘ஏன் அனைவரும் இப்படி முத்தமிட்டுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று அவனுக்குப் புரியவே இல்லை.
இதையெல்லாம் தாண்டி அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு முத்தப் பரிமாற்றம் பாலாவிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. அது அவன் தோழி கல்யாணியுடன் நடந்தது. கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே இருவரும் நல்ல நண்பர்களானார்கள். பாலாவிற்கு கல்யாணி என்றால் ரொம்பவும் பிடிக்கும். அவள் மேல் அளவிள்ளாத அன்பு வைத்திருந்தான். கல்யாணிக்கும் பாலாவைப் பிடித்திருந்தது. இருவரும் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளும் புன்னகைகளும் அளவில்லாதவை. ஒரு நாள் கல்லூரியில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கீழே அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பாலா அவள் கன்னத்தைக் கிள்ளி ஒரு முத்தம் கொடுத்தான். பிறகு அவள் கன்னத்திலேயே ஒரு முத்தம் கொடுத்தான். கல்யாணியும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள். பாலாவும் அவளிடம் ஒரு முத்தத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். அது கேட்டுப் பெற்ற முத்தம் என்றாலும் உரிமையோடு கேட்ட முத்தம். அன்போடு கேட்ட முத்தம். அதே அன்போடு கொடுக்கப்பட்ட முத்தம். சில நாட்களுக்குப் பிறகு இவன் கேட்டுப்பெற்ற முத்தத்தை, பிரபுவுக்கு கேட்காமலேயே கொடுத்தாள் கல்யாணி. அதற்குப் பிறகு கல்யாணியிடம் முத்தம் கேட்கவோ கொடுக்கவோ பாலா தயங்கினான். இதுதான் அவன் கடைசியாக பெற்ற முத்த அனுபவம்.
அம்மாவிடம் மூன்றாம் வகுப்பில் வாங்கிய இரண்டு முத்தங்கள், கங்கா அக்காவிற்கு கொடுத்த ஒரு முத்தம், கல்யாணிக்கு கொடுத்த ஒரு முத்தம், கல்யாணி பிரபுவுக்குக் கொடுத்த ஒரு முத்தம். ஆக இருபத்தி ஐந்து வருடங்களில் பாலா வாங்கிய, கொடுத்த, பார்த்த முத்தங்கள் இவைதான். முத்தத்தை வாழ்க்கையிலிருந்து ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிறார்கள்? முத்தம் கொடுத்துக் கொள்ள அனைவரும் ஏன் இப்படி மறுக்கிறார்கள்? முத்தத்தால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட முடியுமா என்ன? நூறு வார்த்தைகளை விட ஒரு முத்தம் எவ்வளவு வலிமையானது, இனிமையானது என்று யாரும் உணரவில்லையா? முத்தங்கள் சினிமாவில் மட்டும்தான் உள்ளனவா ? நிஜ வாழ்க்கையில் முத்தங்கள் மறைந்து போய் விட்டனவா? எனக்குத் தெரிந்து ஜுரம் கூட எனக்கு ஐந்து தடவைக்கு மேல் வந்துள்ளதே. ஆனால் நான் வாங்கிய முத்தங்களும் கொடுத்த முத்தங்களும் நான்கே நான்குதான். வாழ்க்கையில் ஜுரத்தை விட முத்தம் அரிதாகி விட்டதா?”என்று யோசித்துக் கொண்டிருந்த போதே தொலைக்காட்சியில் ஓடிய பாட்டு முடிந்து போயிருந்தது.
அசதி மிகுதியால், பாலா அவன் மெத்தையில் வழக்கம் போல் ஒரு தலையணையைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டான். வறண்டு போன அவன் கன்னத்தையும், வாடிப் போன அவன் மனதையும் ஒரு ஈரம் நனைக்காதா என்று பாலா காத்துக் கொண்டிருக்கிறான். அது முத்த ஈரம்.

வெங்காயம் தக்காளி ஐஸ் க்ரீம்

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கரைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!

கவிதை மழை

தேவரே வந்திங்கு
இவளைக் கண்டால்
திரும்ப மாட்டார் தேவலோகம்
விழி பார்ப்பார் விழிப்பார்
விளித்து வினவுவார்
மலரே வருவாயா தினமும்
இவர் வாசலுக்கு கோலமிட
உனைக்கண்டாலே உதிரம்
உற்சாகமாகும் என்பார்
உடலில் வசந்தம் பூக்கும்
பட்டாடை புத்தொளியில் மிளிரும்
உயிரே
இவர் இதயத்தில் என்றும் நீ
தங்கியிருக்கும் வரம்
தருவாயா
தாவரம் செழித்த பூமியில்
தா ‘வரம்’ என தவம்
கொண்ட குழந்தை ஞானி எனை
கொங்கையோடு சேர்த்தணைத்து
கொள்கைப் பிடிப்புடன்
தோழமை கொள்ளுவாய் நீ
‘கொள்’ என்றால் வாய் திறக்கும்
அசுவம் ...
நீ கொள்ளாவிடில் எனக்கு
அசுபம் அன்றைய தினம்
ஆரஞ்சு வண்ண அப்சரஸ்
நெஞ்சில் எண்ணம் விதைத்தாய்
பஞ்சில் நெருப்பென பற்றினாய்
பைங்கரம் பற்றுவேனோ
பயங்கரம் பற்றுமோ
காரிகையே பதில் சொல்வாய்
எம்பாவாய் !!!!
3

தாஃபின்

ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது.
இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும் பறந்து கொண்டிருந்தேன். மின்னணுவியல் மற்றும் கருவியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றபின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வடிவமைப்பு அலுவலகத்தில் ஒரு வருடம் பணி புரிந்துவிட்டு அப்போதுதான் ONGCயில் சேர்ந்திருந்தேன். எனவே முதன்முதலாக ஒரு வாரப் பயிற்சிக்காக BHS என்ற ஒரு offshore பிளாட்பாரத்திற்குப் போக வேண்டியிருந்தது. பயணம் முந்தைய பணியின் விட்ட குறையாக ஹெலிகாப்டரின் வழியே நடக்கிறதோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். விமான வடிவமைப்பாளர் சிக்கொர்ஸ்க்கியின் தயவில் தொழிற்சாலைகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கைகளில் உருவாகி வரும் ஹெலிகாப்டர், யோசித்தால் சாதாரண விமானம் போல் இல்லாது வெறும் காற்றையே ஒரு கயிறு போல் பிடித்துக்கொண்டு விறுவிறுவென்று செங்குத்தாக மேலே ஏற வல்லது. அந்த முரட்டுத் திறன் காரணமாக எனக்கு ஹெலிகாப்டர்களை மிகவும் பிடிக்கும். முந்தைய பணியின் சார்பாக இன்னொரு ஃபிரெஞ்சு வடிவமைப்பிலான சேதக் ஹெலிகாப்டரை துணை விமானியாகக் கொஞ்சம் ஓட்டிப் பயின்றிருக்கிறேன். எனவே இந்த ஹெலிகாப்டரின் கலெக்டிவ் பிட்ச், சைக்ளிக் பிட்ச் முதலிய கண்ட்ரோல் கொம்புகளையும், இந்த தாஃபின் ஹெலிகாப்டரின் சிறப்பம்சமான பெனஸ்ற்றான் (Fenestron) எனப்படும் டெய்ல் ரோட்டர் அமைப்பையும் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மற்றபடி நான் போய் சேரப்போகும் பிளாட்பார்ம் ஏதோ எண்ணையும் கிரீசும் படிந்த ஒரு அழுக்கு ஓர்க் ஷாப் போல இருக்கும் என்று சற்று அசிரத்தையாய் உருவகம் செய்து வைத்திருந்தேன். ஒரு வாரம் அங்கே பயிற்சி முடிந்தபின் குஜராத்தில் உள்ள ஊரான ஹஜிராவில் போய் வேலையில் சேர்வதாய் உத்தேசம்.

