Wednesday 17 January 2018

ததாஸ்து

ததாஸ்து
‘ததாஸ்து’ என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தமிழில் “அப்படியே ஆகட்டும்” என்று அர்த்தம்.
நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் பல தேவதைகள் நின்றுகொண்டு, எப்போதும் ‘ததாஸ்து’ என்று சொல்லிக்கொண்டே இருக்குமாம்!.
உதாரணமாக, ‘அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல வேண்டும்’ என்று நான் நினைத்தால் உடனே தேவதைகள் ‘ததாஸ்து’ என்று சொல்லுமாம். இதை எழுதும் போதே எத்தனை சந்தோசம்! நடந்தால் நல்லது தானே!!
அதனால் தான் நம் பெரியவர்கள்,
“நல்லதையே நினை”
“நல்லதையே பேசு”
என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியானால், கெட்டதை நினைத்தாலும் ‘ததாஸ்து’ என்று தானே தேவதைகள் சொல்லும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு முன்னதாக, ஒரு அறிவியல் உண்மையை சொல்கிறேன்.
“positive Attitude, Meditation என்றெல்லாம் படித்திருப்பீர்கள் தானே! அதாவது நம் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கேற்ப நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் மின்காந்த எண்ண அலைகள் உருவாகின்றன. அந்த அலைகளே நம் எண்ணங்களுக்கேற்ப நம்மை வழி நடத்துகின்றன”. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை!
இப்போது கெட்டது நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்:
பக்கத்து வீட்டுக்காரர் நாசமாய் போகவேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தேவதைகளும் வழக்கம் போல ‘ததாஸ்து’ என்று சொல்லும். உடனே இந்த கெட்ட எண்ண அலைகள் அந்த பக்கத்து வீட்டுக்காரரை நோக்கிச் செல்லும். பக்கத்து வீட்டுக்காரரோ , ” தினமும் கடவுளிடம், நான் நன்றாக வாழவேண்டும்” என்று வேண்டுபவர். எனவே, அவரைச் சுற்றி நல்ல எண்ண அலைகள் தேவதைகளுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.
கெட்ட எண்ண அலைகள் பக்கத்து வீட்டுக்காரரை நெருங்கும் சமயம், அவரின் நல்ல எண்ண அலைகள், இந்த கெட்ட எண்ண அலைகளை அடித்துத் துரத்தும். விரட்டப்படும் கெட்ட எண்ண அலைகள் தன்னை உருவாக்கியவரிடமே திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளும்.
அப்புறமென்ன! “நாசமாய் போகவேண்டும் ” என்ற இந்த கெட்ட எண்ண அலைகள் உருவாக்கியவரையே ஒரு வழி பண்ணிவிடும்.
“எண்ணம் போல வாழ்வு” என்று நம் முன்னோர்கள் சொன்னது எத்தனை உண்மை!
அதனால், நல்லதையே நினைபோம்! நல்லதே நடக்கும்!!

No comments:

Post a Comment