பயம்

ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
2
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா… அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா….“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்…. “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்… ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்… “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்… “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து… “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான்3 சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.

மழை

மழை! ஓயாத மழை!
ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை!
அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.3
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது.
‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.
‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.
‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.2
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

மழை

மழை பெய்து ஓய்ந்த நிமிடம்..
அலுவலக ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்தேன்.
எதிர் மாடியில்
சுவற்றின் விளிம்பில்
அணில் ஓடியது.
செடிகளின் இடையே
குருவிகள் பறந்தன,
தரைக்கும் உயரத்திற்குமாய்.
பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!
அணில்களுக்கும் தான்..
ஈரம் படிந்த தரையைத் தொட
விரல்களால் முடியவில்லை..
இருந்தது மூன்றாவது மாடியில்.
மாலையில் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது
நினைவிலிருக்குமா?
ஈரத்தரையும்..
ஓடிய அணிலும்..
குருவிகளூம்..
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது என்னைச் சுற்றி
நிற்கும்!

--------------------------------------------------------
கருப்பு குடை
காண்பித்தால்
உனக்கு பிடிக்காது
என்பதாலா-இவள்
வர்ணக் குடை
விரிக்கிறாள்…

------------------------------------------------------- 
தேன் மிட்டாய்
தித்திக்கும் தான்.
தேன் மிட்டாயை விட,
தேன் மிட்டாய் செய்முறையை விட,
தேன் மிட்டாய் செய்முறை வாசிக்கும்
அவள் கண்கள் இன்னும் தித்திப்பு..

---------------------------------------------------------------
கண்ணாடிபோட்டவுக எல்லாம் நல்லா படிச்சவுக
நல்லா படிச்சவுக எல்லா ஊர விட்டு போய்ட்டாக
ஊர விட்டு போனவுக ஊரு பக்கமே வரதில்ல
ஊரு பக்கம் வராதவுக எல்லாம் ப்ளெசர் காரு வேங்கிட்டாக
ப்ளெசர் காரு வேங்குனா வெய்ய மழை தெரியாது
வெய்ய மழை தெரியாட்ட எது எங்க விளையும்னு தெரியாது
எது எங்க விளையும்னு தெரியாட்டா
என்ன திங்கணும்னு தெரியாது
என்ன திங்கணும்னு தெரியாம கண்டத துன்றது
கண்டது தின்னு ஒடம்ப வீணாக்க
ஊர வீணாக்க குப்பைய போட்டு
தண்ணிய புட்டில அடச்சு வித்து புட்டு
விளைநிலம் விற்று வீட்டு மனையாக்கி
சூப்பர் மார்க்கெட்ல போய் சோறு வாங்கி
கொஞ்ச பணத்த வங்கில போட்டு
கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வெள்ளக்காரன் மருத்துவத்துக்கு குடுத்து
செத்துபோகவா இந்த ஒலக வாழ்க்கை
நெனச்சி பாருங்க அண்ணாச்சி......

-----------------------------------------------------------------------------
எத்தனை முறை பெய்தாலும்
அடுத்த முறை எப்போது
ஏக்கத்தில் மனது.

மழை!
எழுதிப்பார்த்ததில்
நனைந்து போனது
இதயம்!

மழை இசை
மழை இரைச்சல்
மழை இம்சை

மை கலைந்த ரெக்கார்ட் நோட்டும்
இன்றைய கலர் ட்ரெஸ்சும்தான்
நேற்று பெய்த மழைக்கு
சாட்சியாய் நிற்கிறது! 


Friday 17 August 2018

பாதாளக்கரண்டி

அம்மைக்கு அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிருந்தது. நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருந்தோம்.பாட்டு வாத்தியார் வீட்டுக்கு அடுத்து உள்ள தோட்டத்து கிணற்றில் வாளி விழுந்து விட்டது. ஆட்டம் போட்டுக்கிட்டு தண்ணிய உருளைல இறைச்சா இப்படித்தான். பெரிய அக்கா தான் கயறை விட்டது.
வாளி வாங்கி முழுசா மூணு மாசம் கூட ஆகவில்லை. இரும்புவாளி. மாணிக்கம் செட்டியார் கடைல வாங்கியது. அப்பா குருவிகுளம் வரை ஒரு துஷ்டிக்காக போயிருந்தார். அவர் வருவதற்குள் பாதாளக்கரண்டி வைத்து எடுத்து விடலாம் என்று அசால்ட்டாக இருந்தது தான் தப்பு.
வாளி கிணற்றுக்குள் விழுந்ததும், அம்மைட்ட சொல்லிட்டு நானும்,பெரிய அக்காவும் திருமேனி செட்டியார் வீட்டுக்குத்தான் முதலில் போனோம். தெருவில் அவர்கள் வீட்டில் தான் பாதாளக்கரண்டி இருக்கிறது. யார் வாளியை கிணற்றுக்குள் போட்டு விட்டாலும், அங்கு போய்த்தான் வாங்குவதுண்டு. தெருவில் முக்காவாசி வீடுகளும் அவருக்குத்தான் சொந்தமாக இருக்கிறது. பஞ்சாயத்து பள்ளியை அடுத்து சீனியம்மாள் வீடு.அதுக்கு அப்புறம் ஒரு பெரிய வைக்கபோரு இருக்கும். அடுத்து செட்டியார் வீடு தான்.
நாங்கள் போயிருந்தபோது வீட்டில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது. இந்த வருஷம் திருக்கார்த்திகைக்கு திருவண்ணாமலை போயிருக்காகலாம் குடும்பத்தோடு. எங்களுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்து விட்டது.எல்லாம் போச்சு.
"அப்பா வந்தாருன்னா வசவு உரிச்சு எடுத்துருவாரே .."
அம்மைக்குத்தான் ஏச்சு விழும் முதலில். "துட்டோட அருமை தெரியுமா உனக்கு ..நீ போயி தண்ணி எடுக்க வேண்டியது தானே..?" என்பார்.
அம்மைக்கு இதை எல்லாம் நினைத்து தான் அழுகை வந்திருக்கும்.
பாட்டு வாத்தியார் பையன் நந்து தான் சொன்னான்." மேலகேட்ல ஆர்.பி.எஸ்.வீட்டுல கூட பாதாளக் கரண்டி இருக்க வாய்ப்பிருக்கு..எதுக்கும் கேட்டுப் பாருங்க.."
அவன் வாய்க்கு சக்கரைதான் போடணும். கிடைத்து விட்டது. ஒரு பெரிய கொத்துசாவியைப் போல...அதைப் பார்த்ததும் தான் உசிர் வந்தது. இருட்டுவதற்குள் எப்படியும் வாளியை எடுத்து விடலாம். அப்பா ஏழு மணி எம்.ஆர்.கோபாலன் வண்டிக்குத்தான் வருவார்.
தெருவே வேடிக்கை பார்க்க, நந்தகோபால் என்ற நந்து அண்ணனே, பாதாளக்கரண்டியை மெதுவாக கயத்துல கட்டி உருளை வழியே உள்ளே இறக்கினான்.
" எண்ணே..பாதாளக்கரண்டி உள்ளே விழுந்துருச்சுன்னா எப்படி எடுக்குறது ?" என்று கவுண்டமணியிடம் செந்தில் கேட்பது போல, நான் கேட்டேன். ஒரு முறைப்பு தான் பதிலாய் வந்தது. அக்கா என் தலையில் ஒரு குட்டு குட்டினாள். ஏம்ல உனக்கு இப்படி புத்தி போகுது ?
அண்ணன் தண்ணிக்குள் நல்ல மூழ்கவிட்டு பின்பு வெளியே இழுத்தான். ஏதோ தொங்கியபடி வந்தது. எல்லோரும் கைதட்டினோம். வந்தது ஒரு பழைய டால்டா டின் வாளி..அதையும் வாளி மாதிரி பயன்படுத்துவதுண்டு. ஆனால் எங்க வீட்டு வாளி வரணுமே..மீண்டும் உள்ளே விட்டு துளாவினான்.மேலே இழுத்தான். இப்போது ஒரு பழைய கயறு பாசி பிடித்தநிலையில் ஒட்டிக்கொண்டு வந்தது. ம்ஹ்ம்..மீண்டும் ஒரு துளாவல்.. இப்போதும் எதோ ஒன்று வந்தது..பொழுது சாய ஆரம்பித்திருந்ததால், இருள் கவ்வத் தொடங்கி இருந்தது. வந்த பொருள் என்னவென்று மேலே வந்த பிறகு பாரத்தால் அது பழைய பித்தளை செம்பு..
மேல் வீட்டு வசந்தா அக்கா கூவினாள்.." அது என்னோடது..ஆறு மாசத்துக்கு முன்னாலே நான் போட்டது.."
அவளிடம் கொடுத்து விட்டு, பாதாளக்கரண்டி மீண்டும் உள்ளே சென்றது. அம்மைக்கு நம்பிக்கை குறைந்து விட்டது.."ஏட்டி..உண்மையிலேயே இங்கனதான் போட்டியா..?"
நந்தகோபால் என்ற நந்து அண்ணன் தனது முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. இந்தமுறை அங்கும் இங்கும் அலசியபடி மூழ்க வைத்தான். மேலே இழுக்கும் போது, எதோ வந்த மாதிரி தெரிந்தது. எல்லோரும் ஆவலுடன் உள்ளே எட்டிப் பார்த்தோம்..
"கெடைச்சுருச்சு..." சாக்கடை முருகன் கூப்பாடு போட்டான்.
 மேலே கரண்டி வர வர அதன் பின் குனிந்த தலை நிமிராத புதுப் பொண்ணு மாதிரி வாளி லேசாய்க்கவிழ்ந்தபடி மேலே வந்தது.

பல 'சாலிகள்'


முடிவின் அனுபவத்தை
பெற்று கொள்வபன்
புத்திசாலி
முடிந்ததை முற்றிலும்
மறக்க தெரிந்தவன்
அதிர்ஷடசாலி
முடிவுக்கு தகுந்தார் போல
மாற்றி கொள்பவன்
தைரியசாலி
முடிந்ததின் முடிவை
மாற்ற தகுந்தவன்
தந்திரசாலி
முடிந்ததை முற்றிலும்
ஏற்றுகொள்பவன்
பொறுமைசாலி

முடிந்ததை நினைத்து
வருந்தி கொண்டிருப்பவன்
மூடன்

பக்தியும் உழைப்பும்

கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான
உழைப்பாளி. தினமும் குளித்து முடித்து, கடவுளை வணங்கிவிட்டு, நம்பிக்கை யுடன் காட்டுக்கு விறகு வெ ட்ட வருவான். நெடு நேரம் உழைப்பான். நிறைய மரங் களைச் சேகரித்துக் கொண்டு, நகரத்துக்குக் கொண்டு போய் விற்பான். பணம் நிறைய கிடைக்கும். உணவு சமைத்து, கடவுளை வணங்கி, ஏழைகளுக்கும் கொஞ் சம் உணவை தர்மம் செய்து விட்டு நிம்மதியாக உறங்கச் செல்வான். அவன் மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டான். அவன் முகமே தெய்வீகமாக இருப் பதாக மக்கள் பேசிக் கொண்டார்க ள்.
ஒரு நாள், அவன் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த நாட்டின் மன்னன் அப்பக்கம் வந்தான். கடமையே கண்ணாக இருந்த அவனைக் கண்டதும் மன்ன ன் அவன் அருகில் வந்தான். வந்த மன்னன் அரண்டுபோனான். காரண ம், கொடிய விஷமுள்ள ராஜநாகம் ஒன்று மரம் வெட்டிக்கு அருகில், சீற்றத்துடன் படமெ டுத்து நின்றது. எந்நேரமும் கொட் டிவிடும் நிலைமை. ப தறியமன்னன் கத்தினான். தம்பி, திரும்பாமல் சடக்கென முன்னே ஓடி வந்துவிடு. கொ டிய பாம்பு, கொத்தும் நிலை யில் உன் பின்னால் இருக்கிற து. இளைஞன் பதறவே இல் லை. திரும்பிப் பார்த்தான். எந்த தயக்கமும் இன்றி, அந்தக் கொடிய ராஜ நாகத் தைத் தன் கையால் பிடித்துத் தூக்கி, சற்றுத் தொலை வில் வீசி எறிந்தான். பின் அல ட்டிக் கொள்ளாமல் மரம் வெட் டத் துவங்கினான். ஆடிப் போய் விட்டான் மன்னன்.
அந்தப் பாம்பு உன்னைத் தீண்டி யிருந்தால் நீ இந்நேரம் செத்துப் போயிருப்பாய். இளைஞன் சிரித்தான். அரசே, இதுபோ ல் தினம் பல ஆபத்துகளை நான் சந்திக்கிறேன். இதற் கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த மு டியுமா? என்று கணீரென்று பதில்சொன்னான். ஆஹா, இவனல்லவா வீரன் என்று மகிழ்ந்த அரசன், பரிசுகளை யும், பொற்குவியல்களையும் அளித்து, அவனுக்கு ஒரு பங்க ளாவையும் அன்பளிப்பாக அளித்தான். ஏராளமான பணி யாளர்கள்வேறு. அவ்வளவுதான். இளைஞனின் நிலை மையே மாறியது. அவன் கடவுளை மறந்தான். கடுமை யான உழைப்பை மறந்தான். ஏழைக ளுக்கு உதவுவதையும் மறந்தான். நிறைய செல்வம் இருந்ததால் சொகு சுப் பேர் வழியாக வலம் வர ஆரம்பி த்தான்.
சில மாதங்கள் சென்றன. மன்னன் அப்பக்கம் வந்தான். அந்த இளைஞன் காலில் ஒரு கட்டுப்போட்டு உட்கார்ந்திருந்தான். என் னப்பா ஆச்சு? தோட்டத்தில் சுற்றிவந்தபோது, நெருஞ் சி முள் குத்திவிட்டது. அது தான் மருத்துவர் சி கிச்சை தந்திருக்கிறார். என்றுசொன் னான். அவன். இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்? கடவுள் பக்தியுடன், கடுமையா க உழைத்து, ஏழைகளுக்கு உத விய வரை அவன் ஆரோக்கிய மாக இருந்தான். பயங்கர பாம் பைக்கூடக் கையால்பிடித்துத்தூக்கியெறிந்தான். ஆ னால் உழைக்காமலே காசு வந்தவுடன் அவனது பக்தி போய்விட்டது. உழைப்பு போய்விட் டது.
உதவும் எண்ணமும் போய் விட்ட து. நெருஞ்சிமுள் கூட அவனை நோயாளியாக்கிவிட்டது. வாழ்க் கையின் தத்துவம் மன்னனுக்குப் புரிந்தது. அந்த இளைஞனின் சொ த்துகளையெல்லாம் பறிமுதல்செய்தான் மன்னன்.

சிகண்டி

(மகாபாரத இதிகாசத்தில் அம் போபாக்கியானம் என்ற பகுதியில் வரும் இந்தக் கிளைக் கதை, வாக்குத் தவறாமையின் மகத்துவத் தையும் இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதை யும் விவரிக்கிறது.)
 ----------------------------------------------------------------------------------------------------------------------
புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக
மாறு மென்றும் வரமருளி மறைந்தார்.
கானகத்திலிருந்து தவம் முடிந்து திரும்பிய கணவனை சற் றே கவலையோடு வரவேற்றாள் பட்ட மகிஷி. சிவனருளால் பிறக்கவிருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது? பெண் ணாகவா? ஆணாகவா? பெண் குழந்தையென்றே சமுதாயத் திற்கு அறிமுகப்படுத்தி வளர்த்தால் ஒரு காலத்தில் குழந் தை ஆணாக மாறும்போது சமுதாயம் நகைக்காதா? இதில் மேலும் ஒரு சிக்கல், குழந்தை எந்த வயதில் ஆணாக மாறு ம் என்பதைச் சிவன் தெரிவிக்கவுமில்லை. சிந்தனை யோடு அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். பத்து மாதத்தில் மகா ராணி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். குழந்தை பெண் என்பதை அவர்கள் ரகசியமாக வைக்க முடிவு செய் தார்கள்.
குழந்தையை ஆண் என்றே அறிவித்தார்க ள். ஆண் உடை உடுத்தி சிகண்டி எனப் பெயர் சூட்டி, ஆணாகவே வள ர்த்தார்கள். தவமிருந்து பெற்ற குழந்தையாதலால், தாங்க ளே மிகுந்த கவனிப்போடு வளர்க்க விரும்புவதாகச் சொல் லி, பணிப்பெண்களைத் தவிர்த்தார்கள். குழந்தையை நீரா ட்டுதல் போன்ற விஷயங்களைத் தனிமையில் நிகழ்த்தி, அதுபெண் குழந்தை என்று யாருக்கும் தெரியாமல் பார்த் துக் கொண்டார்கள். சிகண்டி ஆண் அல்ல என்ற ரகசியம் சிக ண்டிக்கும் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும். உலகம் சிக ண்டியை ஆண் என்றே அறிந்தது.
சிகண்டி ஆணுக்குரிய அத்தனை போர்க் கஸ்லகளையும் கற்று மாபெரும் வீரனாக வளர்ந்தாள். வாலிப வயதில் அந்த அழகி பெரும் அழகனாகத் தோற்றமளித்தாள். சிகண்டியின் அழகு பல இடங்களில் வியந்து பேசப்பட்டது. சிவகடாட்சத் தால் பிறந்த குழந்தை பேரழகோடு திகழ்வதில் என்ன விய ப்பு? சிவனின் தலையில் இருந்த இளம்பிறை வளர்ந்து முழு மதியாகி சிகண்டியின் முகமாய் மாறியதுபோல் தோன்றிய து. சிகண்டி வீதியுலா வந்தபோது, வெண்ணிலவைப் பழிக் கும் சிகண்டியின் முகத் தைப்பார்ப்பதற்காக மக் கள் பெருங் கூட்டமாகக் கூடினார்கள். மன்மத னையும் பழிக்கும் சிக ண்டியின் அழகு பல இடங்களிலும் பேசப்ப டலாயிற்று.
இதனால் ஒரு விபரீதம் உருவாயிற்று. சிகண்டி யின் பேரெழிலைப் பற்றிக் கேள்விப்பட்டு, தாசார்ணக மன் னன் இரண்யவர்மனின் புதல்வி, சிகண்டியைத்தான் மணப் பேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள். கடவுளே! இப்போது என்னதான் செய்வது? துருபதன் மனம் அனலில் பட்ட புழு வாய்த் துடித்தது. இரண்யவர்மனைப் பகைத்துக் கொள்ள இயலாது, அவன் பெரும் படைபலம் நிரம்பியவன். ரகசிய த்தை வெளியிட வும் இயலாது. அது பெருத்த அவமானம். துருபதன் சிகண்டி யை அழைத்தான். ‘‘வேறு வழியில்லை. நீ அவளை மணந் துகொள். ஆறு மாத காலம் சிவபெருமான் குறித்து விரதமி ருப்பதாகச் சொல்லி, அவள் உன்னை நெருங்காமல் பார்த் துக் கொள்.
இப்போது மணம் நடந்தாலும் உன் சிவ விரதம் முடிந்தபிற கே அவளை நாம் நம் இல்லத்திற்கு மருமகளாக அழைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிடுவோம். ஆறுமாத காலம் உண்மையிலேயே நீ சிவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்து ஆண் தன்மை பெற்றுவிட்டால் பின் எந்தச் சிக்கலும் இராது!’’ என்றான்.
இந்த ஒப்பந்தத்தின் பேரில் திரு மணம் விமர்சையாக நடை பெ ற்றது. ஆனால், என்ன இருந்தா லும், கல்யாணமான புது மாப்பி ள்ளை மாமனார் இல்லத்திற்கு நான்கு நாட்களேனும் வந்து திரும்ப வேண்டாமா? தங்கள் நாட்டு மக்கள் மாப் பிள்ளையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இரண் யவர்மன் இப்படியொரு வேண்டுகோள் வைத்தபோது துருபதனுக்கு என்ன செய்வதென்று தெரியவி ல்லை. வேறு வழியி ல்லாததால், சிகண்டியை எச்சரிக்கை செய்து மாமனார் தே சத்திற்கு நான்கே நான்கு நாட்கள் சென்றுவர அனுமதித் தான்.
உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்? சிகண்டி குளியலறையில் நீராடியபோது, கணவனின் முழுமையான அழகை ரசிக்க நினைத்த புது மனைவி சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள். அதுவரை மறைக்கப்பட்டிருந்த ரகசியத் தை அறிந்துவிட்டாள். தந்தையிடம் ஓடோடிச் சென்று தாங் கள் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கூறி ஓவென்று ஓலமிட்டு அழுதாள். இரண்யவர்மன் கடும் சீற்றமடைந்தான். வழக்கம் போல் ஆணுடை தரித்து வெளியே வந்த சிகண்டி, தன்னைப் பற்றிய ரகசியம் வெளிப்பட்ட விவரமறிந்து திகைப்படைந் தாள். ஆனால் சாமர்த்தியமாக ஒரு நாடகமாட முடிவு செய் தாள். மன்னன் இரண்யவர்மன் முன் வந்த சிகண்டி, உரத்த குரலெடுத்து கர்ஜித்தாள்:
‘‘மன்னா! உன் பெண் யாரை யோ காதலிக் கிறாள் போலிருக் கிறது. நீங்கள் வற்புறு த்தி என்னை அவளுக்குத் திருமணம் முடி த்து வைத்திருக்கிறீர்கள் என்று சந்தேகிக் கிறேன். என்னை த் தவிர்க்கவே இப்படி யோர் அபாண்டப் பழியை என்மேல் சுமத் துகிறாள். எதிர்காலத்தில் கணவனை விரு ம்பாத பெண்களெல்லாம் கணவன் ஆண்மையற்றவன் என்று சுலப மாகப் பொய்சொல்லி வழக்குமன்றம் சென்று தங்கள் மண த்தை ரத்துசெய்து கொள்ளப் போகிறார்கள். இப்படியொரு பொய்யை மனைவியே சொன்னால் யார்தான் மறுக்க இய லும்! எதிர்கால நிகழ்வுகளுக்கான பிள்ளையார் சுழியை இதோ இப்போது இவள் ஆரம்பித்து வைத்திருக்கிறாள். நல் லது. நான் வருகிறேன்!’’
இப்படிச் சொல்லிவிட்டு, கம் பீரமாகத் தன் தேரிலேறிய சிகண்டி, குதிரைகளின் கடி வாளத்தைப் பிடித்துச் சொடு க்கினா ள். குதிரைகள் அவள் தேசத்தை நோக்கிக் காற்றாய்ப் பறந்தன. சிகண்டி அப்போ தைக்கு அந்தச் சிக்கலிலிருந்து தப்பித் து விட்டாள். ஆனால், தன் மகள் கூற்றையே பெரிதும் நம் பிய இரண்யவர்மன், இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந் தான். வஞ்சினத்தோ டு, அவனுடைய படைகள் துருபதன் நாட்டை நோக்கிப் பாய் ந்து வந்துகொண்டிருக்கும் விவரத் தைச் சிகண்டி அப்போது அறியவி ல்லை. தன் நாடு சென்ற சிகண்டி நேரே அரண் மனைக்குச் செல்லா மல் கானகம் சென்றாள். இனி இந்த அவ மானத்தோடு உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை.
பிராயோபவேசம் என்னும் முறை யில் உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டுவிட வேண்டியதுதா ன். உரிய நேரத்தில் கிட்டாத சிவனருளால் இனியென்ன பயன்? கானகத்தில் ஒரு குகையின் முன்னே இருந்த பெரிய ஆல மரத்தின் அடி யில் இரவு பகலாக ஒரே நிலையில் அமர்ந்து உண்ணா நோன்பிருக்கலா னாள் சிகண்டி. அந்தக் கு கையில் குபேரனுக்கு வே ண்டியவ னான ஸ்தூணா கர்ணன் என்ற யட்சன் வா ழ்ந்துவந்தான். கருணை யுள்ளம் கொண்ட அவன் சிகண்டியிடம் வந்து பரி வோடு விசாரித்தான். சிக ண்டி அவன் அன் புக்கு மரியாதை கொடுத்து, தன் வரலாறு முழுவதையும் சொன்னாள். ‘‘இவ்வளவுதானே?’’ என்று ஆறுதலாகக் கேட்டான் அவன். ‘‘சிகண்டி, வருந்தாதே!
நான் குபேரனுக்கு வேண்டியவன். அவன் மூலம் வரமருளு ம் ஆற்றல் பெற்றிருக்கிறேன். என்னால் உன் பெண்மையை நான் வாங்கிக் கொ ண்டு என் ஆண்மையை உனக்குத்தர முடியும். ஓராண்டுக்குள் நீ மறுபடி வந்து என் ஆண்மையை எனக்கே திருப்பித் தருவதாக வாக்களித் தால் அந்தக் குறுகி ய காலத்திற்கு நான் உன்னை ஆணாக்குகிறேன்!’’ என்றா ன். சிகண்டி மிகுந்த மகிழ்ச்சியடை ந்தாள். ஓராண்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருமணமான இந்தத் தருணத்தில் ஆண்மை கிட்டுவதல்ல வா மிக முக்கியம். அந்த யட்சனைத் தன்னைக் காக்க வந்த சிவனாகவே கருதி வண ங்கினாள். அவனை ஓராண்டில் மீண்டும் சந்திப்பதாக வாக் குறுதி கொடுத்தாள்.
யட்சன் அவள் தலையில் கைவைத்து மந்திரஜபம் செய்தா ன். சில கணங்களில், என்ன ஆச்சரியம்! சிகண்டி ஆணானா ள். அவன் பெண்ணானான். இப்போது சிகண்டி அவளல்ல. அவன்! சிகண்டி ஓடோடித் தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். நாட்டைப் படைகள் சூழ்ந்திருப்பதையும் தன் மாமனார் கடும் சீற்றத்தோடிருப்பதையும் அறிந்தான். தன் பெற்றோர் முன்னி லையிலும் தன் நாட்டு மக்கள் முன்னிலையி லும் தன்மாமனாரான இரண்யவர் மனை அறைகூவி அழைத்தான்: ‘‘ இரண் யவர்மரே! மாமனார் என்றால் தந் தை ஸ்தானம் அல்லவா? அப்படி யிருக்க உங்கள் மாப்பிள்ளை மேல் இப்படி அபாண்டப் பழி சுமத் தலாமா? என்தேச மக்கள் என்னை ப் பற்றி என்ன நினைப்பார்கள்?
உங்கள் பெண்ணிடம்தான் ஏதோ மனக்கோளாறு இருக்கிற தே தவி ர என்னிடம் எந்த உடல் கோளா றும் இல்லை. அவச ரப்பட்டுப் படையெடுத்து வந்திருக்கிறீ ர் களே? ஏன் என்னை நீங்கள் மருத்துவக்குழுவை வைத்துப் பரிசோதிக்கக்கூடாது? எங்கள் நாட்டு மருத்துவர்கள் தேவை யில்லை. உங்கள் நாட் டிலிருந்தே மருத்துவர்கள் சில ரை அழைத்து வாருங்கள். நான் சோதனைக்கு உட்படத் தயார்!” சிகண்டியின் கம்பீர மான அறைகூவல் இரண்யவர்மனைத் திகைக்க வைத்தது. அவன் உடனடி யாகத் தன் தேச மருத் துவர்கள் சிலரை வர வழைத்தான். அவர்கள் அந்தரங்கமாக சிகண்டி யைப் பரி சோதித்தார்கள். பின்னர் இரண் யவர்மனிடம் பொதுமக்கள் முன்னி லையில் அந்த மருத்துவர்க ள் ஏகோ பித்த அபிப்ராயத்தைத் தெரிவித்தா ர்கள்:
‘‘மன்னா! ஆணழகரான சிகண்டியிட ம் எந்த உடல் கோளாறும் இல்லை. அவர் முழுமையான ஆண்மகன்தா ன். எங்க ளுக்கொரு சந்தேகம். நம் நாட்டு ராஜகுமாரியை நல்ல மன நல மருத்துவரிடம் காண் பிப்பது நல்லது!’’இந்த விளக்கத் தைக் கேட்டு இரண்ய வர்மன் அவமானம் அடைந்தான். தன் மாப்பிள்ளையிடமும் அவனது பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். தன் மகளை அழைத்துவந்து சபை முன் அவளைத் தாறு மாறாக ஏசலானான்.
அப்போது குறுக்கிட்டான் சிகண்டி. ‘‘இரண்யவர்மரே! நட ந்தது நடந்துவிட்டது. இனிப் பழையவற்றைப் பேசுவதால் லாபமென்ன? உங்கள் மகளை என் முன்னிலையில் நீங்கள் ஏசக் கூடாது. ஏனென்றால் இப்போது அவள் உங்கள் மகள் மாத்திரமல்ல என் மனைவியும் கூட. என் அன்பான மனை வி மீது யார் கடும்சொல் கூறினாலும் அதை என்னால் அனு மதிக்க இயலாது!’’
த ன் மனைவியை இழுத்து அணை த்துக் கொண்டான் சிகண் டி! அவ ள் அவன் மார்பில் தலைவைத்து விம்மினாள். இரண் யவர்மன் தன் மகளை சரியான இடத்தில்தான் ஒப்படைத்தி ருக்கிறோம் என்ற நிம்மதியோடு விடைபெற்றான். ஆனால், சிகண்டியின் மனை விக்குத்தான் தன் கண் தன்னை எப்படி ஏமாற்றியது என்று கடைசிவரை தெரியவில்லை! குளியல றைச் சாளரம் பொய் சொன்னதோ! ஓராண்டு என்பது, முந் நூற்று அறுபத்தைந்தே நாட்களில் உருண்டு ஓடியே போய் விட்டது. சிவனை வணங்கிய சிகண்டி, யாருமறியாமல் கா னகம்சென்றான். தனக்கு ஆண் மையை வழங்கிய ஸ்தூணா கர்ணன் என்ற அந்த யட்சனை மறுபடி சந்தித்தான். தன் ஆண் மையை ஏற்று மீண்டும் தனக் குப் பெண்மையை வழங்குமா று நன்றியுடன் வேண்டினான்.
ஆனால், ஸ்தூணாகர்ணனோ கலகலவென்று சிரித்தான். பின் சொல்லலானான்: ‘‘அன்பனே சிகண்டி! என் இரக்கத் தின் காரணமாகத்தான் நான் உனக்கு என் ஆண் தன்மையை வழங்கினேன். நான் பெண்ணானேன். நீ விடைபெற்றுச் சென்ற சில நாட்களில் என் தலைவன் குபேரன் இங்கே வந் திருந்தார். என் நிலைகண்டு சீற்றமடை ந்தார். இரக்கப்படுவதற்கு ஓர் அளவில் லையா, இனி நீ பெண்ணாகவே தான் இருப்பாய் என்று சபித்துவிட்டார். நல்ல நோக்கத்தோடு செய்த செயலுக்கு இப்ப டியொரு சாபமா என்று கதறினேன். அவ ர் மனமிரங்கினார். நீ யாருக்கு ஆண் தன்மையை வழ ங்கினாயோ அவர் காலமானபின் நீ மீண்டும் ஆணாவாய் என்று சாப விமோசனம் அருளினார்.
நீ நெடுநாள் வாழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஏனென்றால் நான் பெண்ணானதில் எனக்கு இப்போது வருத் தமெதுவும் இல்லை. ஒருபெ ண் அடையக் கூடிய சுகதுக்க ங் களை அனுபவபூர்வமாக அறிய இது ஒரு வாய்ப்பு என் றே என் மனம் நினைக்கிறது. வாழ்க்கைச் சம்பவங்கள் வி சித்திரமானவை. நீயும் நானு ம் ஆணாகவும் பெண்ணாக வும் இருந்து இருவேறு நிலை மைகள் குறித்தும் அறிந்து கொண்டோம். இது கடவுள் தந்த பேறு!’’ யட்சனின் அன் பான பேச்சைக் கேட்ட சிகண் டியின் கண்கள் கலங்கின. யட்சனை வணங்கி ஆசிபெற்ற சிகண்டி தன் அரண்மனைக்குத் திரும் பினான். தன் தாய், தந் தையரிடம் நடந்த சம்பவங்கள் அனை த்தையும் விளக்கி னான்.
துருபதனும் அவன் மனைவியும் சிவபெருமான் அல்லவோ யட்சனின் மனத்திற்குள் புகுந்து இத்தகைய திருவிளையாட லை நிகழ்த்தியிருக்கிறார் என்று வியந் தார்கள். அவர்கள் சிகண்டியோடு பூஜை யறைக்குச் சென்று தரையில் விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த க்காட்சியைப்பார்த்த சிகண்டியின் ம னைவி, ஏன் இவர்கள் திடீரென்று பூஜை யறைக்குச் சென்று சிவனை வணங்குகி றார்கள் என்றறியாமல் திகைத்தாள். ஆண்மை நிறைந்த தன் கணவனின் சிவ பக்தியை நினைத்து அவள் உள்ளம் மகி ழ்ந்தது.

ஃபீ

பண்டைய கணித முறையில் ஒன்று ஃபிபனாக்கி அதன்படி பிரபஞ்சம் ஃபீ (PHI) எனப்படும் அலகுகளால் கட்ட்மைக்கப்பட்டது. அந்த ஃபீயின் மதிப்பு 1.618.
# கோபுரக் கிளிஞ்சலில் ஒரு வளையத்தின் விட்டத்திற்கும் மற்றொரு வளையத்தின் விட்டத்திற்குமான அளவு 1.618.
# சூரிய காந்திப்பூ ஒரு புறமிருந்து மறுபுறம் வளைவதன் அளவு 1.618.
# மனித உடலில் தலையிலிருந்து கால் வரை உள்ள நீலத்திலிருந்து, தொப்புளிலிருந்து கால் வரை உள்ள நீலத்தைக் கழித்தால் மீதம் கிடைக்கும் எண் 1.168.
# எகிப்தியப் பிரமிடுகள், ஐ.நா. சபைக்கட்டடம், பீத்தோவனின் ஐந்தாம் சிம்பொனி ஆகியவை எல்லாம் 1.168 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டவையே என்பது நம்பமுடியாத ஆச்சரியம்.
டாவின்சியின் 1.618 என்ற குறியீட்டை வெளிபடுத்துவதற்காகவே சனீரே இந்த போஸில் / நிலையில் மல்லாந்து கிடப்பதாக லாங்தன் புரிந்துக்கொள்கிறார். மேலும் சனீரேயின் வயிற்றின் மேல் ஒரு ஐந்து முனை நட்சத்திரமும் 1.618 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டது.
ஐந்து முனை நட்சத்திரம் என்பது கிறுத்துவ சமயம் தோன்றுவதற்கு முன்பாக பழங்குடி மக்கள் பயன்படுத்திவந்த தாய்வழிச் சமூக குறியீடு, தொன்மைக்குறியீடான அது இன்றைய ஆணாதீக்கச் சமூகத்தில் கூட மிச்ச சொச்சமாக ரகசிய மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.
# நவீன ஒலிம்பிக் சின்னத்தின் ஐந்து வளையங்கள் இந்த ஐந்து முனை நட்சத்திரத்தின் மறு உருவாக்கமே.
# அமெரிக்க ராணுவ மையத்தின் கட்டடம் ஐந்து முனைக்கட்டடமாக வடிவமைக்கப்பட்டது தற்செயலான விஷயமல்ல.

Thursday 16 August 2018

வேதாளம்

முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.

‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.

ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.

‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘

‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.

‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.

‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘

‘ம்.. ‘

‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘

‘டோண்ட் வொரி  ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘

‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘
பானு சென்று விட்டாள். அவள் எப்பவுமே இப்படித்தான். எதற்கெடுத்தாலும் தொணதொணத்தபடி.. இவளது இந்தத் தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காகவே ராமநாதன் அவள் வேலைக்குப் போகும் நேரம் பார்த்துக் காத்திருப்பான். அண்மைக் காலமாகவே ராமநாதனிற்கு பானுவை நினைத்தாலே ஒருவித வெறுப்பு வர ஆரம்பித்தது. இத்தனைக்கும் இருவரும் காதலித்து மணம் புாிந்து கொண்டவர்கள்தாம். ஏன் இவளால் ஒன்றையும் புரிந்து கொள்ளவில்லை. அவனிற்கு எவையெல்லாம்
விருப்பமாயிருந்தனவோ அவையெல்லாம் அவளிற்கு விருப்பமில்லாதவையாகவிருந்தன. எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழுகிறாள். ஆரம்பத்தில் அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலிருந்தான். அவள் மீதான மோகம் கண்ணை மறைத்திருந்தது. குடம் போன்ற அவள் உடல்வாகு அவனைக் கிறங்கவைத்திருந்தது. அவையெல்லாம் அவனிற்கு இப்போதோ அழுத்துப் போய் விட்டன. அவளது சிறுசிறு குறைகளெல்லாம் அவனிற்குப் பெரிதாகத் தெரியத் தொடங்கி விட்டன. அவளிற்கும்தான்..

மணியைப் பார்த்தான். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பானு போய் விட்டாள். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு நிறுவனத்தில் கணினி ‘கான்சல்டண்ட்‘டாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தான். காலை பத்து மணியளவிலதான் செல்வான். அதிகாலை இரண்டு மணிவரை இணையத்தில் உலாவிக் கொண்டிருப்பான். அதன் பிறகுதான் படுக்கைக்கைச் செல்வான். அவனும் பானுவும் ஒன்றாக இருப்பதெல்லாம் வார இறுதி நாட்களில் மட்டும் தான்.

அவன் இணையத்தில் நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் யாகூ மெசஞ்சர் அவனது இணையத் தோழியின் இருப்பை அவனிற்கு அறிவித்தது. அம்பிகா அதுதான் அவளது பெயர்.சாட்டில் சள் அடிக்கும் போது அப்படித்தான் அவள் கூறிக் கொள்கிறாள். அவளது உண்மைப் பெயர் எதுவோ ? யார் கண்டது ?

‘ஹாய் ஜெயாராம். ஐ ஆம் சாரி.  லிட்டில் பிட் லேட் ‘

ஜெயராம் அதுதான் அவனது இணையத்துப் பெயர். துணை தேடுவதற்கான இணையத்தளமொன்றில் அவன் தன் பெயரை அவ்விதம் பதிந்து வைத்ததன் பலனாக அறிமுகமானவள்தான் அம்பிகா.

‘நான் ஒரு கேரளத்துக்காரி. டொராண்டோவில் வேலை பார்க்கிறேன். ஜெயராம் என்னுடைய பேவாரைட் ஆக்டர். நானும் உன்னைப் போல் திருமணம் ஆனவள்தான். ஒரு குழந்தை உள்ளவள்தான் ‘ என்ற அறிமுகத்துடன் வந்தவள்தான் அவள்.

‘டோண்ட் வொர்ரி அம்பிகாக் கண்ணு ‘

முதல் நாள் சாட் முடிவதற்கிடையிலேயே அவளை அவன் ‘கண்ணு ‘ போடு அழைப்பதற்கும் அவனை அவள் ‘கண்ணா ‘ போட்டு அழைப்பதற்குமளவில் முன்னேறியிருந்தார்கள்.

‘என்ன உன் மனைவி வேலைக்குப் போய் விட்டாளா ? குழந்தை தூங்கியாச்சா ? ‘

‘நல்லவேளை போய் விட்டாள். தலைவலியென்று கூறிக் கொண்டிருந்தாள். பயந்து விட்டேன். உன்னுடைய வேலை எப்படிப் போகிறது ‘

அம்பிகா வங்கியொன்றில் இரவு வேலை பார்க்கிறவள். ஒரு பகுதிக்கு சுப்பவைசராக இருப்பவள்.

‘அவ்வளவாக பிஸி இல்லை. ‘

‘நாள் முழுக்க உன்னைப் பற்றியே நினைத்த படி ‘

‘அதிகம் அலட்டிக் கொள்ளாதே. உடம்பிற்குக் கூடாது ‘

‘அம்பிக் கண்ணு… ‘

‘என்ன கண்ணா.. ‘ ராமநாதனுக்குக் கிளுகிளுப்பாகவிருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பின்னால் இப்படியொரு காதல் கலந்த அனுபவம். இணையமே நீ வாழி.

‘நாள் முழுக்க உனக்காகவே காத்திருந்தேன்… ‘

‘நானும் தான் ராம். உன்னைப் பற்றி ஒரே நினைப்பு.. ‘

‘ராத்திரி சாட் எப்படியிருந்தது.. ‘

‘வெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி நைஸ்..உண்மையைச் சொல்லப் போனால் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் நாள் முழுக்க ‘

‘சுந்தரமான பொண்ணு.. ‘

ராமநாதன் மலையாளத் திரைப்படங்கள் சில பார்த்திருந்தான். அதன் விளைவாக ஒரு சில மலையாளச் சொற்களை அறிந்து வைத்திருந்தான். சமயத்தில் கை கொடுத்தது.

‘ ராம் நீ நல்ல பையன் ‘

‘ஐ ஆம் நாட் எ பையன் ‘

‘யேஸ் யூ ஆர் ? ‘

‘நான் குறும்பு செய்யத் தொடங்கினால் நீ தாங்க மாட்டாய் அம்பிகா ‘

‘செய் பார்ப்போம். ஐ லைக் இட் ‘

‘எடியே அம்பிகா! ‘

‘என்னடா ? ‘

‘நீ மட்டும் பக்கத்தில் இருந்தாயென்றாள்.. அப்படியே…. ‘

அவள் மெளனமாகவிருந்தாள்.

‘என்ன மெளனமா ‘

‘ம்ம்ம் ‘

‘சம்மதமா ? ‘

‘சம்மதம் தான் ‘

ராமநாதனிற்கு இறக்கைகள் கட்டிக் கொண்டு வானில் பறப்பதைப் போன்றிருந்தது. இந்த வயதில் இப்படியொரு சந்தர்ப்பமா ? அசல் காதலனாகவே மாறி விட்டான்.

சிறிது நேரம் மெளனம் நிலவியது. அதை அவளே கலைத்தாள்.

‘தூக்கமா கண்ணா ? ‘

‘தூக்கமா ? எனக்கா ? நோ. நோ. எப்படி வரும் ? ‘

‘அம்பி! ஹவ் இஸ் யுவர் மரேஜ் லைப் ? ‘

‘ —————- ‘

‘ஐ ஆம் சாரி.  உன்னை வருத்தி விட்டேனா அம்பி ? ‘

‘நோ. நோ. ஐ டோண்ட் வாண்ட் டு திங் அபெவுட் தட் ராம். ஹி இஸ் அன் அனிமல் . வாட் அபெவுட் யூ ? ‘

‘என் கதையும் உன் மாதிரிதான். சொந்தக் கதை சோகக் கதை. அது ஒரு அடாங்காப் பிடாரி. அங்கமுத்து மாதிரி ‘

‘வீ போத் ஆர் இன் எ சேம் போட் ராம் ‘

இவ்விதமாக அவர்களுக்கிடையில் 'சாட்' நாள் தோறும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. கிளுகிளுப்பும் ஆர்வமுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது. ஜெயராம் என்கின்ற ராமநாதனுக்கு மனைவி பிள்ளைகள் இருந்த போதும், இணையத்திலொரு புதுத் துணையாக அந்தக் கேரளத்துகாரி. அவளுக்கும் கணவன் குழந்தையென்று குடும்ப பந்தங்கள். தங்களது தனிப்பட்ட குடும்ப உறவுகளைக் கவனமாக பராமாரித்துக் கொண்டிருந்த போதும், இணையத்தில் இவர்கள் இருவருமே அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிற நண்பர்களாகவே இருக்கிறார்கள் ? இவர்களுக்குத் தங்களது சொந்த வாழ்க்கையில் திருப்தியில்லையா ? அப்படியில்லா விட்டால் ஏன் அவர்கள் தமக்கென்று புது வாழ்க்கையொன்றினை ஆரம்பிக்கக் கூடாது ? அல்லது தங்களது சொந்த வாழ்க்கையில் திருப்தியிருந்த போதிலும் தங்களது நிறைவேறாத ஆசைகளை இவ்விதம் தீர்த்துக் கொள்கிறர்களா ? உண்மையில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியாது உண்மையிலேயே இவன் ஒரு ஆண் தானாவென்று. இவனுக்கும் நிச்சயமாகத் தெரியாது அவள் உண்மையிலேயே ஓரு பெண்தானவென்று. இருந்தும் ஒருவருடனுரொருவர் தெய்வீகக் காதலர்களைப் போல் உரையாடுவதில் இவர்களுக்கு மகிழ்சியாகவிருக்கிறது. உரையாடுவது கூட திரையில் தோன்றும் எழுத்துருக்கள் மூலம் தான். ஆக இந்த ‘சைபர் ‘ உலகில் தோன்றும் இந்த உறவுக்கும், நிஜ உலகில் உள்ள உறவுக்குமிடையில் காணப்படும் உறவுகளுக்குமிடையிலும் ஏனிந்த விதமான வித்தியாசங்கள். இருப்பதோ இல்லாததோ என்று தெரியாத நிச்சயமற்றதொரு நிலையில்உறவுகள் இங்கே தொடர்கின்றனவே! இருந்தும் ஒரு வித கற்பனையில், கனவுலகில் அடிமைப் பட்டுக் கொண்டே நிஜ உலகில் ஒரு வாழ்வும், ‘பைனாரி ‘ உலகில் ஒரு வாழ்வுமாக ஜெயாராம் என்கின்ற இந்த ராமநாதனாலும், அம்பிகா என்கின்ற அந்தக் கேரளக்காரியாலும் வாழ முடிகின்றதே. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமெதுவுமுண்டா ? இதற்கொரு முடிவுதானுமுண்டா ? சொல்! சொல்! ராமநாதா! தெரிந்ந்திருந்தும் சொல்லாவிட்டாலோ உன் மண்டை தூள்.
இவ்விதமாகக் கதையினைக் கூறிய வேதாளம் கேள்வியையும் கேட்டு நிறுத்தியது.

ஒரு கணம் சிந்தித்த விக்கிரமனுக்குத் தலை சுற்றியது. ஆனால் சிறிது சிந்தித்த போது சைபர் உலகிற்கும் நிஜ உலகிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையேயென்று பட்டது. எனவே அவன் வேதாளத்தைப் பார்த்துப்

பின்வருமாறு கூறத் தொடங்கினான்:

‘வேதாளமே! நாம் வாழும் இந்த வாழ்க்கை கூட ஒரு விதத்தில் இது போல் தானே. நாம் பார்க்கின்ற அறிகின்ற இந்த உலகு பற்றிய தோற்றமெல்லாமே எமது கண்களால் உள்ளெடுக்கப் பட்டு மூளையில் மின் துடிப்புகளாகப் பதியப் பட்டு தரப்படும் பிம்பங்கள் தானே. உண்மையிலேயே இந்த உலகு பற்றிய நமது உணர்வுகள் எல்லாமே எம்மூளையின் வெளிப்பாடுகள் தாமே. ஆக உண்மையிலேயே இவையெல்லாமுண்மையா என்பது கூட எமக்குத் தொியாது. இந்நிலையில் நாம் உண்மையாகக்
கருதிக் கொண்டு வாழவில்லையா ? அது போல் தான் இந்த ஜெயராம் என்கின்ற ராமநாதனின் கதையும். இருப்பின் உண்மை தொியாத நிலையேலேயே நாம் அனைவரும் வாழ்வதைப் போல் தான் இவனும் இந்த சைபர் உலகில் வாழப் பழகிக் கொண்டான். இதிலென்ன அதிசயமிருக்கு! ‘

இவ்விதம் விக்கிரமன் கூறிய பதிலில் தொக்கி நின்ற தர்க்க நியாயம் வேதாளத்திற்கும் சாியாகவே பட்டது. எனவே அது மீண்டும் முருங்கையிலேறிக் கொண்டது.